Showing posts with label சிந்தனைதுளிகள். Show all posts
Showing posts with label சிந்தனைதுளிகள். Show all posts
காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...
காலை தேநீர்...
அழிந்து வரும் நம் தமிழ் அன்னையை காக்க வேண்டி,
ஒன்று திரண்டுள்ள நமது இனிய தமிழ் பதிவர்களை, தொழிற்களம் காலை தேநீர், இரு கரம்
கூப்பி தேநீரை சுவைக்க அழைக்கிறது. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
- நீ மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால், திறந்த மனதோடு பேசு அதற்காக கொட்டித் தீர்த்து விடாதே.
- இதயத்தை ஆயுதத்தால் வெல்ல முடியாது, மென்மையான அன்பால் தான் வெல்ல முடியும்.
- நல்ல விஷயங்களை அமைதியாகச் செய், வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டு பேசட்டும்.
- நல்ல எண்ணமும் மகிழ்ச்சியும் இருந்தால் யானையை நூலால் கட்டிக் கொண்டு போவது போல எங்கும் போய் வரலாம்.
- உன்னை நீ அறிய வேண்டுமானால் மற்றவர்களை கவனி; மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி.
நன்றி,
என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...
காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...
காலை தேநீர்...
உறங்கிக்
கிடக்கும் நமது உணர்வலைகளுக்கு, உயிர் ஊட்டும் நமது தமிழ் புரட்சிப்
பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்...
இன்றைய தேநீர் துளிகள்..
- தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை, காலால் நடப்பதற்கு பதிலாக, தலையால் நடப்பதைப் போன்றது...
- புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி, அது உலகம் எங்குமே ஒலிக்கிறது...
- வேகமாக உயர்வது அல்ல பெரியது, எப்போதுமே உயர்ந்தபடி இருப்பது தான் பெரியது...
- பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்ப்பதால், நம்முடைய துன்பங்களை சகிக்க கற்றுக்கொள்கிறோம்...
- மனிதனின் ஆசைக்கு அளவில்லை, அவன் ஆற்றலுக்கும் எல்லை இல்லை...
நன்றி
என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...
- Do you wanna promote your business through online marketing?, Contact: 9566661215 Website: Makkasanthai.com
Get Your Online Business
- Promote your online business, be popular among a competitors, and increase your business traffic Contact: 9566661215 Website: Makkasanthai.com
Brand Promotion
காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...
காலை தேநீர்...
தமிழனாய் பிறந்ததில் பெருமைக்கொள்ளும், நமது இனிய
தமிழ் படைப்பாளிகளுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் இனிய காலை வணக்கம்....
இன்றைய தேநீர் துளிகள்...
- கலவையை விட மிகவும் கொடியது, ஒருவனிடம் உள்ள சந்தேகமே...
- எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித் தான் வாய்ப்புகள் அதிகம் வரும்....
- கொடுக்கும் கொடையை விட, கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது...
- எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அதற்கு முதல் தேவையாக இருப்பது தன்னம்பிக்கைதான்...
- விதியின் பலன் இல்லையென்றாலும்,முயற்சியின் பலன் கட்டாயம் உண்டு...
நன்றி...
என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...
காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...
காலை தேநீர்...
சிந்தனையில் பல விந்தைகள்
படைத்துக்கொண்டிருக்கும் நமது இனிய தமிழ் பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின்
இனிய காலை வணக்கம்....
இன்றைய தேநீர் துளிகள்...
* உன் கடமையை செய்ய முற்படு, அப்போது உன் தகுதியை அறிந்து கொள்வர்...
* சாக்குப்போக்குச் சொல்லாதீர், அது உங்களை நீங்களேஏமாற்றிக்கொள்ளும் வழியாகும்...
*அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதை விட, புத்திசாலியான விரோதியை அடைவது மேல்...
* கவலையை விட மிகவும் கொடியது, ஒருவனிடம் உள்ள சந்தேகமே...
* எதிர்பார்ப்பே இல்லாவிட்டால் ஏமாற்றத்திற்குஅவசியம் இல்லை...
நன்றி...
என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...
மகான் ! காந்தி மகான் ! -(ஒரு தொகுப்பு)
காந்தி மகானுக்கு பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.
இன்று தேசத் தந்தை காந்தியடிகளின் 141வது பிறந்த நாள். அவரை சிலருக்கு
பிடிக்கும் ,சிலருக்கு பிடிக்காது.அவர் நல்லவரா? கெட்டவரா? என்று என் நன்பர்கள்
பலருடன் நான் விவாதித்திருக்கிறேன்
அவர் நல்லவரா ?
கெட்டவரா ? என்று எனக்கு தெரியாது....
ஆனால்
அவர் நிச்சயம் மகாத்மா என்பதை நான்
உறுதியாக கூறுவேன்.
அவரை பற்றிய சில தகவல்களை இன்று நாம் தெரிந்து
கொள்வோம்.இத்தொகுப்பு ஆனந்த விகடன் வெளியிட்டது.,இன்று இதை உங்களோடு பகிர்ந்து
கொள்வதில் மகிழ்கிறேன்.
மகாத்மா காந்தி - 25
- காந்தி, அரிச்சந்திரனின் ரசிகர். சத்திய சோதனையாளர். அரையாடைப் பக்கிரி, அகிம்சைப் போராளி!
- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக 1869 அக்டோபர் 2-ல் பிறந்தார். மகாத்மா காந்தியாக 1948 ஜனவரி 30-ல் மறைந்தார். காந்தியின் பிறந்தநாள் உலகம் எங்கும் சர்வதேச அகிம்சை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது!
- காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி தேசிய விடுமுறை, குடியரசு தினம், சுதந்திரம் தினம் ஆகியவை மற்ற இரண்டு விடுமுறைகள்!
- முதன்முதலில் `தேசத் தந்தை’ என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், `மகாத்மா’ என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்!
- காந்தி தொடங்கிய `இந்தியன் ஒப்பீனியன்’ குஜராத்தி. இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது!
- தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர்தான் `ஹரிஜன்’ என்பது , அதன் பொருள், `கடவுளின் குழந்தைள்’!
- `உடற் பயிற்சியின் அரசன் நடைப் பயிற்சி’ என்று சொன்ன காந்தி, லண்டனில் சட்டம் பயிலும்போது, ஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று காசை மிச்சப்படுத்திப் படித்தார்!
- காந்தி ஒரு துறவியைப் போன்றவர்தான், அனால், அவரிடம் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை. 1931-ல் லண்டனுக்குச் சென்றபோது, பிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தார் காந்தி. ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோது, அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒருவர், இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா’ என்று கேட்டார். `எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து மன்னரே அணிந்திருந்தார்’ என்று பதில் அளித்தார் காந்தி!
- வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது, காந்தி சொன்ன வாக்கியம்தான்..... `செய் அல்லது செத்து மடி!’
- கொள்கை இல்லாத அரசியல் வேலை செய்யாமல் வரும் செல்வம், மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம், பண்பு இல்லாத அறிவு, நியாயம் இல்லாத வணிகம், மனிதம் மறந்த அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு’. இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள்!
- தபால் அட்டைகள்தான் உள்ளதிலேயே மிகவும் சிக்கனமான தகவல் தொடர்புச் சாதனம் என்று கருதியவர் காந்தி’!
- கடிதங்கள் மிக நேர்த்தியாக மடிக்கப்பட்ட பின்பே உறையில் இட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார். காரணம், கடிதம் மடிக்கப்பட்டு இருக்கும் முறையிலேயே உங்களைப்பற்றிய அபிப்ராயம் தோன்றிவிடும் என்பார்!’
- யாருக்குக் கடிதம் எழுதினாலும் `தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்’ என்று எழுதியே கடிதத்தை முடிப்பார்!
- கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார். எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும், உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார். அதை அவரும் கடைப்பிடித்தார்!
- ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்கொண்டவராக இருந்தார். அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது!.
- `சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று வெள்ளையர்கள் சொன்னபோது, அதற்கு காந்தி, தன் 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். அதில் 11-வதாக இருந்த திட்டம், `சுய பாதுகாப்புக்குத் தேவையான வெடி பொருட்களையும் ஆயுதங்களையும் தயாரித்துக்கொள்வதற்கான உரிமம் வழங்குதல்.’ அகிம்சையைப் போதித்தவருக்குள் எப்படி இந்த எண்ணம் உதித்தது என்பது இன்று வரை பலரின் கேள்வி!
- எந்த நிலையிலும் ஆங்கிலேயரை உடல் அளவில் காயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. `நாம் அவர்களை எதிர்த்துப் போராடவில்லை. அவர்கள் நம் மீது திணிக்கும் அதிகாரத்தைத்தான் எதிர்க்கிறோம்’ என்று அதற்கு விளக்கமும் அளித்தார்!.
- தான் தவறு செய்தால், அதற்காக மெளன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால், அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார். இந்த குணம், அவர் தாய் புத்தலிபாயிடம் இருந்து வந்ததாகும்!.
- ஆரம்ப காலங்களில், ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிராத்தனைக் கூட்டங்களில், `கடவுள் உண்மையானவர்!’ என்று சொல்லிவந்தார். விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, `உண்மையே கடவுள்’ என்று மாற்றிக்கொண்டார்!.
- இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு எது தெரியுமா? அவர் தன் வாழ்நாளியில் மிதிக்காத நாடான அமெரிக்காதான் அது. இது நடந்தது 1961 ஜனவரி 26-ல்!.
- ராட்டைச் சக்கரத்துக்கு முன் காந்தி அமர்ந்து இருப்பதுபோல இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம், மார்கேட் பூர்க் ஒயிட் என்பவரால் பிரபல லைஃப் இதழுக்காக எடுக்கப்பட்டது!.
- `என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு’ என்று காந்தி அழைத்து வினோபா பாவேவைத்தான்!.
- மார்டின் லூதர்கிங், தலாய் லாமா, ஆங் சான் சூகி, நெல்சன் மண்டேலா,அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம், காந்திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஆனால், காந்திக்கு நோபல் பரிசு தரவில்லை!.
- இந்தியா சுகந்திரம் அடைந்தபோது, அதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் காந்தி, இன்னொருவர் தந்தை பெரியார்!.
- போர்பந்தரில் பிறந்த காந்தி ஆரம்பித்த சபர்மதி ஆஸ்ரமத்தின் நினைவாகத்தான் `சபர்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில் விடப்பட்டது.ஆனால், 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தில் இந்த ரயில் எரிக்கப்பட்டு, குஜராத் கலவரத்துக்கு வித்திடப்பட்டது.காலத்தின் முரண்களில் இதுவும் ஒன்று!.
- `கனவில் இருந்து நிஜத்துக்கு, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, மரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு!’- காந்தி நினைவு மண்டபத்தில் எழுதிவைக்கப்பட்டு இருக்கும் வாசகம் இது!.
பிதாவே! உமக்கு எம் பிறந்த நாள்
வாழ்த்துக்கள்..
காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...
காலை தேநீர்...
ஜில் என்ற காலை வேலையிலே, சில்லென்ற காற்று வீச,
அளவான சுவையில், இதமாக தேனீரை பருக வாருங்கள் பதிவர்களே....
இன்றைய சிந்தனை துளிகள்...
- முட்டாளின் தோழமையை விட, ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேல் ...
- ஆசை பேராசையாக மாறும்போதும், அன்பு வெறியாக மாறும் போதும், அங்கே அமைதி நிற்காமல் விலகிச் சென்று விடும்...
- அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம்,அந்த அறிவைப் பெற ஒன்றே ஒன்றுதான் தேவை, அது ஒழுக்கம்...
- பலவீனமானவர்களின் வழியில் தடைக்கல்லாய் இருப்பது, பலமுடையவர்களின் வழியில் படிக்கல்லாகவே இருக்கும்...
- ஒருவனின் தன்னம்பிக்கையும், சுய ஒழுக்கமுமே அவனது அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்கும்...
என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...
காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...
காலை தேநீர்...
புதுப்பொழிவுடன் பல புதுப்புது
படைத்துக்கொண்டிருக்கும் நமது இனிய தமிழ்
பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் காலை
வணக்கங்கள்...
இன்றைய சிந்தனை துளிகள்...
- பழிவாங்குதல் என்பது, அற்பர்கள், அற்ப ஆனந்தம் காணும் செயலாகும்...
-ஜீவனல்
- சிக்கனமாக இருங்கள், ஆனால், கருமியாகி விட வேண்டாம்...
-மாத்யூக்ரீன்
- மவுனம் என்னும் மரத்தில், அமைதி என்னும் கனி தொங்குகிறது...
-டெஸ்கார்டில்
- உழைப்பை மட்டும் விற்கலாம், ஒருநாளும் ஆன்மாவை விற்கலாகாது...
- ரஸ்கின்
- நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, தீமை செய்வதை நிறுத்துங்கள்....
நன்றி...
என்றும் உங்களுடன்,
தொழிற்களம் குழு...
காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...
காலை தேநீர்...
நமது இனிய தமிழ் பதிவர்கள் அனைவருக்கும்
தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கம்...
இன்றைய சிந்தனை துளிகள்...
- ஒருவனின் தன்னம்பிக்கையும், சுய ஒழுக்கமுமே அவனது அதிர்ஷ்டத்தைத் தீர்மானிக்கும்...
- உதிரும் பூவாக இல்லாமல், அதைச் சுமக்கும் செடியாக இருப்பவன் தான் நண்பன்...
- செல்வந்தர்கள் பணத்தால் உபசரிக்கின்றனர், ஏழைகள் இதயத்தால் உபசரிக்கின்றனர்...
- சிறப்பு என்பது, பலத்தைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது...
- ஒருவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால், முதலில் அவன் தன்னைத்தான் நம்ப வேண்டும்...
என்றும் உங்களுடன்,
தொழிற்களம்...
காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...
காலை தேநீர்...
சத்தம் இன்றி ஒரு யுத்தத்தையே நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம், நம் தாய்மொழியாம் தமிழதனை அழிந்துவிட விடமாட்டோம்...
நமது அருமை தமிழ் பதிவர்களுக்கு இனிய காலை
தேநீரின் காலை வணக்கங்கள்...
தேநீரை பருகி இன்றைய நாளை நல்ல சிந்தனையுடன் தொடங்க வாழ்த்துக்கள்...
- தன்னைத்தானே புகழ்கிறவன், மறைமுகமாக பிறரை இகழ்கிறான்...
- நீ பார்க்கும் தொழில் எதுவாக இருந்தாலும் நேசி, தொழில் தர்மம் மீறாதே...
- நீ நல்லவன்....நீ நல்லவன் என்று பலமுறை சொன்னால், கெட்டவனும் நல்லவனாக நடக்க முயற்சிப்பான்...
- சாதித்து முடிக்கும் வரை குறைவாகவே பேசு, பேச்சு அதிகமானால் ஆற்றல் குறையும்...
- பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லைதான், ஆனால், பணமே வாழ்க்கை ஆகிவிடாது...
நன்றி...
என்றும் உங்களுடன்...
நமது தொழிற்களம்...
காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...
காலை தேநீர்...
வாசகர்கள் உள்ளத்தை கொள்ளைகொண்ட எமது அருமை தமிழ்
பதிவர்களுக்கு தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கம்...
ஒன்றும் அறியா பார்வையாளனாய்
தொழிற்களம் படித்தேன்...
இன்று சுயதொழில் செய்பவனாய்
தனி பதிவு எழுதி ஏழ்மையை வென்றேன்...
தேனீரை பருக வாருங்கள்...
- குணம் பார்த்து பழகு, நிறம் பார்த்து பழகாதே...
- குழப்பத்தில் இருக்கும் போது எந்த ஒரு முடிவையும் எடுக்காதே...
- அனைவருக்கும் கிடைக்கும் பரிசு, ஆண்டவன் கொடுக்கும் பரிசு - குழந்தை...
- மனிதனாய் பிறப்பது பெரிதல்ல, மனிதநேயத்துடன் வாழ்வது தான் சிறந்தது...
- ஏழைக்கு உணவு அளிப்பதைவிட, கல்வி அளிப்பதே அவனது வாழ்கைக்கு உதவும்...
என்றும் உங்களுடன்,
நமது தொழிற்களம்...
காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...
காலை
தேநீர்...
கனவு ஒன்று கண்டேன் நேற்று...
அதிலே தேவதைகள் வந்தனர்...
இந்திரனும், சந்திரனும் பூலோகம் வருகிறார்களாம்...
நம் தமிழ் பதிவர்களின் பதிவை படிக்க...
கூடிய விரைவில் இந்திரலோகத்திலும்,
ஒரு இணையதளத்தை ஏற்படுத்த எண்ணமாம்...
செந்தமிழிலே
பதிவுகள் எழுதி அனைத்து மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட நமது இனிய தமிழ்
பதிவர்களுக்கு, தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கங்கள்...
இன்றைய சிந்தனை துளிகள்...
- மனதிற்குள் இருக்கும் வரை மகிழ்ச்சி கூட சுமை தான், வெளிபடுத்தும் போது வேதனை கூட சுகம் தான்..
- மன்னிக்கத் தெரியாதவன் மனதில் குழப்பமும், பகையுமே மிஞ்சி இருக்கும்
- பகை தேடிக் கொள்ளும் மனிதன், ஆபத்தை விரும்பி வரவேற்கிறான்...
- அன்பு, அறிவு இரண்டும் உன்னிடம் சேர்ந்தால், எல்லா வெற்றியும் உன் காலடியில்...
- பெற்ற அறிவு தனக்கு மட்டும் பயன்பட்டால் போதாது, அது உலகுக்கும் பயன்பட வேண்டும்.
ரசனைக்கு சில...
பிடிச்சிருக்க...
உங்களிடம் இருந்து விடைபெறுவது நமது தொழிற்களம்....
காலை தேநீர் - இன்றைய சிந்தனை துளிகள்...
காலை
தேநீர்...
புதுப்புது பதிவுகள் மூலம் புது உலகையே படைத்துக்கொண்டிருக்கும் நமது இனிய தமிழ் பதிவர்கள் அனைவருக்கும், தொழிற்களம் காலை தேநீரின் காலை வணக்கங்கள்...
ஓசையில்லாமல் இசைபாடும் நம் இதயத்திற்கு, சில உற்சாக தேநீர் பானம் இதோ...
- எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்கு தெரிவதில்லை, எனவே தோல்வியை தழுவுகின்றனர்...
- ஆசை இருப்பவனிடம் ஆனந்தம் மற்றும் அன்பும் தங்குவதில்லை...
- தனக்காக மட்டும் வாழ்கின்ற மனிதன், மனிதர்களில் மிகவும் கேவலமானவன்...
- புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே!! அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும்...
- உலகில் பேசிக்கொள்ள ஆயிரம் மொழிகள் இருந்தாலும், நாம் பேசிக்கொள்ள அன்பு மொழி போதும்...
ரசனைக்கு சில....