பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

பறக்குது..பறக்குது..பணம்...


பறக்குது..பறக்குது..பணம்...

மின்கட்டண உயர்வு..பால், பேருந்து கட்டண உயர்வு, பெட்ரோல்/டீசல் விலை உயர்வு, வாடகை உயர்வு
..அடேங்கப்பா..

ஆனாலும் 28 ரூபாய் செலவு செய்யறவன் வறுமைக் கோட்டிற்குள் அல்ல..

என்ன உலகமடா..இது....

'இரும்புத்திரை' படத்தில் பட்டுக்கோட்டையார் எழுதிய இப்பாடல் தான் நினைவிற்கு வருகிறது..இதில் சில வரிகள் மாற்றப்பட்டால்/சேர்க்கப்பட்டால் இன்றைய நிலைக்கும் பொருந்தும். தீர்க்கதரிசி அந்தக் கவி.


கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்கும் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் _ வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே…)

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே _ அது
குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே…)

விதவிதமாய்த் துணிக இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு -அண்ணே        -எதை
எண்ணமிருக்கு வழியில்லே _ இதை
எண்ணாமிலிருக்கவும் முடியல்லே (கையிலே…)

கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு _ அண்ணே
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே…)

நிகழ்வு- வறுமைக்கோடு

புதன், 21 நவம்பர், 2012

அறிந்துக்கொள்ள வேண்டிய மனித உடலின் அதிசயங்கள்நமது மனித உடலில் கணக்கில் அடங்காத விந்தைகளும் ஆச்சரியங்களும் நிரம்பி பின்னி பிணையப்பட்டுள்ளது. நம் உடல் இறைவனின் அற்புத படைப்பாகும்.  இதில் உள்ள சில அதிசயங்களை பார்ப்போம்.

படம் நன்றி : கூகுள்

01. மனித நாக்கில் உள்ள சுவை அரும்புகளின் சராசரி வாழ்நாள் 08 முதல் 10 நாட்கள் மட்டுமே. மனிதனது  நாக்கு  9  ஆயிரம்  சுவை  மொட்டுக்கள்  கொண்டது.   உப்பு, சர்க்கரை,  புளிப்பு,  கசப்பு ஆகிய  நான்கு   சுவைகளை  மட்டுமே  நாக்கு  அறிந்துகொள்ள முடியும்.