பக்கங்கள்

புதன், 21 நவம்பர், 2012

அறிந்துக்கொள்ள வேண்டிய மனித உடலின் அதிசயங்கள்



நமது மனித உடலில் கணக்கில் அடங்காத விந்தைகளும் ஆச்சரியங்களும் நிரம்பி பின்னி பிணையப்பட்டுள்ளது. நம் உடல் இறைவனின் அற்புத படைப்பாகும்.  இதில் உள்ள சில அதிசயங்களை பார்ப்போம்.

படம் நன்றி : கூகுள்

01. மனித நாக்கில் உள்ள சுவை அரும்புகளின் சராசரி வாழ்நாள் 08 முதல் 10 நாட்கள் மட்டுமே. மனிதனது  நாக்கு  9  ஆயிரம்  சுவை  மொட்டுக்கள்  கொண்டது.   உப்பு, சர்க்கரை,  புளிப்பு,  கசப்பு ஆகிய  நான்கு   சுவைகளை  மட்டுமே  நாக்கு  அறிந்துகொள்ள முடியும். 

02. மனிதனுடைய இதயத்தின் எடை 100 கிராமாகும்.

03. மனித தொடை எலும்பானது அனைத்து எலும்பை விட மிகவும் கடினமானது. இவை கட்டிடத்தின் கான்கீரிட்டை விட பலமானது.

04. குழந்தைகளின் வளர்ச்சியானது வசந்த காலங்களில் அதிகமாக இருக்கும்.

05. சராசரி இருமல் ஒரு மணி நேரத்திற்கு 60 மைல்கள் (96.5 கிமீ) நமது  வாயில் இருந்து வரும்.

06. நமது உடலில் உள்ள பாகங்களில் காதுகள் மற்றும் மூக்கு நமது வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருக்கும்.

07. நமது உடலில் உள்ள கணையமானது இன்சுலினை சுரந்து நமது உடலில் உள்ள சக்கரையின் அளவை கட்டுக்குள் வைகின்றது. இது இன்சுலினை சுரக்காத போதுதான் உடலில் சக்கரையின் அளவு கூடுகிறது.

08. பெண்கள், ஆண்களை விட இரு மடங்குஅதிகமாக கண்களை சிமிட்டுகின்றனர்  (மூடி திறப்பது).

09. ஒரு சராசரி மனிதனின் உச்சந்தலையில் சுமார் 1,00,000 முடிகள் உள்ளன.

10. ஒரு நாளில் ஒரு சராசரி மனிதன் 23040 மூச்சை சுவாசிகின்றான்.

11. நமது மனித குடல் சராசரி மேற்பரப்பு 656 சதுர அடி (200 மீ).

12. ஆரோக்கியமான மனித உடலில் சுமார் 80% நீரினால் நிரம்பியுள்ளது.

13. நமது கண்கள் பிறந்த போது இருந்த அளவில்தான் வளர்ந்த போதும் இருக்கும் அளவில்  மாற்றம் இருக்காது .

14. ஒரு சராசரி  மனிதனின் ஆயுட்காலம் என்பது  நிலநடுக்கோட்டை சுமார் 5 முறை சுற்றி வருவதற்கு சமமாகும்.

15. ஒவ்வொரு ஆண்டும் நமது  உடலில் உள்ள அணுக்கள் 98% இடமாற்றம் செய்யப்படுகின்றன.

16. மனித உடலில் உள்ள தோல்களில் சுமார் 72 கி.மீ அளவிலான நரம்புகள் பின்னி பிணையப்பட்டுள்ளன

17.மனிதனில்  தைராய்டு குருத்தெலும்பு என்பது பொதுவாக குரல் வளையில்தான்  அறியப்படுகிறது.

18. நாம் தும்பும்போது நமது உடலில் இருதயம் உட்பட உடலில்  உள்ள அனைத்து பாகங்களும் நின்றுவிடும்.

19. ஒரு சராசரி மனிதனின் இதயம்  அதன் வாழ்நாளில் சுமார் 3,000 மில்லியன் முறை துடிக்கின்றது(Beat) மற்றும் சுமார் 48 மில்லியன் கேலன்கள்(Gallons) அளவு இரத்தத்தை பம்ப் செய்கின்றது.

20. நமது நாவில் உள்ள மொட்டின் சராசரி வாழ்நாள் சுமார் 10-12 நாட்கள் தான்.

21. பிறந்த குழந்தைகளுக்கு முழங்கால் முட்டி தொப்பி இருப்பத்தில்லை, இவை இவர்களுக்கு 2 முதல் 6 ஆண்டுகள் ஆகும் வரை இவை தெரிவித்தில்லை.

22. பிறந்த குழந்தையின் உடலில் சுமார் 300 எலும்புகள் உள்ளன அவர்கள் வளர்ந்த பின்னரே சில எலும்புகள் ஒன்றுசேர்ந்து 206 ஆக குறைகிறது.

23. மிக சிறிய அளவுள்ள  பிட்யூட்டரி சுரப்பி தான் நமது உடலினை பெருமளவு கட்டுபடுத்துகிறது.

24. நமது மூளையின் அளவு சுமார் 1 1/4 கிலோ ஆகும்.

25. தாய்ப்பாலில் உள்ள ஹேம்லெட் என்ற பொருள் தான் 40 வகையான புற்று நோயினை குணப்படுத்தகூடியது என தற்போது கண்டறிந்துள்ளனர். 


26. மனித உடலில் உள்ள ராஜ உறுப்புகள் என்பது 1. மூளை, 2. இதயம், 3. சிறுநீரகம், 4. நுரையீரல், 5. கல்லீரல் இவற்றில் ஏதாவது ஒன்று செயலிழந்தாலும் மனிதனின் உயிருக்கு ஆபத்தை உருவாக்கும். 

27. மனித உடலில் எலும்புகள் இல்லாத உறுப்புகள் 01.நாக்கு 02.மலவாய்    
     03.ஆண்குறி. 

28. மனித உடலில் உள்ள நாக்கு எலும்புகளே  இல்லாமல் தானாக அசையும் உறுப்பு மற்றும் இவை சுவையை அறிய சுமார் 10000 சுவை மொட்டுகளை பெற்றுள்ளன.இவற்றின் நீளம் சுமார் 10 செ.மீ ஆகும்.

29.மனித உடலில் உள்ள குரோமோசோம்களில் ஒன்றை நீட்டினால் வான் வரை நீளுமாம். 

30. ஒரு ஆணிடமிருந்து ஒருமுறை வெளிப்படும் விந்துவில் பல லட்சம் விந்தணுவானது வெளிப்பட்டாலும்   ஒரு விந்தணு மட்டுமே கருவாக மாறும்.

31. மனித உடலில் உள்ள சுரப்பிகளில் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.

32. மனிதன் இறந்தபின்  3 நிமிடம் கழித்துதான் இரத்த ஓட்டமானது நிற்கின்றது, அது வரை அவை செயல்பட்டுகொண்டுதான் உள்ளன.

33. மனிதனின்  சிறுநீரில் நீரின் அளவு 96%, யூரியா 2%, மற்றவை 2 % என கலந்துள்ளது.

34. மனித உடலில் உள்ள நகங்களில் கெராடின் என்ற சத்து உள்ளது. விரல் நகங்களை வைத்தே அனைத்து விதமான நோய்களையும் அறிய முடியும். 

35. நமது  உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்றிவர  64 வினாடிகள், இதயத்திலிருந்து புறப்பட்டு இதயத்தை மீண்டும் அடைய 30 வினாடிகள் ஆகின்றன. 

36. சுமார் 70 கிலோ  எடையுள்ள சராசரி மனிதனின் உடலில் 65% ஆக்சிஜனும் மற்றவை 35% உள்ளன. 

37. மனித முடி வளர பயன்படும் அதே வேதிப்பொருள்தான்  விரல்நகங்கள் வளரவும் பயன்படுகிறது.

38. ஆண்களின் மூளை அளவு பெண்களின் மூளை அளவைவிட பெரியது.

39.  மனித உடலில் உள்ள சுரப்பிகளில்  கணையம் வயிற்று பகுதியிலும், பிட்யூட்ரி சுரப்பி மூளை அடிப்பகுதியிலும், தைராய்டு கழுத்திலும், அட்ரினல் சிறுநீரக பகுதியிலும் அமைந்துள்ளன.

40.  ஒரு  நிமிடத்திற்கு 16 முதல் 18 வரை சுவாசிகின்றோம். ஒரு முறை சுவாசிப்பதற்குள் 3 அல்லது 4 முறை இதயம் துடிக்கின்றது.

41. மனிதனின் உடலில் உள்ள  முதுகுதண்டில் 32 இணைப்புகள் உள்ளன. 

42. நம் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் நம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது. நமது வாயில் 40000 பாக்டீரியாக்கள் இருக்கின்றன.மொத்த
பாக்டீரியாக்களின் எடை 4.4 lbs ஆகும்.

43. மூக்கின்  உட்புறத்தில்  எபிலிதியல்  என்ற  திசுவில்   10   ஆயிரம்   நிசப்பட்டர்   என்ற   செல்கள்   உள்ளன. இந்த  செல்களால்தான்   நாம்   துர்நாற்றத்தையும்   நறுமணத்தையும்  உணர  முடிகிறது. 

44. மனிதனால் மொத்தம்   ஏழு  வகையான   வாசனைகளை  மட்டுமே  உணர  முடியும்.  மற்ற  வாசனைகள்  எல்லாம்  இந்த   ஏழும்  சேர்ந்த  கலவைதான்.

45. இரத்தம் உறைய ஆகும் நேரம் 2-5 நிமிடங்கள்

46. கர்ப்ப காலம் - 9 மாதங்கள் ( 253 - 266 நாட்கள் )

47. உடலின் சிறிய தசைகள் - ஸ்டேட்பிட்ஸ் ( காதில் உள்ளது )

48. சாதாரண நிலையில் இரத்த அழுத்தம் -120/80மி.மீ. Hg பாதரசம்.

49. மனித மூளை என்பது செரிப்ரல் ஃப்லூயிட்(cerebral Fluid) என்ற திரவத்தில் மிதந்து கொண்டுள்ளது. மனித மூளையானது வலது பக்க மூளை இடதுபக்க கை,கால் போன்ற உறுப்புகளையும், இடது பக்க மூளை வலதுபக்க உறுப்புகளை கட்டுப்படுத்துகிறது.

50.சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றன. உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன. மனிதுக்கு மட்டுமல்லாது மிருகத்திடமும் இந்த சிரிப்பு காணப்படுகிறது. 

இவை அனைத்தும் பல்வேறு புத்தகங்கள் மற்றும் இணைய உதவியுடன் தொகுக்கப்பட்டது. இவை பலரால் அறியபட்டிருந்தாலும் புதியவர்கள், சிறுவர்கள்  போன்றவர்களுக்கு உதவியாக இருக்குமென பதியப்பட்டுள்ளது.


நன்றியுடன் 

நா சுரேஸ்  குமார் arivu-kadal. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக