பக்கங்கள்

சனி, 30 மார்ச், 2013

தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா - Gulf of Mannar Marine National Parkபல உயிரினப் பூங்காக்களுக்கு சென்றிருப்போம்! கடல் வாழ் உயிரினப் பூங்காவுக்களுக்கு என்றாவது சென்றதுண்டா? ஆம் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவில் தமிழக சுற்றுலாத் துறையும் வனத்துறையும் இணைந்து கடல் வாழ் உயிரினப் பூங்காவை உருவாக்கியுள்ளன. அதைப் பற்றி இன்று பார்ப்போம்.  

பாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridgeதமிழகத்தின் பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தப் பாலம். 1914 ஆம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்தில் மொத்த நீளம் 2.3 கி.மீ. 
பழைய புத்தகங்களின் படி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஷத்திரிய

புதன், 13 மார்ச், 2013

சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !


சவால்களை எதிர்கொண்டால் சாதிக்கலாம் !

சிக்கல்கள் இல்லாமல் சிகரத்தை அடைந்தவர்கள் யாருமில்லை. சரித்திரம் படைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பல சோதனைக் கதைகள் இருக்கின்றன. வெற்றியை விரும்பும் இளைஞர்கள் எத்தகைய சவால்களையும் சந்திக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

திங்கள், 4 மார்ச், 2013

மனசே ரிலாக்ஸ்....


மனசே ரிலாக்ஸ்....

உங்களுக்கு பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும்.
  • நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்காதீர்கள்.
  • நீங்கள் எதைஎல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அந்த எல்லாக்காரியங்களையும் செய்யாமல் நிறுத்துங்கள். அதைப்போல் நீங்கள் செய்யவேண்டும் என்று நினைக்கும் காரியங்களை உடனே தொடங்குவதும் அதுபோல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்

வெள்ளி, 1 மார்ச், 2013

தெரிந்து கொள்வோம் வாங்க-39

தெரிந்து கொள்வோம் வாங்க-39
 
* சீனா தலைநகர் பீஜிங் நகரிலிருந்து வெளிவரும் "சீங்பாவோ' என்ற பத்திரிகை 103 ஆண்டுகளாக வெளிவருகிறது. அச்சு இயந்திரம் வருவதற்கு முன் இதைக் கையால் எழுதி நகல் எடுத்தார்களாம்.

* உலகிலேயே முதன்முதலில் தலைப்புடன் செய்தி வந்தது 1777-ம் ஆண்டில் "நியூயார்க் கெஜட்' என்ற பத்திரிகையில்.