பக்கங்கள்

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

ஒவ்வொரு நாட்டு பாராளுமன்றமும் எப்படி செயல் படுகிறது பாருங்கள்.


ஒவ்வொரு நாட்டு பாராளுமன்றமும் எப்படி செயல் படுகிறது பாருங்கள்.

பாராளுமன்றம் போகாமல் இருப்பதற்கு.


மெக்சிகோ 

தென் கொரியா

 உக்ரைன்
 ரஷ்யா

இத்தாலி
 தைவான்
 நம்ம பாரதம்
 ஜப்பான்
 துருக்கி


manasaali. thanks

உலகிலேயே பெரிய்ய்யய்யய்ய்ய்ய ஹோட்டல் - சீனா மேலும் வளருகிறது.நம்மூர் கம்யுனிஸ்டுகள் இங்கே உண்டி குலுக்கிக் கொண்டு இருக்க.கம்யுனிஸ்ட் நாடான சீனா வளர்ச்சி பாதையில் முன்னேறி எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது, நாம் இன்னும் இந்திய வல்லரசாகும் என்று நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்.

manasaali.blogspot thanks

வெள்ளி, 28 டிசம்பர், 2012

விபரீத தொழில்நுட்பம்- நிர்வாணமாக படம் பிடிக்கும் மொபைல் கேமரா( ஜாக்கிரதை)விபரீத தொழில்நுட்பம்- நிர்வாணமாக படம் பிடிக்கும் மொபைல் கேமரா( ஜாக்கிரதை)
வளர்ந்து வரும்  தொழில்நுட்ப வளர்ச்சியில் புதுமை என்ற பெயரில் என்னென்ன விபரீதங்கள் செய்கிறார்கள் என்பதை நாம் அறிந்து  கொள்வது இன்றைய வாழ்வில் மிகவும் அவசியம். இப்போது வந்துள்ள புதுமையை அறிய நான் முற்படுகையில் என்னை பாதித்த இந்த புதுமையான  விபரீத கண்டுபிடிப்புதான் நிர்வாணமாக படம் பிடிக்கும் மொபைல் கேமரா.


இந்த ஐபோன் கேமராவுக்காக  புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள NUDEIT என்னும் ஐபோன் அப்ளிகேசன் சாப்ட்வேர் ஆடைகளுடன் கூடிய நபரை ஸ்கேன் என்னும் தொழில்நுட்ப வசதியுடன் ஆடையற்ற நிர்வாண உடலாய் பதிவு செய்கிறது. நண்பர்களை நிர்வாணமாக பார்க்கும் NudeIt > கேமரா ஸ்கேன் அப்ளிகேசன் இது.

  டூ  பீஸ் என்ற ஆடை குறைப்பு உடைகளுடன் உலவும் மேலை நாட்டினருக்கு இது  ஒரு  சாதரணமான நகைச்சுவைக்கு உரிய விஷயமாக இருக்கலாம் .ஆனால் சிரழிந்து கொண்டிருக்கும் நம் இளைஞர்கள் மத்தியில் கிடைத்தால் நம் நாட்டு கலாசாரமும் பெண்களின் நிலையும் ஒரு கேலிக்குரியதுமட்டுமில்லாமல்  ஒரு கேள்விக்குரியதாகவும் மாறிவிடும்.

இந்த அப்ளிகேசனை  உபயோகிப்பதை உடனடியாக  நமது அரசாங்கம்  தடை செய்யவேண்டும் அதற்காக நமது பதிவாளர்களும் ஊடகங்களும் பெண்கள் அமைப்புகளும் இதற்கான எதிர்ப்பை உடனடியாக காண்பிக்க வேண்டும். அல்லது நமது பெண்கள் அரபு நாடுகளில் உள்ள பெண்கள் அணிவது போல உடைகளை அணிந்துதான் வீட்டை விட்டு வெளிவரவேண்டி இருக்கும்


எத்தனையோ தவறுகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நமது தமிழகத்திலும் சில கயவர்கள் இத்தகைய மொபைல் போன் அப்ளிகேசனை டவுன் லோடு செய்து தன் கையில் வைத்துக் கொண்டிருக்கலாம்.

ஆகையால் தமிழக பெண்கள் உஷாராக இருக்க வேண்டுகிறேன். இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறேன். இதைப்பற்றிய வீடியோ க்ளீப்புகளை கிழே காணலாம்அப்பாவி கணவன் செய்தது தவறா அல்லது அடங்கா மனைவி செய்தது தவறா? 

அப்பாவி கணவன் செய்தது தவறா அல்லது அடங்கா மனைவி செய்தது தவறா?

அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்த மனைவி ' தன் கணவன் இன்னொரு பெண்கூட படுக்கை அறையில் இருந்ததை பார்த்து அதிர்ந்து போனாள். உடனே அவள் மனமுடைந்து அழுதவாறே அவனை திட்ட தொடங்கினாள்.. உங்களால் எப்படிங்க இப்படி செய்ய முடிந்தது? நான் உங்கள் குழந்தைக்கு மடியில் சுமந்து வளர்த்தேன்... நீங்கள் பன்னியை விட கேவலமானவர்.. இனி உங்க கூட வாழ்வே எனக்கு பிடிக்கவில்லை. நாளையே ஒரு நல்ல வக்கிலை பார்த்து உங்களுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறேன் என்று சொல்லியவாறு வெளியே செல்ல முயன்றாள்.

அதை கேட்ட அவள் கணவன் சொன்னான். நீ போறதுன்னு முடிவு பண்ணிய பிறகு நான் உன்னை தடுக்க விரும்பவில்லை ஆனால் போவதற்கு முன் நான் சொல்லவருவதை மட்டும் கேட்டுவிட்டு செல் என்றான்.

அவளும் அழுதாவாறே கேட்கலானாள்

அவன் சொன்னான் நான் இன்று ஆபீஸில் இருந்து வரும் வழியில் இந்த பெண் லிப்ட் கேட்டாள். அவளை பார்த்ததும் எனக்கு பரிதாபமாக இருந்தது. அதனால் நானும் சரியென்று அவளை காரில் ஏற அனுமதித்தேன். அப்போது அவளை மிக அருகில் பார்த்தேன் அவள் மிகவும் ஒல்லியாக இருந்தாள் . பாவம் மிகவும் பழைய ஆடையை அணிந்து இருந்தாள் பார்க்கவும் மிக அனுதாபத்திற்குரியவாளாக இருந்தாள். அவளுடன் பேச்சு கொடுத்த போது சொன்னாள் சாப்பிட்டே 2 நாடகளுக்கு மேலாக ஆகிவிட்டது என்றும் சொன்னாள்.

அதனால் அவள் மேல் இரக்கப்பட்டு அவள் இடத்திற்கு போகும் வழியில் நம் வீடு இருப்பதால் அவள் மேல் இரக்கப்பட்டு அவளை நமது வீட்டிற்கு அழைத்து சென்றேன்.

அப்போது நேற்று இரவு நான் உனக்காக ஆசையாக சமைத்த உணவை நீ சாப்பிட்டால் மிக குண்டாகி விடுவாய் உன் டையட் வீணாகிவிடும் என்று நீ ஒதுக்கி வைத்த உணவை நான் சூடுபடுத்தி கொடுத்தேன் அதை அவள் மிகவும் ஆசையோடு சுவைத்து சாப்பிட்டாள். அதன் பின் அவள் மிகவும் அழுக்காக இருந்ததால் அவளை குளித்துவிட்டு போகச் சொன்னேன். அப்போதுதான் நான் கவனித்தேன்அவள் ஆடைகள் கிழிந்து இருந்ததை அப்போது எனக்கு ஞாபகம் வந்தது உனது பிறந்தநாள் பரிசாக நான் வாங்கி கொடுத்த சேலை நன்றாக இல்லையென்று நீ உடுத்தாமல் வைத்திருந்தது, எனவே உபயோகம் இல்லாத அதை அவளுக்கு கொடுத்தேன். அது போல என் அம்மா ஆசையாக உனக்கு தைத்து கொடுத்த ப்ளவுஸை டிஸைனர் ப்ளவுசை அவளை இன்சல்ட் பண்ணுவதற்காக அதை அணியாமல் வைத்திருந்ததை எடுத்து அவளுக்கு தந்தேன். நான் வெளியூர் போய்விட்டு திரும்ப வரும் போது ஆசை ஆசையாக உனக்கு வாங்கி வந்த உள்ளாடைகளை எனக்கு நல்ல டேஸ்ட் இல்லை என்ரு கூறி அதை அணியாமல் வைத்திருந்ததையும் அவளிடம் தந்தேன்


அது போல மிகவும் விலை மதிக்கதக்க டிஸைனர் செருப்பை நீ என்னிடம் சொல்லி வாங்கி வர சொன்னாய். அதை நான் வாங்கி கொடுத்த பின் அதே செருப்பை உன் சக அலுவலர் அணிந்திருப்பதால் அதை அணியாமல் வீணாக உபயோகம் இல்லாத அதை அவளுக்கு கொடுத்தேன். அது போல என் தங்கை புத்தாண்டுக்கு  பரிசாக வாங்கி கொடுத்த பேக்கை அவளை வெறுப்பு ஏத்துவதற்காக நீ உபயோகம் படுத்தாமல் வைத்திருந்ததையும் எடுத்து அவளுக்கு தந்தேன்

இப்படி வரிசையாக சொல்லி வந்த  கணவன் தன் மூச்சை சற்று நிறுத்தி சுவாசித்துவிட்டு சொன்னான். நான் செய்த இந்த உதவையை எல்லாம் பெற்றுக் கொண்ட அந்த பெண் வீட்டை விட்டு செல்லும் போது கண்ணில் கண்ணிருடன் நான் செய்த உதவிக்கு மனமார்ந்த  நன்றியை சொல்லிவிட்டு ஒன்று கேட்டாள். உங்கள் மனைவி உபயோகப்படுத்தாத வேறு ஏதும் இருந்தால் எனக்கு தாருங்கள் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்று சொன்னாள்

அதனால் உனக்கு உபயோகம் இல்லாத என்னை தந்தேன் அது தவறா??


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்