பக்கங்கள்

வெள்ளி, 21 டிசம்பர், 2012

உலகத்தில் உள்ள விலங்கினங்களில் சுவை உணரும் சக்தி அதிகமாய் உள்ள மீன்



கெளுத்தி மீன் அல்லது பூனை மீன் (cat fish) கதிர் துடுப்புடைய மீனினத்தைச் சேர்ந்தவை. இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. இவற்றின் தொடுமுளைகள் பூனையை நினைவுபடுத்துவது போல உள்ளதால் இவை மேனாட்டில் பூனை மீன்கள் என்று அறியப்படுகின்றன. இவற்றின் வடிவம் மற்றும் அளவு பலவாறாய் வேறுபட்டது.

பெரும்பாலான கெளுத்தி மீன்கள் அடியில் வாழ்பவை. அவற்றின் கனமான தலை எலும்பும் இதற்கொரு காரணமாகும். இவற்றின் தட்டையான தலை பரப்பைத் தோண்ட உதவுகிறது.

பெரும்பாலான நாடுகளில் இவை உணவாக உண்ணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 1987 ஆம் ஆண்டு முதல் சூன் 25 ஆம் நாள் கெளுத்தி மீன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. செதில்கள் இல்லாத காரணத்தால் யூதர்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் இவற்றை உண்பதில்லை
மித தட்பவெப்ப வெப்ப வலயங்களில் உள்ள நாடுகளின் ஆறுகளில் கெளிறு மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்த மீன்கள் ஆழமான நீர்நிலைகளில் அடித்தளத்தில் கழிக்கின்றன. இவை குப்புறப் படுத்துக் கிடப்பதால் இவற்றின் உடல் மேலிருந்து கீழ் ஓரளவு தட்டையாக இருக்கும். கெளுத்தி மீனின் உடல் மேற்புறம் கருத்தும் அடிப்புறம் வெளுத்தும் இருக்கும். இவற்றின் ஊற்று உறுப்புகளான மீசைகள் ஆழ்நீர் வாழ்வில் பெரும் பங்காற்றுகின்றன. மீசைகள் நன்கு வளர்ச்சியுற்றவை. மாறாக இருளில் அதிக உபயோகமில்லாத கண்கள் வளர்ச்சி குன்றியவை. கெளுத்தி மிகப் பெரும்பான்மையாக இரவில் சஞ்சரிக்கின்றன. பகல் வேளைகளில் அவை குழிகளிலும் கயங்களிலும் ஒளிந்து கொள்ளும். புழுக்கள் போல் நெளியும் இவற்றின் மீசைகள் சிறு மீன்களைக் கவர்ந்து இழுக்கும். சிறு மீன் மீசைகளைப் பிடிக்க முயலும் போது கெளிறு தனது அகன்ற வாயைச் சட்டென்று திறந்து அதைப் பற்றி விழுங்கிவிடும். பெரிய கெளிறுகள் நீர்ப்பறவைகளையும் தாக்கும்.
உலகத்தில் உள்ள விலங்கினங்களில் இந்த கெளுத்தி வகை விளங்குகளுக்குத்தான் சுவை உணரும் சக்தி அதிகமாம் .அதாவது 27 000 சுவை மொட்டுகள் அவைகளின் நாவில் காணப் படுகிறதாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக