பக்கங்கள்

புதன், 30 மே, 2012

இஸ்லாமும் இந்தியாவும்!

 

' இஸ்லாமும் இந்தியாவும்' என்ற தலைப்பில் கம்யூனிஸ்ட் தலைவர் திரு. டி.ஞானையா எழுதியிருக்கும் நூலைப் பற்றிய தேவ. பேரின்பனின் விமரிசனக் கட்டுரை.

மத அடிப்படைவாதம் இன்றைய உலக அரசியலில் மிகுதியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிருத்துவம், இஸ்லாம், பௌத்தம், இந்து முதலிய மதங்களின் அடிப்படைத்தன்மைகளைப் புதுப்பிப்பது என்ற பெயரால் நவீன அரசியல் ஒன்று நடத்தப்படுகிறது. அது பாசிசத்தையும் பயங்கர வாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு அதன் வழியே அறிவிக்கப்படாத போர் ஒன்றும் உலகு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது.

புதன், 16 மே, 2012

கண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா

அடிமையாய் எகிப்திலிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் மீட்கப்பட்டு மோசஸ் தலைமையில் பாலைவனவெளியில் வழிநடத்தப்பட்டு வந்தார்கள். அப்போது ஜனங்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்ததாகவும் அவ்விடத்தில் தண்ணீர் இல்லாததால் ஜனங்களெல்லாரும் மோசேயை பார்த்து முறுமுறுத்ததாகவும் பைபிளில் படிக்கிறோம்.Post Comment
தற்காலத்தில் எல்லா நாடுகளிலும் அஞ்சல் சேவைகள் நடைமுறையில் உள்ளன. இச்சேவையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன என்பதையும் நாம் அறிவோம். ஆயிரமாயிரம் ஊழியர்கள் இந்தச் சேவையில் பணியாற்றி வருகின்றனர் 
Post Comment


காரல் மார்க்ஸ் வாழ்க்கை

Karl Marx


காரல் மார்க்ஸ் வாழ்க்கை - ஒரு சிறுகுறிப்பு
Post Comment


வாஸ்கோடாகாமா

6e28a7c2.jpg image by sivaa

1498 மே மாதம் 20ஆம் தேதி அந்த வெள்லிக்கிழமை இரவு அரபிக்கடல் வழியே கப்பலில் பொர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா கேரளாவில் உள்ள கொழிக்கோடு வந்து சேர்ந்தான். இந்தியாவின் அளப்பரிய செல்வம் கேள்விப்பட்டு ஐரோப்பியர் இந்தியாவோடு வியாபாரம் செய்யத்துடித்த காலமது. இங்கு தங்கமும், வாசனைத் திரவியங்களும் மிகுந்திருப்பதாய் கேள்விப்பட்டு கொலம்பஸ் கடல் வழியே 1492 -ல் இந்தியாவிற்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகளையும் அமெரிக்காவையும் கண்டறிந்த சம்பவத்திற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது.

Post Comment
நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

Post Comment
நம்முடைய இளைய தலைமுறைக்கு நாம் கொடுத்து செல்லும் மிகப் பெரிய பொக்கிசம் வரலாறு.
Post Comment


விண்டோஸ் வந்த வரலாறு .....


உலகின் 90 சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System) முதல் பதிப்பிலிருந்து , இன்று வெளியாகியுள்ள விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை இங்கே காணலாம்.

Post Comment


அன்னையர் தினம் ( வரலாறு )அம்மா... இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம்... அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother's Day) ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.

Post Comment

அந்த காலத்து விடுதலையில்......
இலங்கையின் பூர்வீக குடிமக்கள்
தமிழர்களே! சிங்களர்களல்லர்!
!

Post Comment


உலகின் முதல் ஆம்புலன்ஸ்

நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.
முதலில் குதிரை பூட்டிய வண்டியில் இருந்த ஆம்புலனஸ் இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பலர் இறக்க நேரிட்டதால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், மருந்துகள் முக்கியமானதை கொண்ட குட்டி மருத்துவமனை போல் ஆக்கப்பட்டது. மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்புலன்ஸ் நியுயார்க் நகரில் உள்ள பெவில்யூ மருத்துவமனையில் 1869 ஆம் ஆண்டில் போது மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. உலகின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இரண்டாம் உலகப் போரில் செயல்பட்டன.

1970க்குப் பிறகு ஆம்புலன்ஸிற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டனர். ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே அளிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வேன் பிரிட்டனில் உள்ளது. 59அடி நீளமுள்ள 44 படுக்கை வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் உள்ளது.

நர்சுகள் அறிமுகமான விதம்
நியூடிரிலியா என்னும் லத்தீன் சொல்லிருந்து நர்ஸிங் என்னும் வார்த்தை பிறந்தது. மருந்து, உண்வு, முதலியவற்றை அன்புடன் ஊட்டி நம்மை உற்சாகப் படுத்துவர் என்று பொருள். கிரேக்க, ரோமானியர்கள் காயங்களுக்குக் கட்டுவதற்காக மட்டும் இத்தகைய பெண்கள் இருந்தனர். ரோமானியர்கள் ஆண் நர்சுகளை தங்கள் இராணுவத்தில் சேர்த்தனர். அவர்கள் அடிபட்ட வீரர்களுக்கு மருந்து வைத்து தானே கட்டிவிட்டனர்.

டாக்டருக்கு தண்டனை...!
பழங்காலத்தில் பாபிலோனியாவில் அறுவைச் சிகிச்சையின் போது ஒரு நோயாளி இறந்துவிட்டால் அறுவை சிகிச்சை செய்த டாக்டரின் வலது கையை துண்டித்துவிடுவார்கள். பாரசீகத்தில் அறுவை சிகிச்சையில் மும்முறை தொடர்ந்து தோல்வி கண்டால் அந்த மருத்துவர் அந்த நாட்டில் வைத்தியமே செய்யக்கூடாது என்ற சட்டம் இருந்தது.

முதல் மருத்துவ உடை...
அறுவை சிகிச்சை செய்யும்போது கையுறைகள், முக உறைகள், கெளன்கள் போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணியும் முறை 1875 ஆம் ஆண்டு அறிமுகமானது.

ஆராய்ச்சிக்கு உதவியவர்...
ஜான் ஹன்டர் என்பவர் புகழ்பெற்ற ஆங்கிலேயே அறுவை சிகிச்சை நிபுணர். அந்த உடலியல் நிபுணர், ஈ முதல் திமிங்கலம் வரை சுமார் 14 ஆயிரம் பிராணிகளின் சடலங்களை சேமித்து வைத்தார். அவற்றுள் அபூர்வ உருவமுள்ள மனிதர்கள், மிருகங்களும் இறந்தன. மருத்துவத்துறை முன்னேற்றத்திற்கு அந்த 14,000 பிராணிகளின் உருவ உள்ளமைப்புகளும் மிகவும் பயன்பட்டன.

முதல் மருத்துவ பத்திரிகை...
அறிவுத் தாகமும், விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வளர்ந்ததால் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளின் விவரங்களை பரிமாறிக்கொள்ள விஞ்ஞான பத்திரிகைகளையும், மருத்துவ இதழ்களையும் தொடங்கினர். பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மருத்துவ இதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. முதல் மருத்துவப் பத்திரிகை ‘மெடிசினா குரிஸோ’ என்பதாகும். இது ஆங்கிலப் பத்திரிகை. இதன் பிறகே பல மொழிகளிலும் மருத்துவப் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.

சுத்தமான தண்ணீரை அருந்தச் சொன்ன முதல் மனிதர்கள்...
நோய் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் சுத்தமான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பாபிலோனியர்கள் சொன்னார்கள். இவர்கள் நெருப்பைப் போல் நீரையும் இறைவன் என போற்றி வணங்கினார்கள். இவர்கள் தண்ணீர்க் கடவுளுக்கு EA என்னும் பெயர் சூட்டி வணங்கினார்கள். அத்துடன், மருத்துவக் கடவுளாகப் பாம்பையும் வணங்கினார்கள்

Post Comment

உலகநாடுகளின் நேரத்தை கணக்கிடுகிம் கிரீன்விச் முறை தெரியுமா


உலகநாடுகளின் நேரத்தை கணக்கிடுகிம் கிரீன்விச் முறை தெரியுமா

,

உலகம் முழுவதும் நேத்தை கணக்கிட ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை கிரீன்விச் முறை  . இதன் மூலம்  நேரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள் நண்பர்களே
பூமி தன்னைதானே  சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவர 24 மணிநேரம் (1440 நிமிடங்கள் ) ஆகிறது அதாவது சூரிய ஒளி பூமியில் ஒரு இடத்தில் பட்டு மீண்டும் அதே இடத்தில் பட ஒரு நாள் ஆகிறது பூமியின் மேல் வடக்கு தெற்காக வரையப்பட்ட கற்பனை கோடுகளே தீர்க்கரேகைகள்  . இங்கிலாந்து நாட்டில் கிரீன்விச் எனுமிடத்தை 0 தீர்க்க ரேகையாக கொண்டும் அதற்கு கிழக்குபக்கம் 180 தீர்க்கரேகைகளும் மேற்க்குபக்கம் 180 தீர்க்கரேகைகளும் ஆக மொத்தம் 360 தீர்க்கரேகைகளும் விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டது .

பூமி உருண்டையின் மேல் உள்ள 360 தீர்க்கரேகைகளின் மீதும் ஒளிபட 24 மணிநேரம் அல்லது 1440 நிடங்கள் ஆகின்றது
360 தீர்க்கரேகைக்கு =1440 நிமிடம் எனில்  ஒரு தீர்க்கரேகைக்கு
1440*1/360= 4 நிமிடங்கள்
சூரிய ஒளி ஒரு தீர்க்கரேகையை கடக்க நான்குநிமிடங்கள்  ஆகின்றது  15 தீர்க்கரேகைகளை கடக்க 15*4=60 நிமிடங்கள் ஆகின்றது இதன் அடிப்படையில் ஒரு ஊர் எந்த தீர்க்கரேகையில்  அமைந்துள்ளது என்பதை வைத்து அந்த ஊரின்  நேரம் கணக்கிடப்படுகிறது   ஒரு ஊர் 45 தீர்க்கரேகையில் இருந்தால்  0 தீர்கரேகையில் இருந்து அந்த ஊரை சூரிய ஒளி கடக்க ஆகும் நேரம் 45*4=180 நிமிடங்கள் அதாவது மூன்று மணிகள் ஆகும் அந்த ஊர் தீர்க்க ரேகையின் கிழக்கு பக்கம் இருந்தால் 12 மணியை கூட்டிக்கொள்ள வேண்டும் , மேற்க்குபக்கம் இருந்தால் 12 மணியை கழித்துக்கொள்ள வேண்டும்.
 இந்தியா கிழக்கு மேற்காக 68 கிழக்கு தீர்க்கரேகையில் இருந்து 97 கிழக்கு தீர்க்கரேகை வரை பரவியுள்ளது  ஒவ்வொரு தீர்க்கரேகைக்கும் நேரம் கணக்கிட்டால் இந்தியாவில் வட , தென் மாநிலங்களில் வேறு வேறு நேரம் கிடைக்கும் அதனால் நேர குழப்பம் ஏற்படும் எனவே  இந்தியாவில் அலகாபாத் அருகே செல்லும் 82 1/2 தீர்க்கரேகையை மத்தியதீர்க்கரேகையாக கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரே நேர அளவு கணக்கிடப்படுகிறது
இந்தியா 82 1/2 கிழக்கு தீர்க்கரேகையில் உள்ளதால்
 82 ½*4 =330 நிமிடங்கள்  அதாவது 5 மணி 30 நிமிடங்களை கிரீன்விச்நேரத்துடன்  கூட்டிக்கொள்ள வேண்டும்
என்ன நண்பர்களே  நேரத்தை இப்படித்தான் வகுத்து தந்து இருக்கின்றனர் விஞ்ஞானிகள்  ஆனால் நேரத்தில்  நாம் என்ன செய்ய வேண்டும் என வகுத்து செயல்பட்டால் தான் வாழ்வில் உயரமுடியும்

இலவச மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் கவனிக்கவேண்டியவை

,

1.   இலவசம் என்ற  காரணத்திற்காக கிடைக்கும் எல்ல மென்பொருள்களையும் டவுன்லோடிங் செய்யாதீர்கள் தேவையற்ற மென்பொருள்கள் உங்கள் கணினியின் வேகத்தை குறைத்து விடும்.
2.   ஒரு மென்பொருளை ஒரு முறைதான் பயன்படுத்தவேண்டும் எனும் சூழ்நிலையில்  அந்த மென்பொருளை டவுன்லோடிங் செய்வதைவிட  ஆன்லைனில் அந்த வேலையை செய்துகொள்ளுங்கள் .
3.   ஒரு தளத்தில் இருந்து மென்பொருளை டவுன்லோடிங் செய்யும் முன் அந்த மென்பொருளை எத்தனை பேர் தரவிறக்கம் செய்துள்ளனர் அதற்கு யாரவது கருத்து சொல்லி இருக்கிறார்களா என்று பாருங்கள் குறிப்பாக அதிகம் டவுன்லோடிங் செய்யப்பட்ட மென்பொருளை டவுன்லோடிங் செய்யுங்கள்
4.   நீங்கள் மென்பொருள் டவுன்லோடிங் செய்யும் தளம் வைரஸ் , மால்வேர் போன்ற தாக்குதல் இல்லதவையா என உறுதி செய்துகொள்ளுங்கள்
5.   ஒரே தேவைக்கு பல மென்பொருள்கள் பயன்படுத்துவதை தவிருங்கள் உதாரணமாக player , cleaner , போட்டோவை மாற்ற செயல்பாடுகளுக்கு பல மென்பொருளை பயன்படுத்தாதீர்கள்

6.   எந்த ஒரு மென்பொருளையும் அதன் தயாரிப்பு தளத்தில் இருந்து டவுன்லோடிங் செய்வதை தவிருங்கள் ஏன் எனில்  அவர்களின் மென்பொருளை அவர்கள் உயர்த்திதான் சொல்வார்கள்

7.   கேம்ஸ்  போன்றவற்றை டவுன்லோடிங் செய்யும் போது மிக கவனம் தேவை ஏன் எனில் சில கேம்ஸ்வுடன் இணைந்து வரும் மால்வேர்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களான வங்கி கணக்கு எண் முக்கியமான பாஸ்வேர்டு போன்றவைகளை  திருடி  அதை தயாரித்தவருக்கு தெரியபடுத்திவிடும்

8.   குறிப்பிட்ட தேவைக்கு  உங்களின் நண்பர்கள் என்ன வகையான  மென்பொருளை பயன்படுத்துகிறார்கள்  அதனால்  அவர்களுக்கு பயன் கிடைத்ததா  எனக்கேட்டுபாருங்கள் அல்லது கூகுள் மூலம் அந்த மென்பொருளின் Review வை தேடி படித்துபார்த்து பின் டவுன்லோடிங் செய்யுங்கள்

புதன், 25 ஏப்ரல், 2012

ஆத்தா நான் பாஸாயிட்டேன் - ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ

,

நெஞ்சம் நெகிழ்கிறது , ஆனந்தத்தில் கண்கள் பனிக்கிறது ,எனது வலையுலக சொந்தங்களே உங்களுக்கு  நன்றி சொல்ல வார்த்தைகளற்று தவிக்கிறேன்

இன்று ஆனந்தவிகடனின்(02.05.2012) வலையோசை பக்கத்தில் எனது வலைப்பூ வந்து உள்ளது . 2008 ஏப்ரல் 2 இல் வலைப்பூ என்னவென்று தெரியாமலே மெயில் ஐடி மூலம் வலைப்பூவை உருவாக்கி விட்டேன் அதில் hai friends this is my first blog pls say about blog. my id aguruking@gmail.com என்று ஒரு பதிவிடல் செய்திருந்தேன் (அந்த பதிவிடலை பார்க்க http://www.haiguru.blogspot.com/ ) தமிழ்கூறும் நல்லுலகம் என்னை திரும்பிகூட பார்க்காத காரணத்தால் ஒரு சுபயோகசுபதினத்தில் உருவாக்கிய  வலைப்பூவை மறந்தேபோனேன் . 

கல்வி சார்ந்த செய்திகளின் கருவூலமாக ஒரு வலைப்பூவை நடத்தி வருபவரும்www.teachersalem.blogspot.in கணினி நுட்பங்களை கற்று கொடுத்த குருவுமான ஆசிரிய நண்பர் திரு விஜய்சந்தரின் வழிகாட்டுதலின் படி ஒரு வலைப்பூவை மீண்டும் தொடங்கி பதிவிட ஆரம்பித்தேன் .எதை பதிவிடுவது எனத்தெரியவில்லை பள்ளி பாட புத்தங்களை வாசித்த நேரத்தை காட்டிலும் கல்கி, புதுமைபித்தன் , சுஜாதா, சுந்தரராமசாமி, கு.அழகிரிசாமி , ச.கந்தசாமி, நாஞ்சில்நாடன், கி.ராஜநாரயணன் , வண்ணதாசன், வண்ணநிலவன் , அசோகமித்திரன் , அறிவுமதி, கல்யான்ஜி , மீரா,  போன்றோரின் படைப்புகளை தேடி தேடி படித்த நேரம்தான்  அதிகம் அவர்களைப்போல கதைகள் கவிதைகள் எழுதலாம் என்றால் புலியை பாத்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகிவிடும்  எனவே என் சிற்றறிவிற்கு எட்டியவற்றை பதிவிட்டு வருகிறேன்.

வலையுலகம் மிகப்பெரிய கடல்  நமக்கோ அரைகுறை நீச்சல் என்ன செய்வது என்று தெரியாத நேரத்தில் அன்புத்தம்பி என்டர் த வேர்ல்டு (www.wesmob.blogspot.com )  ஸ்டாலின் ஆபத்தாண்டவனாக வந்து தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறார் ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ வருவதற்கு மிக முக்கிய காரணம் எனக்கு சிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை  மேலும் மேலும் எழுத வைத்தது  வலையுலக  நண்பர்களாகிய நீங்கள்தான் எனவே   இந்த  ஆனந்த தருணத்தில்  உங்களை இருகைகூப்பி  வணங்குகிறேன் . ஆனந்தவிகடனின் வெளியீட்டினை பார்த்துவிட்டுஎனக்கு மின் அஞ்சல் , தொலைபேசி, குறுந்தகவல் வழியாக வாழ்த்து கூறிய பள்ளி , கல்லூரி தோழர்களுக்கும் தோழிகளுக்கும் எனது மனங்கனிந்த வாழ்துகள் .   என்னை நேசிக்கும் நெஞ்சங்களாகிய உங்களுடனான   நட்புபயணத்தில் உங்களுடன் கைகோர்த்து வருகிறேன் வாருங்கள் தோழர்களே நாம் வாழும் சமுதாயத்திற்கு  நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம் . வீழ்வது நாமாக இருப்பினும் வெல்வது தமிழாக இருக்கட்டும்   .ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

பூமிக்கு நீர் வந்தது எப்படி ? நவீன அறிவியல் கண்டுபிடிப்பு

,
பிரபஞ்சவெளியில் பூமியில் மட்டும் உயிரினங்கள் உருவாக காரணம்  நீர் ஆனால் அந்த நீர் எப்படி உருவானாது என்பது விஞ்ஞானிகளின் மண்டையை குடைய வைக்கும் கேள்வி  . இக்கேள்விக்கான பல்வேறுபட்ட விடைகள் விஞ்ஞானிகளிடையே காணப்பட்டாலும் தற்போது அனைவரும் ஏற்ககூடிய அறிவியல் தீர்வை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர் .
முதலில் அரோர எனப்படும் மாயாஜால ஒளியை பற்றி காண்போம்
 பூமியின் துருவபகுதிகளில் காணப்படும் அதிகப்படியான காந்த ஈர்பினால் காற்றில் உள்ள மூலக்கூறுகள் மின்சக்தி பெறுகின்றன இதனால் சூரிய ஒளியில் அணுக்கள் மின்னேற்றம் பெற்று ஒளிருகின்றன இதை பார்த்தால் வர்ணஜாலமாய் கண்களுக்கு விருந்து படைக்கும்  

              அரோரா ஒளியை பற்றி  லூயிஸ்டிராங்கு எனும் ஆய்வாளர்  ஆராய்ந்து வந்தார்  வளிமண்டல அடுக்கினுள் சூரிய ஒளி விழும்போது  பூமியின் பகல் பகுதிகளில் புற ஊதாக்கதிர்களின் ஒளி அலை நீளங்கள் பிரகாசமாய் அரோராவாய் ஒளிரும் இதை ஆராய்ச்சி செய்ய முனைந்த டிராங்கு டைனமிக் எக்பிளோரர் எனும் செயற்கைகோளின் மூலம்  புற ஊதாக்கதிர்களை புகைப்படம் எடுத்து ஆராய்ந்தார் அதில் பூமின் பகல் பகுதிகள் பிரகாசமாய்  ஒளிர்ந்தது ஆனால் அதில் சில கரும்புள்ளிகள் காணப்பட்டன அடுத்தடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கரும்புள்ளிகள் நகர்ந்து நகர்ந்து காணப்பட்டது . கரும்புள்ளிகள் ஏற்பட என்ன காரணம் என்று ஆராய்ந்த போது  நீர் மூலக்கூறுகள் என்று கண்டார் .

               பூமியின்  வளிமண்டலத்தின்  உயர் அடுக்குகளில் நீர் மூலக்கூறுகள் சாத்தியம் இல்லை  ஆனால் புகைப்படத்தில்  கரும்புள்ளிகளாய்   நீர் வந்தது எப்படி என்று மேலும் மேலும் ஆராய்ந்தார் முடிவில் வால்நட்சத்திரத்தில் இருந்து சிறு சிறு பனிக்கட்டிகளாக பூமின்மேல் விழுகிறது  அதனால்தான் புகைப்படத்தில் கரும்புள்ளிகள் தோன்றின எனக்கண்டறிந்தார் . வால்நட்சத்திரம்  என்பது பாதிக்கு பாதி நீர் நிறைந்தது . பல மில்லியன் ஆண்டுகளாக இவ்வாறு வால்நட்சத்திரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நீரை பெற்றதால் பூமியில் கடல்கள், ஆறுகள் ,ஏரிகள் போன்ற நீர் நிலைகள் தோன்றின என லூயிஸ்டிராங்கு கூறினார் ஆனால்  இக்கருத்து சரியல்ல என்று  ஒரு சில விஞ்ஞானிகள்  வாதிடுகின்றனர்  மற்றும்  சிலரோ  இக்கருத்தை  தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கின்றனர் எது எப்படியோ அறிவியல் என்பது மக்களுக்கு நன்மைகளை  செய்தால் நல்லதுதானே .

ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்

,
யுரேகா ! யுரேகா என்ற வார்தையின் மூலம்  வரலாற்றின்  சாதனை பக்கத்தில் பதிவான ஆர்கிமிடிஸ் கணிதம் , இயற்பியல் , வானியல் போன்றவற்றிற்கு சிறப்பான பங்களிப்பு செய்திருக்கிறார். கிரேக்க நாட்டின் சிசிலியிலுள்ள ஸைரக்யூஸ் என்னும்  நகரில் கி.மு 287 ல் பிறந்தார் ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்  என்பதை  தெரிந்து கொள்ளும் முன் அவரின் சாதனைகள்  சிலவற்றை பார்போம்
கணித சாதனைகள்
 பை(π) என்பதின்  மதிப்பை துல்லியமாக கண்டறிந்தார்  இந்த மதிப்பு மூலம் வட்டத்தின் சுற்றளவு, பரப்பளவு போன்றவற்றை கண்டுபிடித்தார் .மேலும் கோளத்தின் மேற்பரப்பிற்கும் கனஅளவிற்கும்  உள்ள தொடர்பையும் கண்டறிந்தார் . இன்றும் வட்டம், கோளம், உருளை போன்றவற்றின் கனஅளவு, பரப்பளவை கண்டுபிடிக்க பை மதிப்பைதான்  நாம் பயன்படுத்துகிறோம்
யூக்ளிட் கண்டுபிடித்த ஜியோமிதி எனும் வடிவ கணிதத்தை நன்கு ஆராய்ந்து பல தேற்றங்களையும் தீர்வுகளையும் கூறி ஜியோமிதியை அடுத்த அடுத்த படிநிலைக்கு  உயர்த்தினார் .  கணிதம் பற்றிய பல நூல்
இயற்பியல்  சாதனைகள்
 ஒரு திடப்பொருள் நீரில் மூழ்கும்போது அதனால் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு அந்த திடப்பொருளின் எடைக்கு சமமாக இருக்கும் என்ற ஆர்கிமிடிஸின் மிதக்கும் விதி அடிப்டையில் தான்  இன்றைய  நவீன கப்பல் போக்குவரத்து செயல்படுகிறது .
நிற்பதற்கு ஒரு இடத்தையும் ஒரு இரும்புக்கம்பியும்  தந்தால் பூமியையே புரட்டிக்காட்டுவேன் என்று  நெம்புகோல் தத்துவத்தை கூறினார் .இந்த நெம்புகோல் தத்துவ அடிப்படையில் போர்க்கருவிகள் பலவற்றையும்  கண்டுபிடித்தார் 
ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம்  என்னவென்று அறிய வந்தால்  பள்ளிக்கூடத்தில் செல்லித்தந்ததை எங்களுக்கு மீண்டும்
 சொல்லி தந்து கலாய்க்கிறீங்களே  அப்படினு சொல்றீங்களா ?  
சரி சரி வாங்க ஆர்கிமிடிஸ் நடத்திய கண்ணாடி போர் யுத்தம் பற்றி  தெரிந்து கொள்வோம் .
இரண்டாம் நூற்றான்டில் இத்தாலியில் உள்ள சிரகாஸ் நாட்டை ஆர்கிமிடிஸின் உயரிய நண்பர் சிரகாஸ் ஆண்டு வந்தார் அப்போது சிரகாஸ் மீது  ரோமானியர்கள் போர்தொடுத்தனர் ரோமானியர்களின் படை பலமோ மிகப்பெரியது . சிரகாஸினுடைய படையோ சிறியது  வலிமை வாய்ந்த  ரோமானிய படைகளை வீழ்த்த ஆர்கிமிடிஸ் மிகச்சிறப்பான போர் யுத்தியை கண்டுபிடித்தார் பரவளைய வடிவில் மிகப்பெரிய  கண்ணாடிகளை நிறுவினார் அதன் மீது  சூரிய  ஒளியை பட வைத்து எதிரொளிக்கும்  சூரிய ஒளியை  ரோமானியர்களின்  கப்பல் மீது குவியச்செய்தார்  இதனால் ரோமானியர்களின்  கப்பல்கள்  பற்றி எரிந்தது ரோமானியர்களுக்கு பெருத்தசேதம் ஏற்பட்டது  . கண்ணாடிகளை பயன்படுத்தி  ரோமானியர்களின் படைகளை நடுங்கச்செய்த  ஆர்கிமிடிஸின் இச்சாதனை வரலாற்றின் பக்கங்களில்  கண்ணாடி போர் யுத்தம் என்று அழைக்கப்படுகிறது . ஆர்கிமிடிஸ் தன்னுடைய 75 வயதில்  ரோமானிய படை வீரனால் கொல்லப்பட்டார் . ஆர்கிமிடிஸ் பற்றி  மேலும் அறிய  ஒரு பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன்  பதிவிட்டு உள்ளேன்  பதிவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்

சனி, 21 ஏப்ரல், 2012

இயற்கை சலைன் (குளுகோஸ்) எது தெரியுமா ?

,
இரண்டாம் உலகப்போரின் போது சலைன்(குளுகோஸ்)  கிடைக்காத போது பல்லாயிரக்கணக்கானவர்களின்  உயிரை காப்பாற்றிய  இயற்கை சலைன் எது  தெரியுமா ? நாம்  தாகம் தணிக்க அருந்தும் இளநீர் தான்  அது . 

இளநீரில் அதிகளவு பொட்டாஷியம் உள்ளது  மேலும் வைட்டமின் B , வைட்டமின் C , போன்றவைகளும் உள்ளது .
பழங்காலங்களில்  மக்களுக்கு  மரணபயத்தை கொடுத்த  அம்மைநோயிலிருந்து மக்களை காத்தது  இளநீர் ஆகும். மேலும் சிறுநீர் ஒழுங்கிற்கும் , சிறுநீரகக் கற்களை  கரைப்பதற்கும்  , மஞ்சள் காமலையை போக்குவதற்கும்  இளநீர் அருமருந்தாகும் .
அவசர காலங்களில்  ஒருவருக்கு குளுகோஸ் ஏற்றவேண்டும் என்ற நிலையில்  குளுகோஸ் கிடைக்காத போது தகுந்த மருத்துவரின் உதவி இருந்தால்  குளுக்கோஸுக்கு மாற்றாக  சுத்தமான இளநீரை  பயன்படுத்தலாம்