உலகம்
முழுவதும் நேத்தை கணக்கிட ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை கிரீன்விச் முறை . இதன் மூலம்
நேரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்
நண்பர்களே
பூமி
தன்னைதானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவர 24 மணிநேரம் (1440 நிமிடங்கள் )
ஆகிறது அதாவது சூரிய ஒளி பூமியில் ஒரு இடத்தில் பட்டு மீண்டும் அதே இடத்தில் பட ஒரு
நாள் ஆகிறது பூமியின் மேல்
வடக்கு தெற்காக வரையப்பட்ட கற்பனை கோடுகளே தீர்க்கரேகைகள் . இங்கிலாந்து நாட்டில்
கிரீன்விச் எனுமிடத்தை 0 தீர்க்க ரேகையாக கொண்டும் அதற்கு
கிழக்குபக்கம் 180 தீர்க்கரேகைகளும் மேற்க்குபக்கம் 180 தீர்க்கரேகைகளும் ஆக
மொத்தம் 360 தீர்க்கரேகைகளும் விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டது .
பூமி
உருண்டையின் மேல் உள்ள 360 தீர்க்கரேகைகளின் மீதும் ஒளிபட 24 மணிநேரம் அல்லது 1440
நிடங்கள் ஆகின்றது
360
தீர்க்கரேகைக்கு =1440 நிமிடம் எனில் ஒரு தீர்க்கரேகைக்கு
1440*1/360= 4
நிமிடங்கள்
சூரிய ஒளி ஒரு
தீர்க்கரேகையை கடக்க நான்குநிமிடங்கள் ஆகின்றது 15 தீர்க்கரேகைகளை கடக்க 15*4=60
நிமிடங்கள் ஆகின்றது இதன் அடிப்படையில் ஒரு ஊர் எந்த தீர்க்கரேகையில் அமைந்துள்ளது
என்பதை வைத்து அந்த ஊரின் நேரம் கணக்கிடப்படுகிறது ஒரு ஊர் 45 தீர்க்கரேகையில்
இருந்தால் 0 தீர்கரேகையில் இருந்து அந்த ஊரை சூரிய ஒளி கடக்க ஆகும் நேரம் 45*4=180
நிமிடங்கள் அதாவது மூன்று மணிகள் ஆகும் அந்த ஊர் தீர்க்க ரேகையின் கிழக்கு
பக்கம் இருந்தால் 12 மணியை கூட்டிக்கொள்ள வேண்டும் , மேற்க்குபக்கம் இருந்தால் 12
மணியை கழித்துக்கொள்ள வேண்டும்.
இந்தியா
கிழக்கு மேற்காக 68 கிழக்கு தீர்க்கரேகையில் இருந்து 97 கிழக்கு தீர்க்கரேகை வரை
பரவியுள்ளது ஒவ்வொரு தீர்க்கரேகைக்கும் நேரம் கணக்கிட்டால் இந்தியாவில் வட , தென்
மாநிலங்களில் வேறு வேறு நேரம் கிடைக்கும் அதனால் நேர குழப்பம் ஏற்படும் எனவே
இந்தியாவில் அலகாபாத் அருகே செல்லும் 82 1/2 தீர்க்கரேகையை மத்தியதீர்க்கரேகையாக
கொண்டு இந்தியா முழுமைக்கும் ஒரே நேர அளவு கணக்கிடப்படுகிறது
இந்தியா 82 1/2
கிழக்கு தீர்க்கரேகையில் உள்ளதால்
82 ½*4 =330
நிமிடங்கள் அதாவது 5 மணி 30 நிமிடங்களை கிரீன்விச்நேரத்துடன் கூட்டிக்கொள்ள
வேண்டும்
என்ன நண்பர்களே
நேரத்தை இப்படித்தான் வகுத்து தந்து இருக்கின்றனர் விஞ்ஞானிகள் ஆனால் நேரத்தில்
நாம் என்ன செய்ய வேண்டும் என வகுத்து செயல்பட்டால் தான் வாழ்வில்
உயரமுடியும்
nilanilal.blogspot.com thanks