பக்கங்கள்

புதன், 19 செப்டம்பர், 2012

உலகில் உள்ள சிறப்பு நாட்களின் தொகுப்பு-01


உலகில் உள்ள சிறப்பு நாட்களின் தொகுப்பு-01

  • மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை

  • மிக மிக நல்ல நாள் - இன்று

  • மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

  • மிகவும் வேண்டியது - பணிவு

  • மிகவும் வேண்டாதது - வெறுப்பு

  • மிகப் பெரிய தேவை - நம்பிக்கை

  • மிகக் கொடிய நோய் - பேராசை

  • மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

  • கீழ்த்தரமான விடயம் - பொறாமை

  • நம்பக் கூடாதது - வதந்தி

  • ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு

  • செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்

  • செய்யக் கூடியது - உதவி

  • விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்

  • உயர்வுக்கு வழி - உழைப்பு

  • நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு

  • பிரியக் கூடாதது - நட்பு

  • மறக்கக் கூடாதது - நன்றி

  • இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்

    • உலகில் உள்ள சிறப்பு நாட்களின் தொகுப்பு

    இது எனது 25 ஆவது பதிப்பாகும்.
    இத்த வகையில் எனக்கு பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள் அதில் சிலர்........

    Loganatha,கனககோபி,கலையரசன், ஜெஸ்வந்தி,தங்க முகுந்தன்
    • உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26
    • உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30
    • உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2 • அனைத்துலக தாய்மொழி நாள் - யுனெஸ்கோ-பெப்ரவரி 21

    • ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8

    • உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13
    • உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15
    • உலக வன நாள்-மார்ச் 21
    • உலக செய்யுள் நாள் - யுனெஸ்கோ-மார்ச் 21

    • உலக நீர் நாள்-மார்ச் 22

    • அனைத்துலக காச நோய் நாள் -மார்ச் 24-
    • ஏப்ரல் முட்டாள்கள் நாள்-ஏப்ரல் 1:

    • உலக சிறுவர் நூல் நாள் – ஏப்ரல் 2:

    • நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்- ஏப்ரல் 4
    • உலக சுகாதார நாள் – ஏப்ரல்-7

    • நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்- ஏப்ரல் 18
    • பூமி நாள் – ஏப்ரல் 22

    • உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்ரல் 23
    • அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்- ஏப்ரல் 26

    • மே நாள் - உலகத் தொழிலாளர் நாள் - மே 1

    • உலக பத்திரிகை சுதந்திர நாள்- மே 3

    • அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்- மே 4

    • சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்- மே 5

    • உலக செஞ்சிலுவை நாள்- மே 8
    • உலக செவிலியர் நாள்- மே 12
    • உலகக் குடும்ப நாள்- மே 15
    • உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்- மே 17

    • அனைத்துலக அருங்காட்சியக நாள் – மே 18

    • பயங்கரவாதத்திற்கு எதிரான நாள் – மே-19

    World Biodiversity Day – மே 22
    World Turtle Day – மே 23

    • புகையிலை எதிர்ப்பு நாள் – மே 31

    தொடரும்.......

    உலகின் உலகின் சிறப்பு நாட்கள்


    உலகின் உலகின் சிறப்பு நாட்கள்

    இது எனது முத்தைய பதிவின் தொடர்ச்சியாகும்......
    இந்த சிறப்பு நாட்களின் தொகுப்பில் எதாவது பிழை இருப்பின் அல்லது எதேனும் விடுபட்டிருப்பின் அறியத்தரவும் நன்றி.
    பன்னாட்டு குழந்தைகள் நாள் -ஜூன் 1

    • உலக சூழல் நாள் - ஜூன் 5

    • உலகக் கடல் நாள் - ஜூன் 8
    • உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் - ஜூன் 12

    • உலக இரத்த வழங்கல் நாள் - ஜூன் 14

    • உலக வலைப்பதிவர் நாள் - ஜூன் 14
    • உலக அகதிகள் நாள் – ஜூன்-20
    World Humanist Day – ஜூன்-21
    • சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் - ஜூன்-26
    • அமைதி நாள் - ஜூலை10

    • உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11
    • அனைத்துலக சதுரங்க நாள் – ஜூலை 20

    • π அண்ணளவு நாள் - ஜூலை22
    உலக சாரணர் நாள் - ஆகஸ்டு 1

    • அனைத்துலக இளையோர் நாள் - ஆகஸ்டு 12

    • அனைத்துலக இடக்கையாளர் நாள் - ஆகஸ்டு 13

    • புனித பார்த்தெலோமேயு நாள் – ஆகஸ்டு 24
    • அனைத்துலக காணாமற்போனோர் நாள் – ஆகஸ்டு 30
    • உலக எழுத்தறிவு நாள் - செப்டம்பர் 8

    • அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள் – செப்டம்பர் 14

    • அனைத்துலக மக்களாட்சி நாள் – செப்டம்பர் 15
    • உலக ஓசோன் பாதுகாப்பு நாள் – செப்டம்பர் 16
    • உலக அமைதி நாள் - செப்டம்பர் 21
    • தானுந்து அற்ற நாள் - செப்டம்பர் 22
    • உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27
    • உலக முதியோர் நாள் - அக்டோபர் 1
    • அனைத்துலக வன்முறையற்ற நாள் – அக்டோபர் 2
    • உலக வன விலங்குகள் நாள் – அக்டோபர் 4

    • உலக விண்வெளி வாரம் ஆரம்பம் - அக்டோபர் 4

    • அனைத்துலக ஆசிரியர் நாள் - அக்டோபர் 5
    • உலக அஞ்சல் நாள் – அக்டோபர் 9

    • உலகத் தர நிர்ணய நாள் - அக்டோபர் 14

    • உலக உணவு நாள் - அக்டோபர் 16
    • உலக வறுமை ஒழிப்பு நாள் - அக்டோபர் 17
    • ஆப்பிள் நாள் - அக்டோபர் 21

    • இயற்பியல் - மூல் நாள் - அக்டோபர் 23
    • ஐக்கிய நாடுகள் நாள் (1945) - அக்டோபர் 24

    • பொதுநலவாய நாடுகள் - நினைவுறுத்தும் நாள்- நவம்பர் 11
    • உலக நீரிழிவு நோய் நாள் - நவம்பர் 14

    • உலக சகிப்புத் தன்மை நாள் - நவம்பர் 16
    • அனைத்துலக மாணவர் நாள் - நவம்பர் 17

    • உலகத் தொலைக்காட்சி நாள் - நவம்பர் 21
    • படிவளர்ச்சி நாள் - நவம்பர் 24
    • பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள் - நவம்பர் 25

    • உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1

    • ஐக்கிய நாடுகள் - அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள் - டிசம்பர் 2
    • அனைத்துலக ஊனமுற்றோர் நாள் - டிசம்பர் 3

    • மனித உரிமைகள் நாள் - டிசம்பர் 10
    • நோபல் பரிசு அளிக்கும் வைபவம் - டிசம்பர் 10
    • பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள் - டிசம்பர் 17
    • சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் - டிசம்பர் 29

    உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-05

    சில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவர்கள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும்.


    மேரி க்யூரி (ஆங்கிலம் Marie Curie போலந்து மொழி:Maria Skłodowska-Curie நவம்பர் 7 1867 – ஜூலை 4 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். ரேடியம் பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். 1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார். 1934 ஜுலை 4 அன்று மேரி கியூரி மரணம் அடைந்தார். கியூரி இறந்து மூன்று மாதங்களின் பின் அவரின் மகளும் மருமகனும் கியூரியின் செயற்கை கதிர் வீச்சு பற்றிய கண்டு பிடிப்பை வெளியிட்டனர்.


    மைக்கேல் பரடே (Michael Faraday செப்டெம்பர் 22 1791 – ஆகஸ்டு 25 1867)) பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல் மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். புவி மையக் கோட்பாட்டுக்கு மாறாக இவர் முன்வைத்த சூரிய மையக் கோட்பாடு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக் கண்டுபிடிப்பே நவீன வானியலின் அடிப்படையாகும்.




    பியேர் ஜூல்ஸ் சேசர் ஜான்சென் Pierre Jules César Janssen பெப்ரவரி 22 1824 – டிசம்பர் 23 1907) என்பவர் ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் ஆங்கிலேய அறிவியலாளர் ஜோசப் நோர்மன் லொக்கியர் என்பவருடன் இணைந்து ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தார்.




    ரோலண்ட் ஹில் (Rowland Hill டிசம்பர் 3 1795 - ஆகஸ்ட் 27 1879) நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர்.



    தொமஸ் அல்வா எடிசன் (பெப்ரவரி 11 1847 – அக்டோபர் 18 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபரும் ஆவார். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். 'மென்லோ பூங்காவின் மந்திரவாதி' பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1920களின் பிற்பகுதிகளில்இ தன்னுடைய மின்விளக்கு கண்டுபிடிப்பு. தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன் பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். எடிசன் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் Edison Trust எனப் பொதுவாக அறியப்பட்ட ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் கம்பனியை Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.

    வீரசிங்கம் துருவசங்கரி (செப்டம்பர் 5 1950 - டிசம்பர் 2 2006) இலங்கையைச் சேர்ந்த ஓர் அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் மண் ஆராய்ச்சியாளரும் ஆவார். தொலைக்காட்டியாகவும் நுணுக்குக்காட்டியாகவும் பாவிக்கக்கூடிய கருவியொன்றை வடிவமைத்தார். அத்துடன் சூரிய அடுப்பு பனிக்கட்டி பனிமழை போன்றவற்றை அளக்கும் கருவிகளையும் கண்டுபிடித்தார்.


    அலெசான்றோ வோல்ட்டா (1745-1827) என்பவர் மின் துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவர். இவர் இத்தாலி நாட்டில் லொம்பார்டி என்னும் மாவட்டத்திலே உள்ள கோமோ என்னும் ஊரில் பிப்ரவரி 18 1745ல் பிறந்தார். 110 வோல்ட்டு மின் அழுத்தம் 230 வோல்ட்டு மின் அழுத்தம் என்பதில் உள்ள வோல்ட்டு என்னும் மின் அழுத்த அலகானது இவருடைய பங்களிப்பைப் பெருமை செய்யவும்இ நினைவு கூறவுமே அமைக்கப்பட்டது. இதனாலேயே மின் அழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி(Voltmeter)என்று அழைக்கின்றோம். மின்னழுத்தத்தை வோல்ட்டழுத்தம் என்றும் குறிக்கப்பெறும்.


    கார்ல் பென்ஸ் (நவம்பர் 25 1844 - ஏப்ரல் 4 1929) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு வாகனப்பொறியாளர் ஆவார். இவர் பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர். இவர் 1886 இல் மூன்று சக்கர ஊர்தியைக் கண்டுபிடித்தார். இது முதலில் எரிவாயு எஞ்சினிலும் பின்னர் பெட்ரோலிலும் இயங்கியது.



    ஜோஹன் குட்டன்பேர்க் (1398 - 1468) அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்தவராவார். ஜெர்மனியரான குட்டன்பேர்க் 1447 இல் அச்சியந்திரத்தை அறிமுகம் செய்தார். அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.




    சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் (ஜனவரி 9 1868 - பிப்ரவரி 12 1939) டென்மார்க்கில் உள்ள ஆவர்பியர்கு (Havrebjerg) என்னும் இடத்தில் பிறந்த புகழ்பெற்ற வேதியியலாளர். இவர் காடித்தன்மையை அளவிடும் ph (கரைசலின் ஐதரசன் அடர்த்தி) முறையின் கருத்துருவை முன்வைத்தவர். இவை தவிர 1907 இல் இவர் கண்டுபிடித்த சோரென்சென் ஃவோர்மோல் டைட்ரேசன் என்னும் முறைக்காகவும் இவர் புகழ் பெற்றார்.




    மார்க்கோனி (ஏப்ரல் 25 1874 - ஜூலை 20 1937) வானொலியைக் கண்டு பிடித்தவர். 'வானொலியின் தந்தை' எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை முயசட குநசனiயெனெ டீசயரn இடன் இணைந்து பெற்றார். 1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.



    ருடால்ப் ஹெல் ஒரு ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் 1901 டிசம்பர் 19 - ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியா நகரத்தில் பிறந்தார். இவர் தொலைநகல் சாதனத்திற்கு முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார்.


    லூயிஸ் பிரெய்ல் (1809-1852 பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.



    வில்லியம் தாம்சன் (26 ஜூன் 1824 - 17 டிசம்பர் 1907) அவர்கள் அயர்லாந்தைச் சேர்ந்த கணிதமுறை இயற்பியல் அறிஞரும் பொறியியல் அறிஞரும் ஆவார். 19 ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். இவருக்கு லார்டு கெல்வின் என பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையை இவர் நினைவாக கெல்வின் வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.



    ஜெ.ஜெ. தாம்சன் என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18 1856 - ஆகஸ்ட் 30 1940) எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார்.


    உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்


    சில விடுதலை நாட்கள். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி.

    விடுதலை நாள்:

    ஜனவரி 1
    கியூபா விடுதலை நாள் (1899)
    ஹெயிட்டி விடுதலை நாள் (1804)
    சூடான் விடுதலை நாள் (1956)
    கமரூன் விடுதலை நாள் (1960)
    செக் குடியரசு விடுதலை நாள் (1993)
    சிலோவாக்கியா விடுதலை நாள் (1993)
    தாய்வான் விடுதலை நாள் (1912)

    ஜனவரி 4
    பர்மா - விடுதலை நாள் (1948)

    ஜனவரி 26
    உகாண்டா - விடுதலை நாள்

    ஜனவரி 31
    நவூறு - விடுதலை நாள் (1968)

    பெப்ரவரி 4
    இலங்கை - விடுதலை நாள் (1948)

    பெப்ரவரி 7
    கிரனாடா - விடுதலை நாள் (1974)
    பெப்ரவரி 11
    பொஸ்னியா - விடுதலை நாள்
    வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)

    பெப்ரவரி 16
    லித்துவேனியா - விடுதலை நாள் (1918)

    பெப்ரவரி 22
    சென் லூசியா - விடுதலை நாள் (1979)

    பெப்ரவரி 23
    புரூணை - விடுதலை நாள் (1984)

    பெப்ரவரி 24
    எஸ்தோனியா - விடுதலை நாள் (1918)

    பெப்ரவரி 26
    குவெய்த் - விடுதலை நாள் (1991)

    மார்ச் 1
    பொசுனியா எர்செகோவினா - விடுதலை நாள் (1992)
    தென் கொரியா - விடுதலை நாள்

    மார்ச் 3
    பல்கேரியா - விடுதலை நாள் (1878)

    மார்ச் 6
    கானா - விடுதலை நாள் (1957)

    மார்ச் 21
    நமீபியா - விடுதலை நாள் (1990)

    மார்ச் 25
    கிரேக்கம் - விடுதலை நாள்

    மார்ச் 26
    வங்காள தேசம் - விடுதலை நாள் (1971)

    மார்ச் 31
    மால்ட்டா - விடுதலை நாள் (1979)

    ஏப்ரல் 4
    செனகல் - விடுதலை நாள்

    ஏப்ரல் 16:
    சிரியா - விடுதலை நாள் (1946)

    ஏப்ரல் 18:
    சிம்பாப்வே - விடுதலை நாள் (1980)

    ஏப்ரல் 25
    போர்த்துக்கல் - விடுதலை நாள் (1974)

    ஏப்ரல் 27:
    சியேரா லியோனி விடுதலை நாள் (1961)
    டோகோ (1960) - விடுதலை நாள்(1960)

    ஏப்ரல் 30:
    வியட்நாம் - விடுதலை நாள் (1975)

    உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!


    உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-01



    உலக நாடுகளின் விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-01

    சில உலக நாடுகளின் விடுதலை நாட்கள். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். இந்த பதிவில் என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி.

    மே 5-
    டென்மார்க் - விடுதலை நாள் (1945)
    எதியோப்பியா - விடுதலை நாள் (1941)
    நெதர்லாந்து - விடுதலை நாள் (1945)

    மே 15
    பராகுவே - விடுதலை நாள் (1811).

    மே 20
    கிழக்குத் தீமோர் - விடுதலை நாள்

    மே 24
    எரித்திரியா: விடுதலை நாள் (1993)
    மே 25
    சாட் லைபீரியா மாலி மவ்ரித்தானியா நமீபியா சாம்பியா சிம்பாப்வே - ஆபிரிக்க விடுதலை நாள்
    லெபனான் - விடுதலை நாள் (2000

    ஜூன் 1
    சமோவா - விடுதலை நாள் (1962)

    ஜூன் 4
    தொங்கா - விடுதலை நாள் (1970)

    ஜூன் 5
    சேஷெல்ஸ் - விடுதலை நாள்

    ஜூன் 12
    பிலிப்பீன்ஸ் - விடுதலை நாள்

    ஜூன் 14
    போக்லாந்துத் தீவுகள் - விடுதலை நாள்

    ஜூன் 25
    மொசாம்பிக் - விடுதலை நாள் (1975)

    ஜூன் 26
    சோமாலிலாந்து - விடுதலை நாள்
    மடகஸ்கார் - விடுதலை நாள்

    ஜூன் 29
    செஷெல் - விடுதலை நாள் (1976)

    ஜூன் 30
    கொங்கோ - விடுதலை நாள் (1960)

    ஜூலை 1
    சோமாலியா - விடுதலை நாள் (1960)
    ருவாண்டா - விடுதலை நாள் (1962)
    புருண்டி - விடுதலை நாள் (1962)

    ஜூலை 3
    பெலரஸ் - விடுதலை நாள் (1944)

    ஜூலை 4
    ஐக்கிய அமெரிக்கா - விடுதலை நாள் (1776)

    ஜூலை 5
    வெனிசுவேலா - விடுதலை நாள் (1811)
    அல்ஜீரியா - விடுதலை நாள் (1962)
    கேப் வேர்ட் - விடுதலை நாள் (1975).
    ஜூலை 6
    மலாவி - விடுதலை நாள் (1964)
    கொமொரோஸ் - விடுதலை நாள் (1975)

    ஜூலை 7
    சொலமன் தீவுகள் - விடுதலை நாள் (1978)

    ஜூலை 9
    ஆர்ஜென்டீனா - விடுதலை நாள் (1816)

    ஜூலை 10
    பஹாமாஸ் - விடுதலை நாள் (1973)

    ஜூலை 12
    கிரிபட்டி- விடுதலை நாள் (1979)

    ஜூலை 19
    நிக்கரகுவா - தேசிய விடுதலை நாள் (1979)

    ஜூலை 20
    கொலம்பியா - விடுதலை நாள் (1810)

    ஜூலை 21
    குவாம் - விடுதலை நாள் (1944)

    ஜூலை 26
    மாலைதீவு - விடுதலை நாள் (1965)
    லைபீரியா - விடுதலை நாள் (1847)

    ஜூலை 27
    பெரு - விடுதலை நாள் (1821)

    ஜூலை 30
    வனுவாட்டு - விடுதலை நாள் (1980)
    ஆகஸ்டு 3
    நைஜர் - விடுதலை நாள் (1960)

    ஆகஸ்டு 5
    புர்கினா பாசோ - விடுதலை நாள் (1960)

    ஆகஸ்டு 6
    பொலீவியா - விடுதலை நாள் (1825)
    ஜமெய்க்கா - விடுதலை நாள் (1962)

    ஆகஸ்டு 9
    சிங்கப்பூர் - விடுதலை நாள் (1965)

    ஆகஸ்டு 10
    எக்குவாடோர் - விடுதலை நாள் (1809)

    ஆகஸ்டு 11
    சாட் - விடுதலை நாள் (1960)

    ஆகஸ்டு 14
    பாகிஸ்தான் - விடுதலை நாள் (1947)
    கொங்கோ - விடுதலை நாள் (1960)

    ஆகஸ்டு 15
    இந்தியா - விடுதலை நாள் (1947)
    தென் கொரியா - விடுதலை நாள் (1948)
    கொங்கோ - விடுதலை நாள் (1960)

    ஆகஸ்டு 17
    இந்தோனேசியா - விடுதலை நாள் (1945)
    காபோன் - விடுதலை நாள் (1960)

    ஆகஸ்டு 19
    ஆப்கானிஸ்தான் - விடுதலை நாள் (1919)

    ஆகஸ்டு 23
    ருமேனியா - விடுதலை நாள் (1944)

    ஆகஸ்டு 24
    உக்ரேன் - விடுதலை நாள் (1991)

    ஆகஸ்டு 25
    உருகுவே - விடுதலை நாள் (1825)

    கஸ்டு 27
    மால்டோவா - விடுதலை நாள் (1991)


    ஆகஸ்டு 31
    மலேசியா - விடுதலை நாள் (1957)
    திரினிடாட் டொபாகோ - விடுதலை நாள் (1962)
    கிர்கிஸ்தான் - விடுதலை நாள் (1991)
    தொடரும்...........

    உலக விடுதலை நாட்களின் பட்டியல் விபரம்-02



    சில உலக நாடுகளின் விடுதலை நாட்கள். இது எனது முந்தைய பதிப்பின் தொடர்ச்சியாகும். இது தேடி எடுக்கப்பட்ட விடயமாகும். இந்த பதிவில் என்னை ஊக்கிவித்த அனைவர்களுக்கும் நன்றி.


    செப்டம்பர் 1
    உஸ்பெகிஸ்தான் - விடுதலை நாள் (1991)

    செப்டம்பர் 3
    கட்டார் - விடுதலை நாள் (1971)

    செப்டம்பர் 6
    சுவாசிலாந்து - விடுதலை நாள் (1968)

    செப்டம்பர் 7
    பிரேசில் - விடுதலை நாள் (1822)

    செப்டம்பர் 8
    மசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991)

    செப்டம்பர் 9
    தஜிகிஸ்தான் - விடுதலை நாள் (1991)

    செப்டம்பர் 15
    கொஸ்டா ரிக்கா - விடுதலை நாள் (1821)
    எல் சல்வடோர் - விடுதலை நாள் (1821)
    குவாத்தமாலா - விடுதலை நாள் (1821)
    ஹொண்டுராஸ் - விடுதலை நாள் (1821)
    நிக்கராகுவா - விடுதலை நாள் (1821)
    செப்டம்பர் 16
    மெக்சிக்கோ - விடுதலை நாள் (1810)
    பப்புவா நியூ கினி - விடுதலை நாள் (1975)

    செப்டம்பர் 18
    சிலி - விடுதலை நாள் (1810)

    செப்டம்பர் 19
    சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - விடுதலை நாள் (1983)

    செப்டம்பர் 21
    மோல்ட்டா - விடுதலை நாள் (1964)
    பெலீஸ் - விடுதலை நாள் (1981)
    ஆர்மேனியா - விடுதலை நாள் (1991)

    செப்டம்பர் 22
    பல்கேரியா - விடுதலை நாள் (1908)
    மாலி - விடுதலை நாள் (1960)
    செப்டம்பர் 24
    கினி பிசாவு - விடுதலை நாள் (1973)

    செப்டம்பர் 30
    பொட்சுவானா - விடுதலை நாள் (1966)

    அக்டோபர் 1
    சைப்பிரஸ் - விடுதலை நாள் (1960)
    நைஜீரியா - விடுதலை நாள் (1960)
    துவாலு - விடுதலை நாள் (1978)

    அக்டோபர் 02
    கினி - விடுதலை நாள் (1958)

    அக்டோபர் 04
    லெசோத்தோ - விடுதலை நாள் (1966)

    அக்டோபர் 05
    போர்த்துக்கல் - குடியரசு நாள் (1910)

    அக்டோபர் 08
    குரொவேசியா - விடுதலை நாள்

    அக்டோபர் 09
    உகாண்டா - விடுதலை நாள் (1962)
    எக்குவடோர் - கயாக்கில் விடுதலை நாள் (1820)

    அக்டோபர் 12
    எக்குவடோரியல் கினி - விடுதலை நாள் (1968)

    அக்டோபர் 24
    சாம்பியா - விடுதலை நாள் (1964)
    நவம்பர் 01
    அன்டிகுவா பர்புடா - விடுதலை நாள் (1981)

    நவம்பர் 03
    பனாமா - விடுதலை நாள் (1903)
    டொமினிக்கா - விடுதலை நாள் (1978)

    நவம்பர் 09
    கம்போடியா - விடுதலை நாள் (1953)

    நவம்பர் 09
    கம்போடியா - விடுதலை நாள் (1953)
    நவம்பர் 11
    போலந்து - விடுதலை நாள் (1918)
    அங்கோலா - விடுதலை நாள் (1975)

    நவம்பர் 15
    பாலஸ்தீனம் - விடுதலை நாள் (அறிவிப்பு: 1988)

    நவம்பர் 18
    லாத்வியா - விடுதலை நாள் (1918)

    நவம்பர் 19
    மாலி - விடுதலை நாள்

    நவம்பர் 22
    லெபனான் - விடுதலை நாள் (1943)

    நவம்பர் 25
    சுரிநாம் - விடுதலை நாள் (1975)

    நவம்பர் 28
    அல்பேனியா - விடுதலை நாள் 1912)
    மவுரித்தேனியா - விடுதலை நாள் (1960)

    நவம்பர் 30
    பார்போடஸ் - விடுதலை நாள் (1966)

    டிசம்பர் 1
    போர்த்துக்கல் - விடுதலை நாள் மத்திய ஆபிரிக்கக் குடியரசு - விடுதலை நாள் (1958)

    டிசம்பர் 06
    பின்லாந்து - விடுதலை நாள் (1917)

    டிசம்பர் 09
    தான்சானியா - விடுதலை நாள் (1961)

    டிசம்பர் 12
    கென்யா - விடுதலை நாள் (1963)

    டிசம்பர் 16
    கசக்ஸ்தான் - விடுதலை நாள் (1991)

    டிசம்பர் 19
    கோவா - விடுதலை நாள்

    டிசம்பர் 24
    லிபியா - விடுதலை நாள் (1951)

    உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்க வந்த நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!


    முதன்மை உலகம்



    • பூமியிலுள்ள
      மிகப்பெரிய கண்டம் :- ஆசியாக்கண்டம் - 43998000 Km2
    • பூமியிலுள்ள மிகப்பெரிய சமுத்திரம் :- பசுபிக் சமுத்திரம் - பரப்பு : 166241700Km2 ஆழம் : 3940M
    • உலகில் மிக ஆழமான ஆழி (அகழி) :- மரியானா ஆழிஆழம் - 11522 m
    • உலகிலுள்ள மிகப் பெரிய கடல் :- தென் சீனக்கடல் - 2974600 Km2
    • உலகிலுள்ள மிகப் ஆழமான கடல் :- மின்பான்யோ கடல்
    • உலகிலுள்ள மிகப் பெரிய ஏரி (வாவி) :- பயிக்கால் ஏரி (கஸ்பியன் கடலில்)
    • உலகிலுள்ள மிக உயரமான மலைச்சிகரம் :- எவரஸ்ட் சிகரம் - இமய மலைஉயரம் - 8848 m (முதன் முதலில் ஏறியவர் - டென்சிங்)
    • உலகிலுள்ள மிக நீளமான மலை :- அந்தீஸ் மலைநீளம் - 7241 Km
    • உலகிலுள்ள மிக நீளமான நதி :- அமேசன் நதிதென் அமேரிக்கா – 6750 Km
    • உலகிலுள்ள மிகப் பெரிய நதி :- மிசூரி மிசுசி
    • உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி :- ஏஞ்சல் /பால்ஸ் (வெனிசுலா) – 979 m
    • உலகின் மிகப் பெரிய தீவு :- கிறீன்லாந்து – 2175597 Km2
    • உலகின் மிகப் பெரிய தீபகற்பம் :- அரேபிய தீபகற்பம் - 3250000 Km2
    • உலகின் மிக உயரமான எரிமலை :- கொடபாகஸி (தென்னாபிரிக்கா)
    • உலகின் மிகப் பெரிய வளைகுடா :- மெக்சிகோ வளைகுடா – 1542985 Km2
    • உலகின் மிகப் பெரிய விரிகுடா :- ஹட்சன் விரிகுடா 12268Km2
    • உலகின் மிக உயரமான பீடபூமி :- பமீர் பீடபூமி (பமீர்முடிச்சு)
    • உலகின் மிகப் பெரிய பாலைவனம் :- ஸஹாரா பாலைநிலம் (வட ஆபிரிக்கா) – 8400000Km2
    • உலகில் மிக வெப்பமான இடம் :- எதியோப்பியாவில் - டால்லொல் 490 C
    • உலகில் மிக வெப்பமான நாடு :- சூடான்
    • உலகில் மிக குளிரான இடம் :- வெர்கொயான்ஸ்க்
    • உலகில் மிக குளிரான நாடு :- ஐஸ்லாந்து
    • உலகில் நீண்ட வறட்சி நிலவும் இடம் :- சில்லியில் - அற்றகாமா பாலை நிலம்.
    • உலகில் அதிக மழை பெறும் இடம் :- இந்தியாவில் - சீராப்புஞ்சி – 26461mm
    • உலகில் மிகவும் செல்வந்த நாடு : - கட்டார்
    • உலகில் மிகவும் வறிய நாடு :- சயர்
    • மிகப்பெரிய சிலை :- நியூயோர்க் சுதந்திர சிலை
    • உலகில் மிகஉயர்ந்த அணைக்கட்டு :- எவர்டாம்
    • உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் : - பிராக் ஸ்டேடியம் (செக்கோசிலோவாக்கியா)
    • உலகின் மிகப்பெரிய வெளிச்ச வீடு :- துஸ்ரிக் (ஜப்பான்)
    • உலகின் மிகப்பெரிய மணிக்கூடு : - பிக்பென் மணிக்கூடு
    • உலகின் மிகப்பெரிய தேவாலயம் : - சென் பீட்டர்ஸ் தேவாலயம்
    • உலகின் மிக நீளமான புகையிரதப்பாதை :- லூசியானா பாலம் - அமேரிக்கா
    • மிகப் பெரிய துறைமுகம் :- ரோடார்டாம் துறைமுகம் - ஈரோம் போர்ட் - நெதர்லாந்து
    • உலகின் மிக நீளமான சுரங்கப் பாதை :- செயின்ட் கார்த்தார்ட் ரோட் - சுவிட்சலாந்து 16.5 Km

    » டாக்டர்.அப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்


    » டாக்டர்.அப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்


    மூலிகை தாவரத்தின் தாவரவியல் பெயர்




    A - வரிசை
    ABELMOSCHUS ESCULENTUS - வெண்டை
    ABELMOSCHUS MOSCHATUS - கந்துகஸ்தூரி
    ABIES WEEBBIANA - தாலிசப்பத்திரி
    ABRUS FRUITILOCULUS - வெண்குந்திரி, விடதரி
    ABRUS PRECATORIUS - குண்றிமணி
    ABULITUM INDICUM - துத்தி
    ACACIA ARABICA - கருவெல்லம்
    ACACIA CONCUNA - சீக்காய், சீயக்காய்
    ACACIA PENNATA - காட்டுசிகை, இந்து
    ACACIA POLYACANTHAPOLYCANTHA - சிலையுஞ்சில்
    ACALYPHA INDICA - குப்பைமேனி
    ACALYPHA PANICULATA - குப்பைமேனி
    ACHYRANTHES ASPERA - நாயுருவி
    ACORUS CALAMUS - வசம்பு
    ADATHODA TRANQUEBARIENSIS - தவசு முருங்கை
    ADENAN THERA PAVONIA - மஞ்சாடி, ஆனைக்குன்றுமணி
    AEGLE MARMELOS - வில்வம்
    AGAVE AMERICANA - ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை
    AGAVE SISALANA - கதலை
    AILANTHUS EXCELSA - பெருமரம், நாரு
    ALANGIUM LAMARCKII - அழிஞ்சில்
    ALANGIUM SALVIIFOLIUM - அழிஞ்சில்
    ALBIZIA LEBBECK - வாகை
    ALBIZIA ODORATISSIMA - கருவாகை
    ALFALFA - குதிரைமசால்
    ALOE BARBADENSIS - சீமை மூசம்பரம்
    ALOE LITTORACIS - மூசம்பரம்
    ALOE VERA - சோத்துக் கற்றாழை
    ALONITUM HETEROPHYLLUM - அதிவிடயம்
    ALTERNANTHERA SESSILIS - பொன்னாங்கண்ணி
    ALPINIA GALANGA - அரத்தை
    AMARANTHUS SPINOSUS - முள்ளுக்கீரை
    AMARANTHUS TRICOLOUR - அரைக்கீரை
    AMMNIA VESICATORIUS - நீர்மேல் நெருப்பு
    AMOMUM SUBLATUM - பெரிய ஏலக்கி
    AMORPHOPHALLUS SYLVATICUS - காட்டுச்சேனை
    ANACORDIUM OCCIDENTALE - முந்திரி
    ANETHUM SOWA - சதகுப்பை
    ANIMATED OATS - (காட்டுக்) காடைக்கண்ணி
    ANISOCHILUS CARNOSUM - கர்ப்பூரவள்ளி
    ANISOMELES MALABARICA - பேய்மிரட்டி
    ANNONA SQUAMOSA - சீத்தா
    APONOGETON NATANS - கொட்டிக்கிழங்கு
    AQUILARIA AGALLOCHA - அகில், காகதுண்டம்
    ARISTIDA SETACEA - துடைப்பம்
    ARISTOLOCHIA BRACTIATA - ஆடுதீண்டாப்பாளை
    ARUM LYRATUM - கொண்டை ராகிசு
    ARUM OOLOCASIA - சேம்பு
    ASPARAGUS RACEMOSUS - தண்ணீர்விட்டான் கிழங்கு
    ASYSTASIS GANGETICA - நறுஞ்சுவைக் கீரை
    ATALANTIA MONOPHYLLA - காட்டு எலுமிச்சை
    AVENA SATIVA - (சீமைக்) காடைக்கண்ணி
    AVENA STERILLIS - (காட்டுக்) காடைக்கண்ணி
    AUDIOGRAPHUS PANICULATA - நிலவேம்பு
    AZADIRACTA INDICA - வெம்பு
    AZIMA TETRACANTHA - முட்சங்கான்

    B - வரிசை
    BAMBUSA ARUNDINACEA - மூங்கிலிரிசி
    BARINGTONIA ACUTANGULA - செங்கதப்பு
    BARINGTONIA RACEMOSA - சமுத்திரப் பழம்
    BARLENIA PRIONTIS - செம்முல்லி, காட்டுகானா
    BARLERIA CRISTATA - செம்முள்ளி
    BASELLA ALBA - பசளைக் கீரை
    BASELLA RUBRA - கொடிப்பசளைக் கீரை
    BAUHINIA TOMENTOSA - இறுவாட்சி
    BERBERIS ARISTATA - மரமஞ்சள்
    BIXA ORELLANA - வருகமஞ்சள், மந்திரவஞ்சி
    BLUMEA LACERA - காட்டுமுள்ளங்கி
    BOERHAVIA DIFFUSA - மூக்குரட்டை
    BORASSUS FLABELLIFER - பனை
    BOVERHEAVIA REPEN - மூக்கரத்தைக் கீரை
    BROYONIA LACINIOSA - ஐவிரலி
    BUCHANANIA AXILLARIS - புளிமா
    BULLETWOOD - மகிலா மரம்
    BUREA FRONDOSA - பலசு

    C - வரிசை
    CAESALINA PULCHERRIMA - மயில்கொன்றை
    CALABA FRUITCOSA - விழுந்தி
    CALAMUS ROTANG - பிறப்பான் கிழங்கு
    CALCULUS BOVIS - கோரோசனை
    CALOTROPIS GIGANTEA - எருக்கன், அருக்கன், ஆள்மிரட்டி
    CAMMELINA BENGHALENSIS - கானாம்வாழை
    CANNABIS SATIVA - கஞ்சா, ஆநந்தமூலம்
    CANTHIUM PARVIFOLIUM - சிறுக்காரை
    CAPPARIS BREVISPINA - ஆதந்தை
    CAPPARIS HORRIDA - ஆதொண்டை
    CAPPARIS ZEYLANICA - சுடுத்தொரட்டி
    CAPSIUM ANNUM - மிளகாய்
    CAPSIUM MINIMUM ROCH. - சீமை மிளகாய்
    CARALLUMMA UMBELLATA - கல்முளையான்
    CARDIOSPERMUM HALICACABUM - முடக்கற்றான்
    CARMONA RETUSA - குரங்கு வெற்றிலை, குருவிச்சிப்பழம்
    CARRISSA CARANDAS - களா, கிளா
    CARRISSA SPINARUM - சிறுக்களா
    CARUM ROXBURGHIANUM - ஓமம்
    CASSIA ALATA - சீமையகத்தி
    CASSIA ANCEOLATA - நிலாவாரை
    CASSIA AUGUSTIFOLIA - நாட்டு நிலவாகை
    CASSIA AURICULATA - ஆவாரை
    CASSIA FISTULA - சிறுக்கொன்றை
    CASSIA TORA - தகரை
    CATHARANTHUS ROSEUS - நித்தியகல்யாணி
    CENTELLA ASIATICA - வல்லாரை
    CEPPARIS ZEYLANICA - ஆதொண்டை
    CHESTNUT - கஷ்கொட்டை
    CINNAMOMIUM MACROCARPUM - பெரிய லவங்கப்பட்டை
    CISSUS QUADRANGULARIS - பிரண்டை
    CISSUS REPENS - செம்பிரண்டை
    CITRON - கடார நாரத்தை
    CITRUS ACIDA - எளிமிச்சை
    CITRUS MEDICA - கடார நாரத்தை
    CITRULLUS COLOCYNTHIS - ஆற்றுத்தும்மட்டி
    CLEMONE GYRANDRA - நிலவேளை
    CLEMONE VISCOVA - வேளை
    CLEOME VISCOZA - நாய்க்கடுகு
    CLERODENDRON INERME - சங்கம் குப்பி
    CLERODENDRON PHLOMOIDES - தழுதாரை
    CLERODENDRON SERRATUM - கண்டுபரங்கி
    CLERODENDRON PHLOMOIDES - தழுதாரை
    CLIMBING YLANG YLANG - கருமுகை
    CLOVER - சீமை மசால்
    CLITORIA TERTATEA - கண்ணிக்கொடி
    COCCINIA GRANDIS - கோவை
    COCCULUS HIRSUTUS - காட்டுக்கொடி
    COCUS NUCIFERA - தென்னை
    COLEUS AROMATICOS - கற்பூரவல்லி
    COLEUS FORSKOHLII - மருந்துகூர்க்கன்
    COLOCASIA HIMALENSIS - சாமைக்கிழங்கு
    COPORIS ZEYLANICA - ஆதண்டம்
    CORDIA DICHOTOMA - நறுவிலி, மூக்குச்சளிப் பழம்
    COROLLO CARTUS - ஆகாயக் கருடன்
    CORYPHA - குடைப்பனை
    CUCUMIS MELO UTILISSIMUS - முள்வெள்ளரி
    CUCUMIS MELO VAR. MELO - சுக்கங்காய்
    CURCULIGO ORCHIODES - குறத்தி நிலப்பனை
    CURCUMA AROMATICA - கஸ்தூரி மஞ்சள், கத்தூரி மஞ்சள்
    CURCUMA LONGA - மஞ்சள்
    CUSCUTTA - கஷ்கொட்டை
    CYCLOMEN EUROPEUM - சீமை மீன்கொல்லி
    CYMBOPOGON CITRATUS - எலுமிச்சைப்புல்
    CYNODON DACTYLON - அருகம்புல்
    CYPERUS ROTUNDUS - கோரைக்கிழங்கு

    D - வரிசை
    DANDELION - சீமைக் காட்டுமுள்ளங்கி
    DATURA METEL - ஊமத்தை
    DECALEPIS HAMILTONII - மாகாளிக்கிழங்கு
    DELONIX ELATA - வாத நாராயணன்
    DESMODIUM GANGETICUM - மூவிலை
    DIASCOREA PURPUREA - செவ்வள்ளிக் கொடி
    DITA BARK - எழிலைப்படை
    DIOSPYROS EBENUM - கருங்காலி
    DIOSPYROS EMBRYOPYERIS - தும்பிலிக்காய்
    DIOSPYROS FERREA - இறும்பிலி
    DIOSPYROS MELANOXYLON - தும்பிலி
    DIOSPYROS PEREGRINA - பனிச்சை
    DOG MUSTARD - வேளை

    E - வரிசை
    ECLIPTA PROSTRATA ROXB. - கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசாலை
    ELUESIN CORORANA GAERTH - கேழ்வரகு
    EMBELIA RIBES BURN. - வாய்விலங்கம்
    ERYTHRINA INDICA - கல்யாண முருங்கை
    EUGENIA JAMBOLANA - நாவல்கொட்டை
    EULOPPIA CAMPESTRIS WALL - சாலமிசிரி
    EUPHORBIA HETROPHYLLA - பால்பெருக்கி
    EUPHORBIA HIRTA - சித்திரப்பாலாடை
    EUPHORBIA LIGULARIA ROXB. - இலைக்கள்ளி
    EUPHORBIA NIVULLIA LAM. - மண்செவிக்கள்ளி
    EUPHORBIA THYMEFOLIA - அம்மன் பச்சரிசி
    EUPHORBIA TIRUCALLI LINN. - கள்ளி
    EVOLVOLUS ALSINODES - விஷ்னுக்கிரந்தி
    EXECALIA AGALLICHA LINN. - தில்லி

    F - வரிசை
    FEVER NUT - சலிச்சிகை
    FICUS BENGHALENSIS - ஆலம்
    FICUS ELASTICA - சீமையால்
    FICUS RACEMOSA - அத்தி
    FLACOURTIA INDICA - சொத்தைக்களா
    FLUGGEA VIROSA - வெட்புலா

    G - வரிசை
    GALENIA ASIATICA - உகாய்
    GARDENIA RESINIFERA - கும்பிலி
    GARNICIA CAMBOGIA - கொறுக்காய்ப்புளி
    GARNICIA GUMMI-GUTTA - பனம்புளி
    GARNICIA INDICA - முருகல்
    GARNICIA SPINATA - கோகொட்டை
    GARUGA PINNATA - ஆறுநெல்லி, கருவெம்பு
    GAUZUMA ULMIFOLIA - தேங்காய்
    GELORIUM ANGUSTIFLORA - வரித்தோல்
    GENDURASA VULGARIS - கருநொச்சி
    GINSENG - குணசிங்கி
    GISEKIA PHARNACEOIDES - நாவமல்லிக் கீரை, மணலக் கீரை
    GLOREOSA SUPERBA - கலப்பைக்கிழங்கு, கண்வலிக்கிழங்கு
    GLYCOSMIS MAURITANIA - கொஞ்சி
    GOTU KOTA - வல்லாரை
    GOVERNOR'S PLUM - சொத்தைக்களா
    GUM BENZOINE - தூபவர்க்கம்
    GYMNEMA SYLVESTRE - அமுதுபுஷ்பம், சிறுகுறிஞ்சான்

    H - வரிசை
    HIBISCUS - செம்பருத்தி
    HALARRHENA ANTIDYSENTERIA - குளப்பாலை, குடசப்பாலை
    HEDYCHIUM SPICATUM - பூலங்கிழங்கு
    HELICLERIS ISORA - வலம்பிரி
    HELIOTROPIUM INDICUM - தேள் கொடுக்கி
    HELIOTROPIUM KERALENSE - தேள் கட்டை
    HEMIDESMUS INDICUS - நன்னாரி
    HIBISCUS SURATTENSIS - புளிச்சைக்கீரை, காட்டுப்புளிச்சை
    HIBISCUS VITIFOLIUS - மணித்துத்தி
    HOLOSTEMMA ADA-KODIEN - பலைக்கீரை
    HYBANTHUS ENNEASPERMUS - ஓரிதழ் தாமரை
    HYDNOCARPUS ALPINA - ஆத்து சங்கலை
    HYGROPHYLIA AURICULATA - நீர்முள்ளி

    I - வரிசை
    IMPALIENS BALASAMINE - காசித்துப்பை
    INTERMEDLAR TREE - மகிலா மரம்
    IODINIUM SUFFRUTICOSIUM - ஓரிதழ்த் தாமரை, சூரியகாந்தி
    IPOMEA CARNEA - நெய்வேலி காட்டாமணக்கு
    IPOMEA QUAMOCLIT - மயிர் மாணிக்கம்
    IPOMEA SEPIARIA - தாலிக்கீரை

    J - வரிசை
    JANAKIA ARAYALPATHRA - அமிர்தபலா
    JATROPHA GOSSIPIPHOLIA - முள்கத்திரி

    K - வரிசை
    KAEMPFERIA GALANGA - கச்சோளம்
    KINGIODENDRON PINNATUM - மடையன் சாம்பிராணி
    KIRAGANELIA LINEATA - நீர்ப்பாளை
    KIRAGANELIA RETICULATA - புல்லந்தி
    KNEMA ATTENUATA - சோரப் பத்திரி, சூரியப் பத்திரி

    L - வரிசை
    LAMPRACHAENIUM MICROCEPHALUM - பிரம்மதந்தி
    LANTANA CAMARA - உன்னிச்செடி
    LAWSONIA INERMIS - மருதாணி
    LEMONGRASS - எலுமிச்சைப்புல்
    LEPISANTHES TETRAPHYLLA - குகமதி
    LEUCAS ASPERA - தும்பை
    LIPPIA NODIFLORA - பொட்டுத்தலை
    LONG LEAVED BARLERIA - கோல்மிதி
    LOVE VINE - கஷ்கொட்டை
    LUFFA ACUTANGULA - பெருபீர்க்கம்

    M - வரிசை
    MADHUCA LONGIFOLIA - நாட்டிலுப்பை
    MADHUCA NERIIFOLIA - ஆத்து இலுப்பை
    MALABAR GLORY LILY - கலப்பைக் கிழங்கு
    MANILKARA HEXANDRA - கணுப்பலா, காட்டுப்பலா
    MARSILIA - நீராரை
    MARSILIA QUADRIFIDA - ஆரை
    MEMECYLON TINCTORIUM - காயா
    MEMECYLON UMBELLATUM - காசன்
    MICHELIA CHAMPALA - செண்பகம்
    MICHELIA NILAGIRICA - காட்டுச் செண்பகம், நீலகிரி செண்பகம்
    MILLINGTONIA HORTENSIS - மர மல்லிகை
    MIMUSOPS ELENGI - மகிழம்பூ
    MORINDA LINCTOSA - நுணா, நுணவு
    MORINGA CONCANENSIS - காட்டு முருங்கை
    MUCUNA PRURIENS - பூனைக்காலி
    MUKIA MADERASPATANA - முசுமுசுக்கை
    MURRAYA KOENIGII - கருவேப்பிலை
    MUSA SAPIENTUM - நவரை
    MYRISTICA DACTYLOIDES - காட்டு ஜாதிக்காய், காக்காய் மூஞ்சி
    MYRISTICA MALABARICA - பத்திரி
    MYROXYLON BALSAMUM - சாம்பிராணி
    MYRRH - வெள்ளைப்போளம்

    N - வரிசை
    NARDOSTATHYS GRANDIFLORA - ஜாதமாசி, ஜாதமஞ்சி
    NERVILIA ARAGOANA - ஓரிலைத் தாமரை
    NELUMBO NUCIFERA - தாமரை
    NIGELLA SATIVA - கருஞ்சீரகம்
    NILGIRIATHUS CILIATUS - சின்னக் குறிஞ்சி
    NUX VOMICA - எட்டிமரம்
    NOTHAPODYTES NIMMIONANA - அரளி, பெரும்புளகி
    NYCTANTHES ARBOR-TRISTIS - பவழமல்லிகை

    O - வரிசை
    OATS - காடைக்கண்ணி
    OCHREINAUCLEA MISSIONIS - ஆத்து வஞ்சி, நீர் வஞ்சி
    OCIMUM BASILICUM - திருநீற்றுப் பச்சிலை
    OCIMUM TENUIFLORUM - துளசி
    OPERCULINA TURPETHUM - சிவதை, பகந்திரை
    OPUNTIA STRICTA VAR. DILLENII - சப்பாத்திக்கள்ளி
    ORCHUS MASOULA - சாலாமிசிரி
    ORMOCARPUM SENNOIDES - எலும்பொத்தி
    OROXYLUM INDICUM - அச்சி
    OXALIS CORNICULATA - புளியாரை

    P - வரிசை
    PALAQUIN ELLIPTICUM - காட்டிலுப்பை
    PANDALUS ADORATTISIMUS - தாழை
    PANICUM MILIACUM - பணிவரகு
    PANICUM MILLIARE - சாமை
    PAVETTA INDICA - பாவட்டை
    PEARL MILLET - கம்பு
    PEDALIUM MUREX - பெரு நெருஞ்சில், யானை நெருஞ்சில்
    PERSEA MACRANTHA - கூலமாவு, கோலமாவு
    PHOENIX LOUREIRII - சிறு ஈச்சன்
    PHOENIX PUSSILA - தரை ஈச்சன்
    PHYLANTHUS AMARUS - கீழாநெல்லி
    PHYLANTHUS EMBLICA - நெல்லி
    PHYLANTHUS FRATERNUS - கீழாநெல்லி
    PHYLANTHUS RETINUS - மெலநெல்லி
    PHYLANTHUS VIROSA - இருபுலை
    PIAMELOMANIA AROMATICA - தீர்க்கந்தை
    PIPER BARBERI - காட்டு மிளகு
    PIPER LONGUM - ஆதிமருந்து, திப்பிலி
    PIPER MULLESUA - காட்டுத் திப்பிலி
    PIPER NIGRUM - குறுமிளகு
    PITHECELLOBIUM DULCE - கொடுக்கப்புளி
    PONGA PINNIATA - புங்கை
    PONTEDERIA VAGINDIS - குவளை
    PREMNA CORYMBOSA - கூழாமணிக்கீரை, முன்னை
    PREMONTHES SONCHIFOLIA - சுவர்முள்ளங்கி
    PSEUDARTHRIA VETTIVEROIDES - கறுவேர்
    PSEUDARTHRIA VISCIDA - மூவிலை பச்சிலை
    PSORALIA CORYLIFOLIA - கார்போக அரிசி
    PTEROCARPUS SANTALINUS - செங்குங்குமம், சிவப்பு சந்தனம், சந்தன வெங்கை
    PUERARIA TUBEROSA - கரிக்கும்மடி
    PUNCTURE PLANT - நெறிஞ்சி
    PURPLE MALLOW - ஒட்டத்தி

    Q - வரிசை

    R - வரிசை
    RAUVOLFIA SERPENTIA - சர்பகந்தி
    RHAPHIDOPHORA PERTUSA - ஆனைப்பிரண்டை
    RHUS SUCCEDENEA - கர்க்கடசிங்கி
    RIBBER GOURD - பெருபீர்க்கம்
    ROSARY PEA - குண்றிமணி
    RYE - புல்லரிசி

    S - வரிசை
    SAGITTARIA OBTUSIBOLIA - குதிரைக் குளம்படி
    SALACIA OBLONGA - பொங்கொரந்தி
    SALVADORA PERSICA - உகாய்
    SANTALUM ALBUM - சந்தனம்
    SAPIUM INSIGNE - கருப்புச்சுடை
    SARACA ASOKA - அசோக மரம்
    SARACA DINDICA - அசோகம்
    SARAVASTA ARISTAM - சடாமஞ்சில்
    SARCOSTEMMA INTERMEDIUM - கொடிக்கள்ளி
    SAUSUREA COSTUS - கொட்டம்
    SAW PAMETTO - சீமைக்கதலை
    SCINDAPUS OFFICINALIS - யானைத்திப்பிலி
    SCOPARIA DULCIS - சர்க்கரை வெம்பு
    SECALE CEREALE - புல்லரிசி
    SECURINEGA LEUCOPYRUS - மட்புலந்தி, வெள்ளைப்புலா
    SECURINEGA OBOVETA - வேப்புலந்தி
    SECURINEGA VIROSA - புலா
    SEHREBERA SWIENTENOIDES - மகாலிங்க மரம்
    SEMECARPUS TRAVANCORICA - காட்டுச்செங்கொட்டை
    SENNA AURICULATA - ஆவாரை
    SESBANIA GRANDIFLORA - அகத்தி
    SHOREA TUMBUGGAIA - தம்பகம்
    SIDA ACUTA - வட்டத்திரிப்பி
    SIRIS TREE - வாகை
    SMILAX ZEYLANICA - காட்டுக்கொடி
    SOLANUM ERIANTHUM - யானை சுண்டைக்காய்
    SOLANUM INDICUM - முள்கத்திரி
    SOLANUM NIGRUM - மனத்தக்காளி
    SOLANUM TORVUM - சுண்டை(க்காய்)
    SOLANUM TRILOBATHUM - தூதுவளை
    SPREADING HOG WEED - மூக்கரத்தைக் கீரை
    SPIRANTHES CALVA - ஆங்காரவள்ளி
    SPONDIAS PINNATA - நரிமங்கை
    SUREGADA ANGUSTIFLORA - படபட்டை
    SWEET FLAG - வசம்பு
    SWERTIA CHIRAYITA - சிரத்தைக்குச்சி
    SWERTIA CORYMBOSA - சிரத்தை
    STERCULIA FOETIDA - குதிரைப்பிடுக்கான்
    STREBLUS ASPER - குட்டிப்பலா
    STYRAX BENZOIN - மலக்காச் சாம்பிராணி
    SWEET BROOM - சர்க்கரை வெம்பு
    SYMPLOCOS RACEMOSA - வெள்ளிலாதி
    SYZEGIUM CUMINA - நாவல்
    SYZYGIUM JAMBOLANUM - நாவல் கொட்டை

    T - வரிசை
    TAMARANDUS INDICA - புளி(யான்)
    TAXUS BUCATA - தாலிசபத்திரி
    TERMINALIA ARJUNA - மருதமரம்
    TERMINALIA BELERICA - தான்றிக்காய்
    TERMINALIA CHEBULA - கடுக்காய்
    THICK-LEAVED LAVENDER - கர்ப்பூரவள்ளி
    TINOSPORA CARDIFOLIA - சீந்தில் கொடி
    TINOSPORA SINENSIS - பேய் அமுது
    TOOTHBRUSH TREE - உகாய்
    TRAGIA BICOLOR - மலைச் செந்தத்தி
    TRAGIA CANNABINA - தூரலோபம்
    TRAGIA INVOLUCRATA - தூரப்பரிகம்
    TRAGIA PLUKENETTI - சிறுகாஞ்சொரி
    TRIANTHEMA ECANDRA - சத்திச்சாரணை
    TREWIA NUDIFLORA - அத்தரசு, நாய்க்குமுளி
    TRIANTHEMA ECANDRA - சத்திச்சாரணை
    TRIANTHEMA PENTANDRA - சாரணை
    TRIBULLUS TERRESTRIS - நெறிஞ்சி
    TRICHOPUS ZEYLANICUS - ஆரோக்கியப் பச்சை
    TRIGONELLA FOENUM - வெந்தையம்
    TRIUMFETTA RHOMBOIDA - காட்டுவெண்டை

    U - வரிசை
    ULTERIA SALICIFOLIA - உத்லீர்
    URENA LOBATA - ஒட்டத்தி

    V - வரிசை
    VATERIA INDICA - வெள்ளைக் குந்திரிகம்
    VATERIA MACROCARPA - வெள்ளைப் பயின்
    VERBACIFOLIUM SOLANUM - சுண்டை
    VIGINEA INDICA - காட்டுவெங்காயம்
    VITEX NEGUNDO - நொச்சி
    VITIS LANATA - நரளை

    W - வரிசை
    WATER HYACINTH - ஆகாயத் தாமரை
    WATER SHAMROCK - நீராரை
    WATTAKARA VOLUBILIS - குரிஞ்சான்
    WEDELIA CALENDULACEA - பொன்னிரைச்சி
    WEDELIA CHINENSIS - மஞ்சள் கரிசாலி
    WESTINDIAN LEMONGRASS - வாசனைப்புல்
    WILD ASPARAGUS - சதவலி
    WINTER CHERRY - அமுக்கரா
    WITHANIA SOMNIFERA - அமுக்கரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி
    WOODFORDIA FRUTICOSA - வேலக்காய்

    X - வரிசை
    XYLIA AMERICANA - கலை, கடலிரஞ்சி
    XYLIA XYLOCARPA - இருள்

    Y - வரிசை
    YELLOW SPIDER FLOWER - நாய்க்கடுகு
    YLANG YLANG - மனோரஞ்சிதம்

    Z - வரிசை
    ZIZIPHUS JUJUBA - இலந்தை
    ZIZIPHUS MAURITANIA - பல்லவப்பருனிச்செடி, முன்னதிமது
    ZIZIPHUS NUMMULARIA - நரியிலந்தை, கொர்கொடி
    ZIZIPHUS OENOPLIA - சூரைமுள்ளு
    ZIZIPHUS RUGOSA - சூசை
    ZIZIPHUS XYLOPHYRUS - முள்ளுத்துப்பை, கடல்சிரை
    ZIZYPHUS RUGOSA LAM - துடரி
    ZORNIA DIPHYLLA - சிறுபலதை


    நன்றி : http://www.eegarai.net

    ஞாயிறு, 29 ஜூலை, 2012

    மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?


    மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?


    நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ள போவது மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ? என்பதைப் பற்றி... இவையாவும் என் சொந்த கருத்துக்கள். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய /சந்தித்த நண்பர்களிடம் இருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள். தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... இனி...

    மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ? நண்பர்களின் கருத்தைப் பார்ப்போம்...

    01 : நிறைய உதவி செய்தேன்... இப்ப..? நன்றி கெட்ட மனுசங்க தான்.
    02 : அடுத்தவனை ஏமாற்றி விட்டு வாழ்கிறானே... அவன் தான்.
    03 : எல்லாமே தனக்குத் தான் என்று நினைக்கிற சுயநலக்காரன் தான்.
    04 : கர்வம் அல்லது அகங்காரம் உள்ள மனுசங்க தான்.
    05 : பொறாமை குணம், பேராசை உள்ள மனுசங்க தான்.
    06 : பொய்யைத் தவிர எதுவுமே பேசுவதில்லை. அவங்க தான்.
    07 : விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவங்க தான்.
    08 : தவறு செய்ததை மன்னிக்க தெரியாத கோபக்கார மனுசங்க தான்.
    09 : எல்லாவற்றிக்கும் சந்தேகப்படும் மனுசங்க தான்.
    10 : நம்ப வைத்து கழுத்தரிக்கும் துரோகிங்க தான்.
    11 : பணத்தால் மாறுகிற, பணம் தான் எல்லாமே என்று வாழும் மனுசங்க.
    12 : எனக்கு ஜால்ரா அடிப்பவனை தவிர, என் கருத்தை எவன் ஏற்றுக்
           கொள்ளவில்லையோ அவன் தான்.
    13 : பாராட்டோ, வெற்றியோ அல்லது ஒரு அங்கீகாரம் வந்தவுடனே தலை
           கால் புரியாமே ஆடுகின்ற மனுசங்க தான்.
    14 : வாழ்க்கையில் பல தவறுகள் செய்து கொண்டு, தினமும்
           மணிக்கணக்கில் தன்னைப் பற்றி பிரார்த்தனை செய்கின்ற
           "பசுத்தோல் போர்த்திய புலி" வேசம் போடும் நயவஞ்சகக்காரன் தான்.
    15 : எல்லா கெட்ட பழக்கங்களையும் (புகை, பாக்கு, மது, மாது, etc,) செய்து
           கொண்டு, தன்னையும், தன் குடும்பத்தையும் கெடுக்கிறது இல்லாம,
           அடுத்தவனையும் கெடுக்கிறானே... அவன் தான்.
    16, 17, 18, 19, 20, ................ இது ஒரு மெகா தொடர் நண்பர்களே...

    இவையெல்லாம் எதனால் வருகிறது...? நம் மனத்தினால் தானே... ஆகவே மனிதனின் மிகப் பெரிய எதிரி அவரவர் மனம் தான்... { ஐ... நான் வந்துட்டேன்... உன் மனசாட்சி தான்... அதுக்குள்ளே முடிவு சொன்னா எப்படி...? ரொம்ப சீரியஸ்யா எழுதுறே மாதிரி இருக்கு. எப்பவும் பாட்டு பாடிக்கிட்டே வேலை செய்வே... சந்தோசமா இல்லேனா அது மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி ஆச்சே... சரி...சரி... நீ எழுது, பாட்டு பாடுறதை குறைச்சிக்கிறேன்... }

    "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னையின் வளர்ப்பினிலே..." என்று கவியரசர் கண்ணதாசன் சொன்னாரே... அன்பையும், பல நல்ல விசயங்களையும் ஊட்டி வளர்கிறார்களே, பிறகெப்படி மனித மனம் மாறுகிறது...? { என்னது...? அன்னையின் வளர்ப்பினிலேயா..? அது அந்தக் காலம்... இப்போ ஆயாவின் வளர்ப்பினிலே தான்... இது பரவாயில்லே, சில வீடுகளில் போகோவும், கார்ட்டூன் நெட்வொர்க்கும் தான், குழந்தைகளை வளர்க்கிறது - இதனாலே பல "ஆட்டிசம்" (மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு) குழந்தைகள் உருவாகப் போகுது. }

    குழந்தை கருவில் வளரும் போது, தாய் எது பற்றி அதிகம் நினைக்கிறாரோ அதன் தாக்கம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஒரு குழந்தையின் ஐந்து வயது வரை என்னென்ன பார்க்கின்றதோ / கேட்கின்றதோ / ரசிக்கின்றதோ / ருசிக்கின்றதோ / இன்னும் என்னென்ன நடக்கின்றதோ, அவை தான் பெரியவனாக வளர்ந்த பிறகும், அந்த குணம் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அப்போ, இதற்கு முழு காரணம் பெற்றோர்கள் என்று சொல்லி விடலாமா ? அந்த குணத்தை மாற்ற முடியாதா ? { சின்ன சந்தேகம் : அம்மா குழந்தையின் மத்தியப் பிரதேசத்தை கவனிப்பாங்க... (வயிறு அதாவது உடல்நலம்) அப்பா குழந்தையின் உத்தரப் பிரதேசத்தை கவனிப்பாங்க... (மூளை அதாவது அறிவு) அப்போ, இதற்கு யார் யார் காரணம் ? அம்மாவா ? அப்பாவா...? இல்லை குழந்தையா ? "பத்துத் திங்கள் சுமந்தாளே, அவள் பெருமைப் படவேண்டும்... உன்னைப் பெற்றதனால் அவள், மற்றவராலே போற்றப்பட வேண்டும்... க‌ற்ற‌வ‌ர் ச‌பையில் உன‌க்காக‌, த‌னி இட‌மும் த‌ர‌ வேண்டும்... உன் க‌ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும், உல‌க‌ம் அழ‌ வேண்டும்..." (படம் : நான் ஏன் பிறந்தேன்) }

    நம் அறிவை வளர்த்துகொள்ள தான் படிக்கிறோம். {அப்படியா ? படித்தால் மட்டும் போதுமா ?} நிறைய விசயங்களையும் அனுபவம் மூலம் பெறுகிறோம். {இது சரி... படிக்காத மேதைகள் பல பேர் உண்டு...} இதனால் நல்ல பண்புகளும், குணங்களும் தானே மேம்பட வேண்டும் ? அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டும் ? "நிறைகுடம் தளும்பாது" என்பார்களே ! {காலி குடமும் அப்படித்தான்} "உன் நண்பர்களைப் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்." என்று சொல்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் நண்பர்களிடம் மட்டும் இருக்கும் காலம் உண்டு... அதாவது படிக்கும் பருவத்தில். அப்போது ஏற்படும் காதலைக் கூட நண்பர்கள் சொல்வது படி அல்லது நண்பரையே தூது விடுவது. { அந்த வயதில் காதல் வருவது சகஜம் தானே... முடிவில் காதலிப்பவருக்கு கல்யாணம் ஆகிவிடும். சில சமயம் தூது விட்ட நண்பருடன் கல்யாணம் ஆகி விடும்...! வெண்ணிலவே... வெண்ணிலவே... விண்ணைத் தாண்டி வருவாயா...? விளையாட ஜோடி தேவை...! (படம் : மின்சார கனவு) } நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களைப் பொறுத்தே நம் குணமும் மாறுகிறது. அது நண்பர்கள் மட்டுமல்ல, யாராக இருந்தாலும்... இரட்டை வேசம் போடும் மனிதர்களிடமிருந்து ஒதுங்கி இருந்தாலே போதும். { "வந்த நாள் முதல் இந்த நாள் வரை... வானம் மாறவில்லை... வான்மதியும், மீனும், கடல் காற்றும், மலரும், மண்ணும், கொடியும், சோலையும், நதியும் மாறவில்லை... மனிதன் மாறிவிட்டான்" (படம் : பாவ மன்னிப்பு ) }

    சரி, அவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது ? அதற்கு பல வழிகள் உள்ளன... பேசுபவரின் கண்ணைப் பார்த்து, பேச்சை வைத்து, செய்கைகளை வைத்து... இன்னும் நிறைய சொல்லலாம். இதற்கு நாம் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக "நான் இருக்கிறேன் கவலைப்படாதே / நான் உதவி செய்கிறேன்" என்று ஒன்றுக்கு நான்கு முறை சொல்பவர்களை (யாராக இருந்தாலும்) நம்பவே கூடாது. சொல்பவர்கள் யாரும் செய்வதில்லை. செய்பவர்கள் யாரும் சொல்வதில்லை. { அடடே ! பஞ்ச் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டியா ? "நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும், நல்லவர் கெட்டவர் யாரென்றும், பழகும் போதும் தெரிவதில்லை, பாழாய் போன இந்த பூமியிலே... முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள், முதுகுக்கு பின்னால் சீரும்... முகஸ்துதி பேசும், வளையும் குழையும், காரியமானதும் மாறும்..ம்... காரியமானதும் மாறும்" (படம் : நாடோடி) }

    நம்ம திருவள்ளுவர் "தெரிந்து தெளிதல்" அதிகாரத்தில், (குறள் எண் 501 முதல் 510௦ வரை) இந்த இரட்டை வேசம் போடும் ஆசாமிகளை எவ்வாறு கண்டு கொள்வது, யார் யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், யார் யாரை நம்ப வேண்டும், நம்பிய பின் என்னென்ன செய்யக்கூடாது - என்று பல விசயங்கள் சொல்லி இருந்தாலும், அவற்றில் இரண்டு குறள்கள் மட்டும் (குறள் எண் 502 மற்றும் 504)
    குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
    நாணுடையான் சுட்டே தெளிவு.
    பொருள் : நல்ல குடியிலே பிறந்து {நல்ல மனிதனாக பிறந்து}, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச்சொல் வரக் கூடாதென்று அஞ்சும் மானமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்.
    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல். பொருள் : ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்.

    நண்பர்களே, நாம் இருக்கும் இடம் பொறுத்து தான் நம் குணம் நல்லதாகவோ, கெட்டதாகவோ மாறுகிறது... அது நம் மனம் தான் தீர்மானிக்க வேண்டும். {அவனால் தான், நான் கெட்டேன் என்பதை விட என்னால் அவன் திருத்தினான் என்பது சிறப்பு.} உண்மையான ஆன்மீகம் என்பதே பிறரிடம் நம்மை காண்பது தான் - ஞாபகம் இருக்கட்டும். ஆக என்னைப் பொறுத்தவரை,

    மனிதனின் மிகப்பெரிய எதிரி : அவரவர் மனம் தான்.

    { "பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு... கண் மூடி போகிறவர் போகட்டுமே... என் மனதை நான் அறிவேன், என் உறவை நான் மறவேன், எது ஆன போதிலும் ஆகட்டுமே... நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்... கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... உன்னை ஏமாற்றும், நீ காணும் தோற்றம்... உண்மை இல்லாதது... அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும், அடையாளம் காட்டும்... பொய்யே சொல்லாதது (படம் : நினைத்ததை முடிப்பவன்)" }


    dindiguldhanabalan. thanks

    சனி, 28 ஜூலை, 2012

    இலவசம் வேண்டாம் நண்பா


    இலவசம் வேண்டாம் நண்பா

    நானும் மற்றொருவரும் பேசிக்கொண்டு இருந்தோம் ,

    அவர் என்னை பார்த்து -
    "எதற்க்காக இத்தனை கஷ்டபடுகிறாய் ?"

    அதற்க்கு நான் -
    "கஷ்டப்படாமல் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும் "

    அதற்க்கு அவர் சிரித்துக்கொண்டே -
    "என்னை பார் , இலவச அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிவிடுவேன் போரடித்தால் இலவசமாக கொடுத்த வண்ண தொலைக்காட்சியை பார்த்து பொழுதை கழிப்பேன், உழைக்காமல் நோய் வந்தால் இலவசமாக அரசு காப்பிடு அதில் உயர் சிகிச்சை பெறுவேன் "

    நான் -
    "உழைக்காமல் எப்படி இத்தனையும் முடியுமா ?"
    அவர் சிரித்துக்கொண்டே -
    "நாம் யார் தெரியுமா ?
    "தமிழ் நாட்டு குடிமகன்"
    நம் நாட்டில் உணவிற்கு அரிசி இலவசமாக தருகிறார்கள்,
    சமையல் கேஸ் அடுப்பும் இலவசம்,
    பொழுது போக்க வண்ண தொலைகாட்சி இலவசம்,
    குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சை இலவசம்,
    எதற்கு உழைக்க வேண்டும்?"

    நான்-
    "உன் எதிர்கால சந்ததியர்களின் நிலை என்ன ?"

    நமட்டு சிரிப்பில் அவர்-
    "மனைவி பிள்ளை பெற்றால் இலவச சிகிச்சையுடன் ருபாய் 5000 , குழந்தைகளுக்கு இலவச படிப்பு மற்றும் சத்தான உணவு அதுவும் முட்டையுடன், பாட புத்தகங்கள் இலவசம் பள்ளிக்கு செல்ல மிதிவண்டி இலவசம் , பேருந்து கட்டணம் இலவசம்,
    பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம், ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்"
    தேவை என்றால் மாப்பிள்ளை பார்க்க பேப்பரில் இலவச விளம்பரம், மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும், இவ்வளவு இலவ்காசம் இருக்க நாம் எதற்கு உழைக்கனும் "

    வியப்பில் வியந்து போனேன் நான் -
    "என் நண்பனே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?"
    இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உள்ளது...
    ஒன்று லஞ்சம்..!
    மற்றொன்று பிச்சை..!
    இதில் நீ எந்த வகை ? எதை நான் எடுத்துக்கொள்வது ?
    உழைக்காமல் உண்டு சோம்பேறி ஆகிறாய் - ஒரு வேலை இலவசம் நின்று போனால் உன் நிலை என்ன ????
    கஷ்ட்டப்பட்டு உழைத்தவர்களிடம் களவாட நீ உள்ளாவாய்,
    சரி இதே நிலை வளர்ந்தால் - அதாவது இலவசம் வளர்ந்தால்
    அமைதி பூங்காவான தமிழகம் கள்வர் பூமியாக மாறும் நிலை
    வெகு தொலைவில் இல்லை .
    நண்பனே விழித்தெழு - உழைத்திடு
    இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
    தமுலகத்தை தலை நிமிரசெய்திடு
    நாளைய தமிழகம் நம் கையில் நண்பனே சிந்திப்பாயா இந்தியாவும் வல்லரசாக வேண்டும் அப்படி ஆகவில்லை என்றாலும் சரி ஒரு சோம்பேறியை பெற்ற தாய் இவள் என்ற உன் அன்னையை இழிவுபடாமல் பார்த்துக்கொள்"
    என நான் கத்தி முடிப்பதற்குள் அவன் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் ...!!!