ஞாயிறு, 29 ஜூலை, 2012
சனி, 28 ஜூலை, 2012
இலவசம் வேண்டாம் நண்பா
இலவசம் வேண்டாம் நண்பா
நானும் மற்றொருவரும் பேசிக்கொண்டு
இருந்தோம் ,
அவர் என்னை பார்த்து -
"எதற்க்காக இத்தனை கஷ்டபடுகிறாய்
?"
அதற்க்கு நான் -
"கஷ்டப்படாமல்
வாழ்க்கையை எப்படி நடத்த முடியும் "
அதற்க்கு அவர் சிரித்துக்கொண்டே -
"என்னை பார் , இலவச அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிவிடுவேன் போரடித்தால்
இலவசமாக கொடுத்த வண்ண தொலைக்காட்சியை பார்த்து பொழுதை கழிப்பேன், உழைக்காமல் நோய்
வந்தால் இலவசமாக அரசு காப்பிடு அதில் உயர் சிகிச்சை பெறுவேன் "
நான்
-
"உழைக்காமல் எப்படி இத்தனையும் முடியுமா ?"
அவர் சிரித்துக்கொண்டே
-
"நாம் யார் தெரியுமா ?
"தமிழ் நாட்டு குடிமகன்"
நம் நாட்டில் உணவிற்கு
அரிசி இலவசமாக தருகிறார்கள்,
சமையல் கேஸ் அடுப்பும் இலவசம்,
பொழுது போக்க
வண்ண தொலைகாட்சி இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சை
இலவசம்,
எதற்கு உழைக்க வேண்டும்?"
நான்-
"உன் எதிர்கால சந்ததியர்களின்
நிலை என்ன ?"
நமட்டு சிரிப்பில் அவர்-
"மனைவி பிள்ளை பெற்றால் இலவச
சிகிச்சையுடன் ருபாய் 5000 , குழந்தைகளுக்கு இலவச படிப்பு மற்றும் சத்தான உணவு
அதுவும் முட்டையுடன், பாட புத்தகங்கள் இலவசம் பள்ளிக்கு செல்ல மிதிவண்டி இலவசம் ,
பேருந்து கட்டணம் இலவசம்,
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை 25000 இலவசம்,
ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்"
தேவை என்றால் மாப்பிள்ளை பார்க்க
பேப்பரில் இலவச விளம்பரம், மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும், இவ்வளவு
இலவ்காசம் இருக்க நாம் எதற்கு உழைக்கனும் "
வியப்பில் வியந்து போனேன் நான்
-
"என் நண்பனே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?"
இலவசம் என்பதற்கு இரண்டு
அர்த்தம் உள்ளது...
ஒன்று லஞ்சம்..!
மற்றொன்று பிச்சை..!
இதில் நீ எந்த
வகை ? எதை நான் எடுத்துக்கொள்வது ?
உழைக்காமல் உண்டு சோம்பேறி ஆகிறாய் - ஒரு
வேலை இலவசம் நின்று போனால் உன் நிலை என்ன ????
கஷ்ட்டப்பட்டு உழைத்தவர்களிடம்
களவாட நீ உள்ளாவாய்,
சரி இதே நிலை வளர்ந்தால் - அதாவது இலவசம் வளர்ந்தால்
அமைதி பூங்காவான தமிழகம் கள்வர் பூமியாக மாறும் நிலை
வெகு தொலைவில் இல்லை
.
நண்பனே விழித்தெழு - உழைத்திடு
இலவசத்தை வெறுத்திடு - அழித்திடு
தமுலகத்தை தலை நிமிரசெய்திடு
நாளைய தமிழகம் நம் கையில் நண்பனே சிந்திப்பாயா
இந்தியாவும் வல்லரசாக வேண்டும் அப்படி ஆகவில்லை என்றாலும் சரி ஒரு சோம்பேறியை பெற்ற
தாய் இவள் என்ற உன் அன்னையை இழிவுபடாமல் பார்த்துக்கொள்"
என நான் கத்தி
முடிப்பதற்குள் அவன் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் ...!!!
வியாழன், 26 ஜூலை, 2012
அன்னையரை போற்றுவோம்!!!
அன்னையரை போற்றுவோம்!!!
13 May 2012
அன்னை, இறைவன் இவ்வுலகில் மனிதனுக்கு அளித்த
அற்புதமான உறவாகும். அம்மா, மம்மி, மதர், உம்மா, மா என்று பல்வேறு மொழிகளில்
தாய்க்கான சொற்கள் காணப்பட்டாலும் அவற்றிற்கிடையே ஒரு இனம் புரியாத தொடர்பிருப்பதை
உணரமுடியும்.
திங்கள், 16 ஜூலை, 2012
500 மில்லியன் ஆண்டு பழைய பக்ரீரியா உயிர்த்தது !
500 மில்லியன் ஆண்டு பழைய பக்ரீரியா உயிர்த்தது !
13 July, 2012 by adminசுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பக்ரீரியா ஒன்றை விஞ்ஞானிகள் உயிரூட்டியுள்ளனர். அதாவது இறந்த அந்த பக்ரீரியாவை மீண்டு உயிரூட்டியுள்ளனர். இது எவ்வாறு சாத்தியம் என்று கேட்கிறீர்களா ? 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து, ஆனால் இயற்கையாகவே பாதுகாத்து வரப்பட்ட பக்ரீரியா ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். அதன் ஜீன்களை தனியே பிரித்து எடுத்து, ஈ கொயில் என்னும் பக்ரீரியாவுடன் இனப்பெருக்கம் செய்யவைத்து, பின்னர் அதன் ஜீன்களை எடுத்து தனியாக ஒரு பக்ரீரியாவை அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். இது இந்த 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பக்ரீரியாவின் மூலப் பிரதி ஆகும்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட பக்ரீரியா, தற்போது(நிகழ்காலத்தில்) உள்ள பக்ரீரியாக்களை விட நல்ல சுகதேகியாகவும், வீரியம் மிக்கதாகவும் இருப்பதாக நாசாவின் உயிரியல் விஞ்ஞானப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த பக்ரீரியா படுவேகமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதாகவும், அது பெருகிக்கொண்டு செல்வதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதனால் மனிதர்களுக்கு என்ன ஆபத்து விளையும் என்பது தொடர்பாகவும், இது நல்ல பக்ரீரியாவா இல்லை மனிதர்களுக்கு கேடுவிளைவிக்கும் பக்ரீரியாவா என்றும் அவர்கள் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
படு ஆபத்தான இந்த ஆராட்சியை மேற்கொள்ளும் நாடு எது என்று நாம் சொல்லவே தேவையில்லை ! சாட் சாத் அமெரிக்காவே தான்... இவ்வாறு தான் இவர்கள் எயிட்ஸ் வைரசையும் கண்டு பிடித்து பரப்பினார்கள் ! ... இபோது பக்ரீரியாவோடும் விளையாடுகிறார்கள்... கிரிகெட் விளையாடலாம் , வாலிபோல் விளையாடலாம் ஏண்டா பக்ரீரியாவோட விளையாடுறீங்க ? கவுண்டமணி இப்படித்தான் சொல்லியிருப்பரில...
athirvu thanks
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)