சிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும்
இவைகள் நாடுகளின் இயற்கையின் சிறப்பியல்பையும் சுற்றச்சுழலின் அமைவிடத்தையும் கொண்டே இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
அழியா அதிகாலை அமைதி நாடு - கொரியா.
எழுமலைகளின் நகரம் - ரோமாபுரி
அயிரம் எரிகள் நாடு - பின்லாந்து
இருண்ட கண்டம் - ஆபிரிக்கா
இந்தியாவின் வாசல் - மும்பாய் துறைமுகம்
உலகத்தின் கூரை - பமீர்
உலகத்தின் தடுக்கப்பட்ட இடம ; - திபத்
உலகின் சக்கரை கிண்ணம் - கியுபா
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிஸ்சிலாந்து
ஐரோப்பாவின் காப்பகம் - பெல்ஐpயம்
ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி
ஐரோப்பாவின் போர்களம் - பெல்ஐpயம்
ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து
கனவுக் கோபுர நகரம் - ஐக்ஸ்போட் (இங்கிலாந்து)
கருங்கல் நகரம் - அபர்தீன்
நள்ளிரவு சூரிய உதய நாடு - நோர்வே
புன்னகை நாடு - தாய்லாந்து
மரக தீவு - அயர்லாந்து
தங்கப்போர்வை நாடு - அவுஸ்ரேலியா
சூரியன் உதிக்கும் நாடு - ஐப்பான்
நைல் நதியின் கொடை - எகிப்து
பொற் கோபுர நாடு - பர்மா
பொற் கதவு நகரம் - சான்பிரான்சிக்கோ (அமெரிக்கா)
பொற்கோல் நகரம் - அமிர்தசரஸ் (இந்தியா)
உப்பு நகரம் - வெனிக்ஸ்சா (போத்தக்கல்)
எழகுன்றுகளின் நகரம் - வாடிகன்
இது தேடி எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.
மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்
இன்று நமது மருத்துவ கண்டுபிடிப்புக்கள் மிகவும் உச்ச
நிலையில் காணப்பட்டாலும் அதற்கு நமது முன்னோடிகள் கண்டுபிடிப்புக்கள் தான்
அடித்தளமானது. அவர்களின் சிலரது கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட
ஆண்டுகளும்
மருத்துவத்துறையின் தந்தை- ஹிப்போகிரட்டீஸ்
- நோய்கள் பக்டீரியாக்கள்,வைரஸ் மூலமே பரவுகிறது என்பதை முதன்முதலில் நிரூபித்தவர்- ஹிப்போகிரட்டீஸ்- கிரேக்கம்- கி. மு. 460 முதல் கி. மு. 370.
- இரத்த சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹார்வே- பிரித்தானியா-1628.
- புற்று நோயைக் கண்டுபிடித்தவர் - ரொபர்ட வெய்ன பெரி- அமெரிக்கா-1682.
- உடற்கூற்றியல் முறையினை அறிமுகப்படுத்தியவர் -அலபர் சர்வானஹாலர்-சுவிஸ்சிலாந்து-1757.
- அம்மை குத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் - எட்வேர்ட் nஐன்னர்-அமெரிக்கா -1796.
- ஸ்ரெதஸ் கோப்பை கண்டுபிடித்தவர் - ரேனோலானக்-பிரான்ஸ்-1819.
- மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர் - Nஐம்ஸ் சிம்பஸன்-பிரித்தானியா-1847.
- போலியோ முக்கூட்டு வக்ஸீ;சனைக் கண்டுபிடித்தவர் - அல்பெர்ட் சேபின்- அமெரிக்கா-1854.
- வெறி நாய்க்கடி சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - லூயி பாஸ்டர்- பிரான்ஸ்-1860.
- குஷ்டரேக கிருமியை கண்டுபிடித்தவர் - ஹான்ஸன்-நோர்வே-1873.
- கோலரா காசநோய்க் கிருமியை கண்டுபிடித்தவர் - றொபர்ட்கோச்- Nஐர்மனி-1877.
- இரத்தம் உறைதலைக் கண்டுபிடித்தவர் - பால்எர்ல்ச்-Nஐர்மனி-1884.
- தொடுகை வில்லையைக் கண்டுபிடித்தவர்- அடோல்ஃப் ஃபிக்- ஐர்மனி-1887.
- மனோதத்துவ சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - சிக்மண்ட்பிராய்ட்-அவுஸ்ரேலியா-1895.
- புகைப்பட சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - சே பின்சன-டென்மார்க்-1903.
- இதயமின் அலைப்படத்தைக் கண்டுபிடித்தவர் - என்தோவன்-நெதர்லாந்து-1906.
- நீரிழிவு நோயைக் கண்டுபிடித்தவர் - பெண்டிக் கெஸட்- கனடா-1921.
- திறந்த இருதய அறுவைச் சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர்- சோல்ரன் வில்லிஹெஸ்- அமெரிக்கா-1953.
உலக பதிவுலகில் முதன் முறையாக....படிக்கவந்த
நண்பர்களெல்லாம் ஒட்டு போட்டுட்டு போங்களே!!
கொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு-01
ஆபிரகாம் லிங்க்கன்
ஜேம்ஸ் கார்ஃபீல்ட்
பத்திரிசு லுமும்பா
ஆபிரகாம்
லிங்க்கன் (பிறப்பு பெப்ரவரி 12 1809—இறப்பு ஏப்ரல் 15 1865) ஐக்கிய அமெரிக்காவின்
16 வது குடியரசுத் தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை
ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர்
ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின்
குடியரசுச் தலைவராக வெற்றி பெற்றார். 1865 இவர் வாஷிங்ட்டன் டி.சி யில் உள்ள
ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க
ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்
ஜேம்ஸ் கார்ஃபீல்ட்
ஜேம்ஸ் ஏபிராம் கார்ஃபீல்ட் நவம்பர் 19
1831 – செப்டம்பர் 19 1881) ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஆவார்.
இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அதிபர் பதவியில் இருந்தார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் இவரின் அரசியல் எதிராளியான சார்ல்ஸ் கிட்டோ
என்பவனால் ஜூலை 2 1881 இல் காலை 9:30 மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த நிலையில் செப்டம்பர் 19 இல் இவர் இறந்தார்
பத்திரிசு லுமும்பா
பத்திரிசு எமெரி லுமும்பா (ஜூலை 2
1925 – ஜனவரி 17 1961) ஆபிரிக்கத் தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்ஜியத்திடம் இருந்து தமது நாட்டை
ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர்
லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது
கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை
செய்யப்பட்டார்
ஆங்
சான்
இந்திரா காந்தி
ஜெனரல் ஆங் சான் பெப்ரவரி 13 1915 – ஜூலை
19 1947) என்பவர் பர்மாவின் புரட்சியாளர் தேசியவாதி இராணுவ மேஜர் மற்றும்
அரசியல்வாதி ஆவார். ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26 1942 இல்
உருவாக்கினார். இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர்.
ஆனாலும் பர்மா விடுதலை அடைய ஆறு மாதங்களின் முன்னரே படுகொலை
செய்யப்பட்டார்
இந்திரா காந்தி
இந்திரா காந்தி
இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால்
நேருவின் ஒரே மகளும் ஆவார். பிறப்பு நவம்பர் 19 1917அலகாபாத் உத்தரப் பிரதேசம்ஜனவரி
19 1966 இல் பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில்
இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று
ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி
1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும்
வரை பதவியில் இருந்தார்.அக்டோபர் 31 1984 இல் சீக்கியர்களான அவரது சொந்தப்
பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
முகமது நஜிபுல்லா
நஜிபுல்லா பாஷ்தூ ஆகஸ்ட் 1947 - செப்டம்பர் 27 1996) கம்யூனிச ஆப்கானிஸ்தானின் நான்காவதும் கடைசி அதிபராகவும் இருந்தவர். முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் 1996 இல் காபூல் நகரைக் கைப்பற்றிய போது நஜிபுல்லா மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பாஷ்டன் இனத்தில் பிறந்தவர். காபூல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்
நஜிபுல்லா பாஷ்தூ ஆகஸ்ட் 1947 - செப்டம்பர் 27 1996) கம்யூனிச ஆப்கானிஸ்தானின் நான்காவதும் கடைசி அதிபராகவும் இருந்தவர். முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் 1996 இல் காபூல் நகரைக் கைப்பற்றிய போது நஜிபுல்லா மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பாஷ்டன் இனத்தில் பிறந்தவர். காபூல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்
சில கடல்வாழ் உயிரினங்களும் அவற்றின் தனிச் சிறப்புக்களும்
சாக்குக்கணவாய் ( ஒக்டோபஸ்)
சாக்குக்கணவாய் (தமிழில் பேய்க்கடம்பான்,சாக்குச்சுருளி,
சிலந்திமீன்,நீராளி எனவோ அல்லது ஆங்கிலப் பெயரை ஒலிப்பெயர்த்து ஒக்டோபஸ் என்றோ
அல்லது தமிழக வழக்குப்படி ஆக்டோபஸ் என்றோ வழங்கலாம்) என்னும் கடல்வாழ் விலங்கு
எட்டுக்கைகள் கொண்ட எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு. சாக்குக்கணவாய் என்னும்
இவ்விலங்கு மெல்லுடலிகள்(Mollusca)என்னும் தொகுப்பில்
இதலைக்காலிகள்(cephalopod)என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது (Octopoda)
எண்காலிகள் என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு. தலைக்காலிகள்
(cephalopod)என்னும் வகுப்பில் 300 வகையான சாக்குக்கணவாய் உள்ளன என்று
கண்டிருக்கின்றார்கள்.இவை மொத்த
தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு
ஆகும்.
சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததால் மிகச்
சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ
வரையான அளவுகளில் உண்டு. கணவாய்க்கு மூன்று இதயங்கள்உண்டு. கணவாயின் இரத்தம்
நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் செப்பு உள்ளஈமோசயனின் (hemocyanin)
என்னும் புரதப்பொருள் உள்ளதால் உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக
மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). சாக்குக்கணவாயின்
இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின்செதிள் அல்லது பூ (அல்லது இணாட்டு
) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இரைக்கப் பயன் படுகின்றது.
மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப்
பயன்படுகின்றது.முதுகெலும்பிகளில் உள்ள இரத்தத்தில்சிவப்பணுவில் உள்ள
ஈமோகுளோபின்என்னும் இரும்புச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல
சிறந்தது என்றாலும் குளிரான கடல் பகுதிகளில்இ ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில்
ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக
உள்ளது.
சாக்குக்கணவாய்கள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும்
சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்ப்பெரிய
சாக்குக்கணவாய்கள் 4-5 ஆண்டுகள் வாழலாம். இனப்பெருக்கத்திற்கான புணர்ந்தபின் ஆண்
சாக்குக்கணவாய்கள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் சாக்குக்கணவாய்கள்
முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.
பவளப்
படிப்பாறை
பவளப் படிப்பாறை என்பது
பவளங்களின்வன்கூடுகள் ஒன்றன்மேல் ஒன்று படிந்து உருவாகும் அமைப்பு ஆகும். இவை
ஒளிபுகக் கூடிய வெப்ப வலயக் கடற் பகுதிகளில் வளர்கின்றன
இப் பகுதிகள் படிப்பாறைகளை
அடித்துச் செல்லாத அளவுக்கு மென்மையானதும் போதிய அளவு உணவும் ஒட்சிசனும்
கிடைக்கக்கூடிய அளவுக்குக் கடல்நீரைக் கலக்கிவிடக்கூடிய அளவு வலுவானதுமான அலை
இயக்கம் கொண்டவையாக இருத்தல் வேண்டும். இவற்றின் வளர்ச்சிக்கு ஊட்டம் குறைந்த
தெளிந்த மிதவெப்பம் கொண்ட ஆழம் குறைந்த நீர்ப் பகுதி அவசியம். இவ் வன்கூடுகள்
உயிர்ப்புள்ளவையாக இருக்கும்போது அவற்றுள் பவள மொட்டுக்கள்(coral
polyps)இருக்கும்.
டால்பின்
(Dolphin)
தமிழில் ஓங்கில் அல்லது கடற்பன்றி
ஆங்கிலத்தில் (Dolphin) டால்பின் என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி ஆகும். இவை
திமிங்கலங்களுக்குநெருக்கமான இனத்தைச் சேர்ந்தவை. பதினேழு வகையானபேரினங்களில்
சுமார் நாற்பது வகையான ஓங்கில் இனங்கள்உள்ளன. ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல்
இழைவரிவமுடையது.வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. அதன் நுனி கூர்மையாய்
விளிம்பில் சுழியுடையதாய் இருக்கின்றது. ஓங்கில்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5
மீட்டர் நீளம் வரை உள்ளன. இவை 40 கிலோகிராம் எடையில் இருந்து 10 டன் எடை வரை உள்ளன.
டால்பின்கள்ஊனுண்ணிகள் ஆகும். இவைமீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20
ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சிறப்பாக
கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம். ஓங்கில்கள்
அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில்ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன
2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால்பன்னாட்டு ஓங்கில் (டால்பின்) ஆண்டாக
அறிவிக்கப் பட்டுள்ளது
ஒவ்வொரு டால்பினும் தனித்துவமான
சீட்டி (சீழ்க்கை) ஒலியை எழுப்புகின்றன. இவை மனிதர்களின் கை இரேகையைப் போல் ஒவ்வொரு
டால்பினுக்கும் தனித்தன்மையானவை
திமிங்கிலம்
திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி
இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின்
மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கலங்கள் வெப்ப இரத்தப்
பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன
இவை வெப்ப இரத்த விலங்குகள்.
தம் குட்டிகளுக்கு முலைப்பால் ஊட்டுகின்றன. உடலில் கொஞ்சம் மயிரினைக் கொண்டுள்ளன.
இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது
திமிங்கிலங்களுக்கு உடல்வெப்பத்தைத் தக்க வைக்க உதவுகிறது. இவற்றுக்கும் மனிதனைப்
போன்றே இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய்
போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே சுவாசிக்கின்றன.
இத்துளைபலீன் திமிங்கிலங்களுக்கு இரண்டும் பற்திமிங்கிலங்களுக்கு ஒன்றும் உள்ளது.
திமிங்கிலங்கள் தனித்தன்மை வாய்ந்த சுவாச மண்டத்தைக் கொண்டுள்ளதால் இவற்றால்
மூச்சுவிடாமல் நீண்ட நேரம் நீருக்கடியில் இருக்கவியலும். இசுப்பெர்ம் திமிங்கலம்
எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலத்தால் இரண்டு மணிநேரம் நீருக்குள் மூச்சடக்கி இருக்க
முடியும்
ஆழக் கடலின் வெளிச்சம் அறவே
இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo
location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும்
முறையாகும்.
(Cetacea)
கடற்பாலூட்டி
கடற்பாலூட்டி (Cetacea) என்பது
திமிங்கிலங்கள் கடற்பசுக்கள் கடற்பன்றிகள் போன்ற பாலூட்டிவகையைச் சேர்ந்த கடல்வாழ்
உயிரின வகையைச் சேர்ந்த ஒரு விலங்கைக் குறிக்கும்.கடற்பாலூட்டிகள் நீர் வாழ்வுக்கு
இசைவாக்கம்பெற்ற பாலூட்டிகள் ஆகும். இவை இருமுனையும் கூம்பிய உடலமைப்புக் கொண்டவை.
முன் கால்கள் நீந்துவதற்கு ஏற்ற வகையில் துடுப்புக்கள் போல் மாற்றம் பெற்றுள்ளன.
பின்னங் கால்கள் குறுகி உறுப்பெச்சங்களாகக் காணப்படும். இக் கால்கள்
முதுகெலும்புடன் இணைக்கப்படாமல் உடலுக்குள்ளேயே காணப்படுகின்றன. இவற்றில் உடலில்
பெரும்பாலும் உரோமங்கள் இருப்பதில்லை. ஆனால் இவற்றில் உடல் தடிப்பான
தோலயற்கொழுப்புப் படையினால் காக்கப்படுகின்றது. இவ்விலங்குகள்
பொதுவாகப்புத்திக்கூர்மை கொண்டவை எனக்
கருதப்படுகின்றன
உலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள்
லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம் Beluga
லூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம்
வெண்திமிங்கலம்
வடதுருவப்பகுதிக் கடலில் மட்டும்
வாழும் ஒரு வகைபாலூட்டி.
இந்தச் சிறிய வகை
திமிங்கிலம் 5 மீட்டர் (16அடி) நீளம் வரை வளரக்கூடியது. அனைத்து வகையான கடல்
பன்றிகளை (டால்பின்) விடப் பெரியதாகவும் (மிகப்பெரிய டால்பின்வகைகளை அல்ல) அனைத்து
வகையான பற்கொள் கொண்ட திமிங்கிலங்களை விட சிறியதாக தோற்றம் கொண்டது. பெண்பால் வகையை
விட ஆண் வகைகள்
பெரியதாக வளரும். ஆண் வெள்ளைத் திமிங்கிலங்கள் 1360 கிலோ வரையும் பெண் 900
கிலோ வரை எடை கொண்டது.பிறந்த உடன் 1.5 மீட்டர்(5 அடி) நீளமும் 80 கிலோ எடையும்
இருக்கும். பொதுவாக பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் இருக்கும்.
Sarus
Crane சாரசு கொக்கு
சாரசு
கொக்கு என்பது இந்தியாவில்நடுப்பகுதியிலும் கங்கையாற்றுப்படுகையிலும் வட
பாக்கித்தான் நேபாளம் தென்கிழக்கு ஆசியா ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படும்
ஒரு வகைப் பெரியகொக்கு. இது 5 அடி உயரம் வரை இருக்கும்
நன்கு
வளர்ந்த சாரசு கொக்குகள் சிவப்பு நிறத்தலையையும் வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு
இருக்கும். அலகுகள் கருத்தவை. இறக்கையின் நுனிப்பகுதி கருப்பாகவும் உடல்
வெண்சாம்பல் நிறத்திலும் இருக்கும். ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒத்த தோற்றம்
கொண்டன. ஆண் பறவை பெட்டையை விடப் பெரியது. ஆண் பறவைகள் அதிக அளவாக 6.6 அடி உயரம்
வரை வளரக்கூடும். இப்பறவையே உலகில் எஞ்சியுள்ள இனங்களில் உயரமான பறக்கும்
பறவை ஆகும். சராசரியாக 6.3 முதல் 7.3 கிலோ எடை வரை
இருக்கும்
மற்ற
கொக்குகளைப் போல் இவை நெடுந்தொலைவு வலசைபோவதில்லை. இரண்டு முதல் ஐந்து
கொக்குகள் வரை கொண்ட சிறிய குழுக்களாக (சிறு தொழுதிகளாக) வாழ்கின்றன.
சாரசுகள்அனைத்துண்ணிகள். பூச்சிகள் நீர்த்தாவரங்கள் முதலானவற்றை உணவாகக்
கொள்கின்றன. இப்பறவை தரையிலேயே கூடு கட்டுகிறது. இக்கொக்கு இரண்டு அல்லது
மூன்றுமுட்டைகள் இடும். ஆண்இ பெண் (பெட்டை) இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும்.
இப்பறவைகள் வாழ்நாள்
முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன.
(Rhincodon typus) திமிங்கிலச்
சுறாமீன்
திமிங்கிலச் சுறாமீன் என்பது உலகில் உள்ள மீன்கள்
யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும். இச் சுறாமீன் வெப்ப மண்டலக் கடல்களில்
வாழ்கின்றன.நிலநடுக்கோட்டிலிருந்து சுமார் ±30° பகுதிகளில் வாழ்கின்றன. சுமார் 700
மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன.
இச்
சுறாமீன்கள் சுமார் 18 மீட்டர் (60 அடிகள்) நீளமும் சுமார் 14 மெட்ரிக் டன் எடையும்
கொண்டவை. இவை தனியாகவே வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 2.6 டன் எடை உணவு உட்கொள்ளும்.
சுமார் 60 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மீன் இனம்
என்பர்.
சராசரி மனிதனுடன் திமிங்கிலச்சுறா மீனின் அளவு
ஒப்பீடு
நீலமஞ்சள்
பெருங்கிளி
நீலமஞ்சள் பெருங்கிளி அல்லது மக்காவ் என்பது
கிளிக்குடும்பத்தைச் சேர்ந்த மக்காவ் என்னும் பெருங்கிளி வகையைச் சேர்ந்த ஒரு பறவை.
இப்பறவைகள் தென்னமெரிக்கக் காடுகளில் காணப்படுகின்றன.
இப்பெருங்கிளி 76 முதல் 83 செ.மீ நீளமும் 900 முதல் 1300
கிராம் எடை வரையும் வளரக்கூடியது. இப்பறவை பார்ப்பதற்கு அழகாக நீல இறக்கை வாலுடனும்
கருநீல கன்னமும் உடலின் அடிப்பகுதி பொன்மஞ்சளாகவும் இருக்கும். இதன் நெற்றி
பச்சைநிறத்திலும் அலகு கருப்பாகவும் இருக்கும். கடினமான கொட்டைகளை உடைத்துத் தின்ன
ஏதுவாக இப்பறவை உறுதியான அலகினைப் பெற்றுள்ளது.
இப்பறவைகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் ஓரிணையுடன்
வாழ்கின்றன.
மரப்பொந்துகளில் கூடுகட்டி வாழ்கின்றன. பெண் கிளியானது இரண்டிலிருந்து மூன்று
முட்டைகள் வரை இடும். 28 நாட்கள் அம்முட்டைகளை அடைகாக்கும்.
இப்பறவைகள் இவற்றின் அழகான தோற்றத்திற்காகவும்
இவற்றின் பேசும் திறனுக்காகவும் மக்களால் விரும்பி
வளர்க்கப்படுகின்றன.
தவளைகள் பற்றிய அதிசய தகவல்கள்
தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு
வரிசையாகும்.முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும் திரண்டு உருண்ட
உடலும் விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும் புறத்தே
பிதுங்கி இருக்கும் கண் முழிகளும் கொண்டு வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு
குட்டைகளிலும் குளங்களிலும் காணப்படுவன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன்
பெற்றுள்ளன.
கண்களுக்கு அருகே நஞ்சுச் சுரபிகள் உள்ள நச்சுத்தவளை.
தென் அமெரிக்காவில் வாழ்கின்றது
தென்
அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும்
உள்ளன.
கூடு கட்டும் தவளை இனம் இந்தியாவில்
கண்டுபிடிக்கப்பட்டது
கூடு
கட்டி அதன் மீது முட்டையிடும் ஒரு வகைதவளை இனமொன்றைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக
இந்திய அறிவியலாளர் ஒருவர்
அறிவித்துள்ளார்.
இத்தவளைகள் முட்டையிட்டவுடன் அவற்றை வெப்பத்தில் இருந்தும்
மற்றும் வேறு விலங்கினங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் கூடுகளைக்
கட்டுகின்றன என்று தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் எஸ். டி. பிஜு என்பவர்
தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களான கேரளம்
மற்றும் கருநாடகம் ஆகியவற்றிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மழைக்
காடுகளில் இவ் வகை தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கேரளாவின் வயநாடு மற்றும்
கருநாடகத்தின் குடகு ஆகிய மாவட்டங்களில் 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பலத்த ஆய்வின்
பின்னர் இவை கண்டுபிடிக்கப்பட்டன.
12 செமீ (5 அங்) நீளமுள்ள இந்த சிறிய
தவளைகள் இலைகளில் மேலிருந்து கீழே தவழ்ந்து சென்று பட்டுப்பூச்சிக் கூடு போன்ற
கூடுகளை அமைக்கின்றன. அத்துடன் கூடுகளின் முனைகளை இறுக்கக் கட்டுவதற்காக ஒரு
திரவப் பொருளை வெளிவிடுகின்றன.
'இவ்வகை மிகவும் அரிதான தவளைகள்
ஆசியாவிலேயே முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன' என்று முனைவர் பிஜு பிபிசி
செய்தியாளரிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில இலைகளில் கூடு கட்டும் தவளைகள் முட்டைகளை இடும் போதே
கூடுகளைக் கட்ட ஆரம்பிக்கின்றன என்றும் கூடு கட்டும் வேலையில் ஆண்
தவளைகளும் பெண் தவளைகளும் இணைந்தே பங்காற்றுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்த இந்தியத் தவளைகள் முட்டைகளை இட்ட பின்னரே கூடுகளைக் கட்ட
ஆரம்பிக்கின்றன.
பளிச்சென்று தெரியும் சிவப்பு ஆரஞ்சு வண்ணத்தில் இந்தத்
தவளை இருக்கிறது.ஆனைமுடி மலையுச்சியில் மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும்
குறைவான பகுதியிலேயே இந்தத் தவளை இனம் வாழ்கிறது.ஆயிரத்துத்துக்கும் குறைவான
எண்ணிக்கையிலேயே இந்த தவளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தத் தவளைக்கு
ராவ்செஸ்டர்ஸ் ரெஸ்பிளெண்டென்ஸ் என்று
பெயரிடப்பட்டுள்ளது.
புதுடில்லி பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர்
எஸ்.டி.பிஜு தலைமையில் நான்கு பேர் கொண்ட அறிவியலாளர் குழு இந்தத் தவளை இனத்தை
கண்டுபிடித்துள்ளனர்.
இந்தத் தவளைகளின் உடலின் மேற்பகுதியில் இருந்த சில
சுரப்பிகளும் வீக்கங்களும் அவற்றை தேரையைப் போலக் காட்டியதாக அவர்
கூறுகிறார்.
மரத்தில் வாழக்கூடிய தவளைகளில் இந்த இனத்துக்கு மட்டுமே
இப்படியான சுரப்பிகள் இருக்கின்றன. பெரிது பெரிதாக இருக்கும் சுரப்பிகளின் பயன்
புரியாத புதிராகவே உள்ளது.
2001
ஆம் ஆண்டு இந்த இனத்தை முதலில் தான் கண்டதாகவும் இது புதிய இனம்தான் என்பதை பல
கோணங்களிலும் உறுதிப்படுத்த தனக்கு 7 ஆண்டுகள் ஆகியது என்றும் அவர்
கூறுகிறார்.
மிகச்சிறிய ஒரு பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட
சுற்றுச்சூழலில் இப்படியான ஒரு இனம் அழிவின் விளிம்பில் வாழ்ந்துவருவது
அறிவியலாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உலகில் மொத்தத்தில்
ஆறாயிரத்துக்கும் கூடுதலான தவளை இனங்கள் இருப்பதாக
கண்டுதுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதியளவு ஏதோ ஒரு வகையில் அச்சுறுதல்லுக்கு
உள்ளாகியுள்ளன.
பூகம்பத்தை முன்கூட்டியே தவளை அறியும் - விஞ்ஞானி தகவல்
இங்கிலாந்தில் மில்டன் கெய்னஸ் பல்கலைக்கழக உயிரியல்
விஞ்ஞானி ராஜெல் கிரான்ட் தவளைகள் நடவடிக்கை பற்றி ஆராய்ச்சி செய்து
வருகின்றார்.இவர் பூகம்பம் ஏற்பட போவது தவளைக்கு முன் கூட்டியே தெரிந்து விடுவதாக
கண்டுபிடித்து உள்ளார்.
இத்தாலியில் 2009-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி நில நடுக்கம்
ஏற்பட்டது. அப்போது சான்ரா பினோவில் உள்ள ஏரியில் வாழும் தவளைகள் குறித்து ராஜெல்
கிரான்ட் ஆய்வு செய்து
கொண்டிருந்தார்.
பூகம்பம் ஏற்படுவதற்கு 6 நாட்களுக்கு முன்பு அங்கிருந்த
தவளைகள் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. 5 நாட்களுக்கு முன்பு 96 சதவீத ஆண்
தவளைகள் அங்கிருந்து வெளியேறிவிட்டன. 3 நாட்களுக்கு முன்பு அனைத்து தவளைகளும்
வெளியேறி சென்று விட்டன. பின்னர் பூகம்பம் முடிந்து 6 நாட்களுக்கு பிறகு அதே
ஏரிக்கு திரும்பி வந்துவிட்டன.இதைவைத்து பார்க்கும் போது தவளைகள் முன் கூட்டியே நில
நடுக்கத்தை கண்டுபிடித்து விடுகின்றன என்று அவர்
கூறுகிறார்.
அந்த
தவளைகள் பூகம்பத்துக்கு பிறகு 6 நாட்கள் கழித்து திரும்பி வந்தன. இந்த 6 நாட்கள்
வரையிலும் பூகம்பத்துக்கு பிறகு ஏற்படும் சிறிய அளவிலான அதிர்வுகள் இருந்து
கொண்டிருந்தன. தவளைகள் திரும்பி வந்த பிறகு அதிர்வுகள் கூட நின்று விட்டன. எனவே
தவளைகள் சிறிது அதிர்வையும் முன் கூட்டியே கண்டுபிடித்து விடுவதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
தவளைகள் பற்றிய அதிசய தகவல்கள்
தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு
வரிசையாகும்.முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும் திரண்டு உருண்ட
உடலும் விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும் புறத்தே
பிதுங்கி இருக்கும் கண் முழிகளும் கொண்டு வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு
குட்டைகளிலும் குளங்களிலும் காணப்படுவன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன்
பெற்றுள்ளன.
கண்களுக்கு அருகே நஞ்சுச் சுரபிகள் உள்ள நச்சுத்தவளை.
தென் அமெரிக்காவில் வாழ்கின்றது
தென்
அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும்
உள்ளன.
கூடு கட்டும் தவளை இனம் இந்தியாவில்
கண்டுபிடிக்கப்பட்டது
கூடு
கட்டி அதன் மீது முட்டையிடும் ஒரு வகைதவளை இனமொன்றைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக
இந்திய அறிவியலாளர் ஒருவர்
அறிவித்துள்ளார்.
இத்தவளைகள் முட்டையிட்டவுடன் அவற்றை வெப்பத்தில் இருந்தும்
மற்றும் வேறு விலங்கினங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் கூடுகளைக்
கட்டுகின்றன என்று தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் எஸ். டி. பிஜு என்பவர்
தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களான கேரளம்
மற்றும் கருநாடகம் ஆகியவற்றிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மழைக்
காடுகளில் இவ் வகை தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கேரளாவின் வயநாடு மற்றும்
கருநாடகத்தின் குடகு ஆகிய மாவட்டங்களில் 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பலத்த ஆய்வின்
பின்னர் இவை கண்டுபிடிக்கப்பட்டன.
12 செமீ (5 அங்) நீளமுள்ள இந்த சிறிய
தவளைகள் இலைகளில் மேலிருந்து கீழே தவழ்ந்து சென்று பட்டுப்பூச்சிக் கூடு போன்ற
கூடுகளை அமைக்கின்றன. அத்துடன் கூடுகளின் முனைகளை இறுக்கக் கட்டுவதற்காக ஒரு
திரவப் பொருளை வெளிவிடுகின்றன.
'இவ்வகை மிகவும் அரிதான தவளைகள்
ஆசியாவிலேயே முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன' என்று முனைவர் பிஜு பிபிசி
செய்தியாளரிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில இலைகளில் கூடு கட்டும் தவளைகள் முட்டைகளை இடும் போதே
கூடுகளைக் கட்ட ஆரம்பிக்கின்றன என்றும் கூடு கட்டும் வேலையில் ஆண்
தவளைகளும் பெண் தவளைகளும் இணைந்தே பங்காற்றுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்த இந்தியத் தவளைகள் முட்டைகளை இட்ட பின்னரே கூடுகளைக் கட்ட
ஆரம்பிக்கின்றன.
பளிச்சென்று தெரியும் சிவப்பு ஆரஞ்சு வண்ணத்தில் இந்தத்
தவளை இருக்கிறது.ஆனைமுடி மலையுச்சியில் மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும்
குறைவான பகுதியிலேயே இந்தத் தவளை இனம் வாழ்கிறது.ஆயிரத்துத்துக்கும் குறைவான
எண்ணிக்கையிலேயே இந்த தவளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தத் தவளைக்கு
ராவ்செஸ்டர்ஸ் ரெஸ்பிளெண்டென்ஸ் என்று
பெயரிடப்பட்டுள்ளது.
புதுடில்லி பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர்
எஸ்.டி.பிஜு தலைமையில் நான்கு பேர் கொண்ட அறிவியலாளர் குழு இந்தத் தவளை இனத்தை
கண்டுபிடித்துள்ளனர்.
இந்தத் தவளைகளின் உடலின் மேற்பகுதியில் இருந்த சில
சுரப்பிகளும் வீக்கங்களும் அவற்றை தேரையைப் போலக் காட்டியதாக அவர்
கூறுகிறார்.
மரத்தில் வாழக்கூடிய தவளைகளில் இந்த இனத்துக்கு மட்டுமே
இப்படியான சுரப்பிகள் இருக்கின்றன. பெரிது பெரிதாக இருக்கும் சுரப்பிகளின் பயன்
புரியாத புதிராகவே உள்ளது.
2001
ஆம் ஆண்டு இந்த இனத்தை முதலில் தான் கண்டதாகவும் இது புதிய இனம்தான் என்பதை பல
கோணங்களிலும் உறுதிப்படுத்த தனக்கு 7 ஆண்டுகள் ஆகியது என்றும் அவர்
கூறுகிறார்.
மிகச்சிறிய ஒரு பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட
சுற்றுச்சூழலில் இப்படியான ஒரு இனம் அழிவின் விளிம்பில் வாழ்ந்துவருவது
அறிவியலாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உலகில் மொத்தத்தில்
ஆறாயிரத்துக்கும் கூடுதலான தவளை இனங்கள் இருப்பதாக
கண்டுதுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதியளவு ஏதோ ஒரு வகையில் அச்சுறுதல்லுக்கு
உள்ளாகியுள்ளன.
பூகம்பத்தை முன்கூட்டியே தவளை அறியும் - விஞ்ஞானி தகவல்
இங்கிலாந்தில் மில்டன் கெய்னஸ் பல்கலைக்கழக உயிரியல்
விஞ்ஞானி ராஜெல் கிரான்ட் தவளைகள் நடவடிக்கை பற்றி ஆராய்ச்சி செய்து
வருகின்றார்.இவர் பூகம்பம் ஏற்பட போவது தவளைக்கு முன் கூட்டியே தெரிந்து விடுவதாக
கண்டுபிடித்து உள்ளார்.
இத்தாலியில் 2009-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி நில நடுக்கம்
ஏற்பட்டது. அப்போது சான்ரா பினோவில் உள்ள ஏரியில் வாழும் தவளைகள் குறித்து ராஜெல்
கிரான்ட் ஆய்வு செய்து
கொண்டிருந்தார்.
பூகம்பம் ஏற்படுவதற்கு 6 நாட்களுக்கு முன்பு அங்கிருந்த
தவளைகள் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. 5 நாட்களுக்கு முன்பு 96 சதவீத ஆண்
தவளைகள் அங்கிருந்து வெளியேறிவிட்டன. 3 நாட்களுக்கு முன்பு அனைத்து தவளைகளும்
வெளியேறி சென்று விட்டன. பின்னர் பூகம்பம் முடிந்து 6 நாட்களுக்கு பிறகு அதே
ஏரிக்கு திரும்பி வந்துவிட்டன.இதைவைத்து பார்க்கும் போது தவளைகள் முன் கூட்டியே நில
நடுக்கத்தை கண்டுபிடித்து விடுகின்றன என்று அவர்
கூறுகிறார்.
அந்த
தவளைகள் பூகம்பத்துக்கு பிறகு 6 நாட்கள் கழித்து திரும்பி வந்தன. இந்த 6 நாட்கள்
வரையிலும் பூகம்பத்துக்கு பிறகு ஏற்படும் சிறிய அளவிலான அதிர்வுகள் இருந்து
கொண்டிருந்தன. தவளைகள் திரும்பி வந்த பிறகு அதிர்வுகள் கூட நின்று விட்டன. எனவே
தவளைகள் சிறிது அதிர்வையும் முன் கூட்டியே கண்டுபிடித்து விடுவதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
தேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள்
உலகில் இதுவரை கண்டறியப்பட்ட
உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு
மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய
வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த
இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு.
மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக்
கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும்
இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ
இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இவற்றால் உற்பத்தி செய்யப்
படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட
எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில்
தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல
அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான
அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள்
நம்மை வியப்படைய வைக்கின்றன.
தேனீக்கள்
ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து
பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.
இவை ஈ பேரினத்தில்
ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன.
அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44
உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில்
ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை
தேன் கூடு என்பது மூன்று வகையான
தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று
விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.
1. இராணித் தேனீ
(Queen-Productive Female)
2. ஆண் தேனீக்கள்
(Drone)
3.
வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive
Female)
ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம்
தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட
இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.
ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.
இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால்
ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள்
மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும்
பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு
கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி
செய்யப்படுகின்றன.
இராணித்
தேனீ
இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக
இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16
நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய
10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி
உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது.
அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக்
கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண்
ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை
முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள்
கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000
முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய
திறன் பெற்றதாகும்.
இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே
இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை
கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை
இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம்
அளிக்கப்படுகின்றது.
ஆண் தேனீக்கள் (Drone)
ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக்
கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில்
அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு
ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும்
பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு
இல்லை.
நான் ஆண் என்று
வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து
சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத்
தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன
இவை செய்யக்
கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித்
தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு
இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக்
கொள்ளப்படுகின்றன.
வேலைக்காரத் தேனீக்கள்
மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர்
அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும்.
முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத்
தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை.
இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள்
மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில்
ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும்
மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த
தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக
மாற்றப்படுகின்றது.
தேனின் மருத்துவக்
குணங்கள்
பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன்
விளங்குகிறது
-
உடல் பருமனாக குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை கூட்டலாம் -
உடல் பருமனைக் குறைக்க மிதமான வெந்நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை குறைக்கலாம். -
வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளிஇ இருமல் போன்றவை நீங்கும்.
தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு
கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.இவை வாழ்நாளில் பறக்கும் மொத்த தூரம், பூமியை 4
முறை வலம் வந்ததற்கு சமமானதாகும்.
வியக்க வைக்கும் கறையான்களின் உலகம்
கறையான்கள் ஏறத்தாழ 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னரும்
இப்பூமியில் வாழ்ந்து வந்தன. இதற்கான ஆதாரங்களை அதற்குரியத்தொல்லுயிர் எச்சம்
மற்றும்
அம்பர்உறுதிசெய்கின்றன
கறையான்களை வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர்.
இன்றையக் கறையான்களில் பத்து சதவிகிதமே நமக்கு பொருளாதார சீர்கேட்டை உருவாக்கும்.
மற்றவை தேவையில்லாதகளை உண்டே வாழ்கின்றன. இக்கறையான்களின் வாழிடக் காற்றோட்ட
நு
ட்பங்களை நாம் அவசியம் அறிய
வேண்டும்
கரையான்களின் வளர்சிதை
மாற்றங்களால் உருவாகும் வெப்பம் மற்றும் நீராவி ஆகியன ஒருவித மிதவை உந்து விசைகளை
உள்ளிழுக்கும். எனவே புற்றின் உள்ளிருக்கும் காற்று உள்ளீடற்ற குழாய் மூலம் மேலே
வருகிறது.
அப்போது புற்றின்
உள்காற்றிலிருக்கும் ஆக்சிசன் கரியமில வாயு வெப்பம் நீராவி ஆகியன அடிப்பரப்புக்
குழாய் வழியாக புற்றின் வெளிக்காற்றுடன் வேதியியல் பரிமாற்றம் செய்துகொள்ளும். எனவே
புத்தம் புதிய காற்று மீண்டும் புற்றுக்குள் உள்ளீடற்ற குழாய் மற்றும்
அடிப்பரப்புக் குழாய்கள் வழியாக உள்ளிழுக்கப்படும். இங்ஙனம் வெளிக்காற்று
புற்றினுள் சென்று புற்றின் உட்புறத்திற்க்குச் சென்றடைந்து புற்றின் உட்புற
வெப்பத்தைத் தணித்து குளுமையாக மாற்றும்.இக்குளுமை எப்பொழுதும்
நிலவுவதால் புற்றினுள் வளர்சிதை மாற்றங்கள் சிறப்பாக அமைய உதவுகிறது.
கறையான்கள் கூட்டமாக வாழும் இயல்புடைய ஒரு சமுதாய பூச்சி
வகையாகும். இவை தனித்து வாழாமல் கூட்டமாக வாழும் இயல்புடையது. கறையான் கூட்டத்தில்
500 முதல் 500000 வரை கறையான்கள் இருக்கும். ஒரு கறையான் கூட்டத்திலுள்ள கறையான்களை
நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை வருமாறு;
பெயர் | வேலை | குறிப்பு | |
---|---|---|---|
1. | இராணிக்கறையான் | கறையான்களை வழிநடத்துதல் | குட்டி போடுதல் |
2. | ஆண்கறையான் | இனக்கலவி புரிதல் | எந்த வேலையும் செய்யாது |
3. | வாகைக்கறையான் | பாதுகாப்புப் பணி | குருடு; மலடு;
ஆண், பெண் உண்டு;
1-2ஆண்டு
வாழும்.
|
4. | பணிக்கறையான் | உணவு கொடுத்தல், புற்றுக்கட்டுதல் | குருடு; மலடு; ஆண், பெண் உண்டு; 1-2ஆண்டு வாழும் |
மழைக்காலத்தில் வயது முதிர்ந்த
கறையான்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது இயற்கை நியதி. எனவே அவை இறக்கை
முளைத்து ஈசல்களாக வெளியில் வந்து கொஞ்ச நேரத்திலேயே இறக்கையை இழந்து ஒரே நாளில்
உயிரை விட்டுவிடும். அதனால் கறையான்களின் எண்ணிக்கைக்
கட்டுப்படுத்தப்படுகிறது.
இராணிக்கறையான்
ஆண்கறையானுடன் கலவியை முடித்தபின்பு இராணிக்கரையானின் அடிவயிறு
வளரத் தொடங்கிவிடும். அடிவயிறு சுமார் 15 செ.மீ வரை வளரும். புற்றின் ஆரம்ப
காலத்தில் இராணி இடத்தை தேர்ந்தெடுத்து சிறுகுழிப் பறித்து முட்டைகள் இடும்.
இராணிக்கரையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வைக்கும். அதாவது ஒவ்வொரு 15
நொடிக்கும் ஒரு முட்டை வைக்கும். இராணிக்கரையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள்
ஆகும்.
ஒரு கறையான் கூட்டத்தில் ஒன்றிற்க்கும் மேற்பட்ட இராணிகள்
இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும்.முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன்
பணிகளைத் தொடர்ந்து செய்யும்
ஆண்கறையான்கள்
சில சிற்றினங்களில் மட்டுமே ஆண் கறையான்
இறந்தாலும் மற்றொரு ஆண் கறையான் இராணிக்கறையானுடன் கலவி புரிந்து
இனப்பெருக்கம்செய்யும். இராணிக்கறையானின் முட்டைகளிலிருந்து பொரிந்து வரும்
குஞ்சுகளை ஆண் கறையான் பாதுகாக்கும். பின்பு கறையான்கள் பெருகியவுடன் குஞ்சுகளைப்
பாதுகாக்கும் பணியினை பணிக்கறையான்கள் செய்கிறது. ஆண் கறையான்கள் பெரும்பாலும்
சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதில்லை. அங்ஙனம் இருந்தால் அவை இறந்து
விடும்.
1976ஆம் ஆண்டு இடான்சானியா நாட்டின் 5 மீட்டர்களுள்ள
கறையான் புற்றின் நிழற்படம்
வாகைக்கறையான்களும், பணிக்கறையான்களும் மலட்டுத்
தன்மை கொண்டவை. ஆனால் இவை பிறவியிலேயே மலடுகள் அல்ல. இராணிக்கரையான் தன்
உடலிலிருந்து சுரக்கும், ஒருவித சுரப்பி்னை உண்பதால், இம்மலட்டுத்தன்மை அவைகளிலே
ஏற்படுகிறது.
வாகைக்கறையான்
பருத்தத் தலையுடன், அரிவாள் போன்ற கொடுக்குடன்
இருக்கும்.இவை பகைவர்களைத் தாக்குதல் நடத்தி விரட்டி
விடும்.
துப்பிக்கறையான்
- இவை பகைவர்களின் மீது, துர்நாற்றம் மிக்க சுரப்பினைத் துப்பி விரட்டி
விடும்.
பணிக்கரையான்கள்
தங்கள் உமிழ்நீரையும் மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும்.
அனைவருக்கும் உணவு கொடுக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இறந்து விடும்
கறையான்களின் உணவில் பெரும்பாலும் செல்லுலோசு உள்ளது.தாவரங்களிலுள்ள
செல்லுலோஸ் என்ற பொருள் இருக்கும். அதை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதி
கரையான்களுக்கு இல்லை. கரையான்கள் தங்கள் குடலில் புரோட்டோசோவாக்களுக்கு உணவும்
உறைவிடமும் கொடுக்கும். இதற்குக் கைம்மாறாக Protozoa க்கள் கரையான்களுக்கு
செல்லுலோஸை செரிக்கத் தேவையான செல்லுலேஸ் என்ற நொதியைக் கொடுக்கும்
மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி
அணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட
பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று
உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான்
பூச்சிதான்.
கரப்பான்
பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சை தாங்கிக் கொள்ளும் ஆற்றல்
படைத்தது. மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை தோன்றியது மனித இனம்
தோன்றுவதற்கு முன். அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன்
தோன்றியவை.
உலகின் துருவப்
பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம்
ஜேர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின்
கணிப்பாகும்.
தற்போது உலகில்
சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஆறு
குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி தலை நெஞ்சு வயிறு எனும்
மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றிற்கு
மூன்று சோடி கால்களும்ஒரு சோடி உணர்கொம்பும் உண்டு.கரப்பான் பூச்சிக்கு
முதுகெலும்பு கிடையாது. இரண்டு சோடி அல்லது ஒரு சோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில
கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது.கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை
நிறமுடையது! இவற்றால் தலை துண்டிக்கப் பட்டாலும் சுவாசிக்க முடியும்!!(சில கரப்பான்
பூச்சிகளால் வளி இல்லாமல் 45 நிமிடங்கள் வழமுடியும்.)
உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனம்
Giant burrowing cockroach ஆகும். இது
ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது.இது 9 சென்ரிமீட்டர் வரை வளரக்கூடியது. இதன் நிறை
30 கிராமை விட அதிகமாக இருக்கும்.
இந்த கரப்பான் நிலத்தை 3 அடி(1 மீட்டர்) அழத்திற்கு தோண்டி
வசிக்கின்றது.இதன் காரணமாகவே இதற்கு Giant burrowing cockroach என பெயர் வந்தது. (burrow-பூமியில் வளை தோண்டு). இதற்கு சிறகுகள்
கிடையாது.
கரப்பான் பூச்சியின் உணர்கொம்புகள் சூழலை அறிய உதவுகின்றது.
இரவில்(இருட்டில்) உணவு வேட்டையை செய்யும். இவை எந்த பாகுபாடுமில்லாமல் எல்லாவிதமான
உணவையும் வெட்டியும் அரைத்தும் உண்கின்றன. அப்படி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் காகிதம்
சவர்க்காரம் போன்றவை கூட உணவாகும். இதற்கு இதன் வலிமை வாய்ந்த தாடைகள் உதவி
செய்கின்றன. சில சமயம் உணவே கிடைக்காமல் கரப்பான் பூச்சியினால் மூன்று மாதங்கள் வரை
உயிர் வாழ முடியும்!
ஆஸ்துமா ஆபத்து கரப்பான் பூச்சிகளால்
?
உங்கள் வீடுகளில் அதிக
அளவில் கரப்பான் பூச்சிகள், எலிகள் உள்ளதா? உடனடியாக அவற்றை ஒழிக்க முயற்சி
எடுங்கள். இல்லாவிட்டால், அவற்றின் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி
போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று
தெரிவிக்கிறது.
வீசிங் எனப்படும் மூச்சுத்திணறல், கடுமையான காய்ச்சல், எக்ஸிமா எனப்படும் ஒவ்வாமை நோய் போன்றவை 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பரவுவதற்கு கரப்பான் பூச்சிகளும், எலிகள் மூலம் வெளிப்படும் ஒருவகை புரோட்டீனும் காரணமாக அமைவதாக கொலம்பியா குழந்தைகள் சுற்றுப்புற சூழல் சுகாதார மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வீசிங் எனப்படும் மூச்சுத்திணறல், கடுமையான காய்ச்சல், எக்ஸிமா எனப்படும் ஒவ்வாமை நோய் போன்றவை 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பரவுவதற்கு கரப்பான் பூச்சிகளும், எலிகள் மூலம் வெளிப்படும் ஒருவகை புரோட்டீனும் காரணமாக அமைவதாக கொலம்பியா குழந்தைகள் சுற்றுப்புற சூழல் சுகாதார மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கரப்பான் பூச்சிகள்,
எலிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், உடல்நிலையில் ஏற்படும்
அறிகுறிகள் பற்றியும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை
வெளியிட்டனர்.
வீட்டிற்குள் உருவாகும் ஒவ்வாமையில் கரப்பான் பூச்சிகளும், எலிகளும் முக்கியப் பங்கு வகிப்பது கண்டறியப்பட்டது. அதிலும் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு அவை காரணமாக இருப்பது தெரிய வந்தது.
வீட்டிற்குள் உருவாகும் ஒவ்வாமையில் கரப்பான் பூச்சிகளும், எலிகளும் முக்கியப் பங்கு வகிப்பது கண்டறியப்பட்டது. அதிலும் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு அவை காரணமாக இருப்பது தெரிய வந்தது.
கரப்பான் பூச்சியின் மூளையில் நுண்ணுயிர் எதிர்ப்பு
ஆற்றல்
கரப்பான் பூச்சியும் வெட்டுக்கிளியும் மனிதரின் உயிர்
காக்கும் மருத்துவர்களாக மாறும் நாள் தொலையில் இல்லை என இங்கிலாந்தில் உள்ள
நாட்டிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சைமன் லீ என்பவரின் ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. இப்பூச்சிகளின் மூளையில் காணப்படுகின்ற வேதிக் கூறுகள் பல
தீங்குதரும் நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை கொண்டுள்ளன என்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரப்பான்
பூச்சி (வட்டார வழக்கில் பாச்சா, பாச்சை) அழுக்கு நிறைந்த சூழலிலும் உயிர் வாழும்
தன்மையது. அங்கே தொற்றுநோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும்.
இருப்பினும் அந்நுண்ணுயிரிகளை எதிர்க்கும் சக்தி கரப்பான் பூச்சியின்
மூளைப்பகுதியில் காணப்படும் வேதிக் கூறுகளுக்கு உள்ளது. கரப்பான் பூச்சியின் நரம்பு
மண்டலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கப்படுவது வியப்பைத் தருகிறது என்று
அறிவியலார் கருதுகின்றனர். நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்டால் சாவு
உறுதி. ஆனால் கரப்பான் பூச்சியிடம் நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் மிகுதியாகவே
உள்ளது.
கரப்பான்
பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக் கூறுகள்
நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% திறம் கொண்டவையாக உளவாம்.
இக்கண்டுபிடிப்பின் விளைவாக மருத்துவத் துறை பயன்பெறும் என்றாலும் அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.
தேள்கள் பற்றிய அதிசய தகவல்கள்
தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த
உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன
இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு
முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு
நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள்
இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது
நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.
- தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை
தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம்
செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ்
பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த
தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த
பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில்
ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம்
செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.
உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.
- தேள் கடிக்கு முதலுதவி
கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது
நல்லது.
தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.
இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி
தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.
இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி
நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால்
ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன்
மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.
கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.
முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு
கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.
முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது
அவசியம்.
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த
வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல்
குர்விட்ஸ்.
இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய
சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து
வருகிறோம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.
பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.
இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ்.
இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.
பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.
இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ்.
இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.
ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம் கடல்குதிரைகள் தான்
கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து
ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண்
இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ்
உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு
தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது
போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும்
காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள்
தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14
கிராம் வரையும் இருக்கிறது.
பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின்
வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண்
கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப்
பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும்
குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு
அதிகமாகவே இருக்கும்.
உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள்
காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள்
பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும்.
கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும். இதன் உடல்
கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு பெங்குவின் முதலியன இவற்றை
வேட்டையாடி உண்கின்றன. பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக் கண்டுகொள்வதில்லை.கடல்
குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும் நிலத்தில் உள்ள விரோதியான மனிதன்
தான் மிகுந்த தொல்லை கொடுக்கிறான்.
மீன் இனத்தைச்
சேர்ந்த உயிரினம்தான் கடல்குதிரை. பார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும்.
ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின்
இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும்
வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து
குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது
அது நீருக்கடியில்
உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக
அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை
வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.
இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க
வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான்
வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன
ஆகுமென்று யாருக்கும் தெரியாது.
"உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம்
தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்"
பறக்கும்போதே உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள்
அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்)
பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி வெகு
தொலைவு பறக்க வல்லவை. இவை நீரில் வாழும் கணவாய் (squid) மீன குறில்
(krill) முதலியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. ஆல்பட்ரோஸ்
பறவைகள் கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக வாழ்கின்றன. ஆல்பட்ரோஸ்
பறவைகள இணையாக வாள்ணாள் முழுவதும் ஒன்றாகவே (இணை பிரியாமல்) வாழ்கின்றன.
இனப்பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு முட்டைதான் இடுகின்றன.அல்பட்ரோஸ்
(ஆல்பட்ரோஸ்) தென்முனைப் பெருங்கடலிலும் வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற்
பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும் பெரிய அலகும் மிகப்பெரிய
இறக்கை விரிப்பளவும் கொண்டவை.
சதை இணைப்புள்ள கால் அடிகள்
(கொய்யடிகள்) கொண்டவை. இப் பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப்
பெரியவைகளின் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் டியோமெடைடிடே
(Diomedeidae)என்பதாகும்.
இவ்வினத்தில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய
உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் ஆல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை
விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது.
உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை
வல்லூறு (Shaheen Falcon) என்பது உருவில் சற்று
சிறிய ஒரு கழுகு இனம்.வல்லூறு கழுகு இனம் ஆனால் கழுகை விட மிக விரைவாகப்
பறக்கும் ஆற்றல் மிக்கது. உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் பறப்பது இந்த வல்லூறு
தான். காற்றின் ஏற்ற இறக்கங்கள் இந்த வல்லூறுவின் கண்களுக்கு மட்டும் தெரியுமாம்.
வல்லூறுவின் உடல் நீளத்தை விட அதன் இறக்கையின் நீளம் இருமடங்கு.
Kingdom: | Animalia |
Phylum: | Chordata |
Class: | Aves |
Order: | Falconiformes |
Family: | Falconidae |
Genus: | Falco |
Species: | F. peregrinus |
கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ
விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க
வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும்
உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும்
வாத்து புறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ
நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.
- பிப்ரவரி 2003-ல் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதின் வல்லூறு தன் எடையைக் காட்டிலும் பல மடங்கு அதிக எடையுள்ள ஒரு மானை வேட்டையாடியுள்ளது. பல முறை மானைத் தூக்கியதாகவும் பதிவாகியுள்ளது. இப்படி ஒரு வல்லூறு மானைத் தூக்குவது இதுதான் முதல்முறையென்ற சரித்திர சாதனையும் படைத்துள்ளது.
- வல்லூறு பாக்கிஸ்ரான் நாட்டின் ஷஹீன் மாகாணத்தின் பறவையாகவும் (Pakistan Air force - A Symbol of strength) ராணுவ விரர்களை குறிக்கும் அடையாளச் சின்னம் ஆகவும் உள்ளது.
- அங்கோலா நாட்டின் தேசிய பறவை வல்லூறு (Peregrine Falcon) வல்லூறு ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக