பக்கங்கள்

புதன், 3 ஏப்ரல், 2013

எடைக்கேற்ப கட்டணம் வசூலிக்க விமான நிறுவனங்கள் முடிவு

[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 06:16.48 மு.ப GMT ]
செலவைக் கட்டுப்படுத்த முடியாததால் பயணிகளின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க சமோவா நாட்டு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
விமானங்களில் முதல் வகுப்பு, எகானமி வகுப்பு, பிசினஸ் வகுப்புக்கு ஏற்ப கட்டணம் வேறுபடும். ஆனால், பசிபிக் கடலின் தென் பகுதியில் அமைந்துள்ள சமோவா நாட்டில், பருத்த உடலுடடைய பயணிகள் விமானங்களில் அதிகம் பயணிப்பதால் சாதாரண முறை கட்டணம் கட்டுபடியாக வில்லை.

இதையடுத்து, பயணிகளின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க அந்நாட்டு விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
குறுகிய தூரம் செல்லும் விமானங்களில் ஒரு கிலோவுக்கு 55 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. நீண்ட தூரம் செல்லும் விமானங்களில், ஒரு கிலோவுக்கு 225 ரூபாய் வீதம் கட்டணம் பெறப்படுகிறது.
இந்த கட்டண முறையில் தில்லு முல்லு நடக்கக்கூடாது என்பதற்காக, பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் மீண்டும் அவர்களது எடை பரிசோதிக்கப்படுகிறது.
குண்டு பயணிகளால், விமான எரிபொருள் அதிகம் செலவாகிறது என்று நோர்வே நாட்டு பொருளாதார நிபுணர் பரட்பட்டா என்பவர் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவில் உள்ள சில விமான நிறுவனங்கள் குண்டு பயணிகளுக்கு இரண்டு சீட்டுகளுக்குரிய கட்டணத்தை வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக