பக்கங்கள்

திங்கள், 8 ஏப்ரல், 2013

நாடுகாண் பயணம் - காம்பியா




செவ்வாய், மே 29, 2012

நாடுகாண் பயணம் - காம்பியா

நாட்டின் பெயர்:
காம்பியா(The Gambia) 

வேறு பெயர்கள்:
காம்பியா குடியரசு(Republic of the Gambia)


அமைவிடம்:
கிழக்கு ஆபிரிக்கா


எல்லைகள்:
வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மூன்று பக்கங்களும் 'செனிகல்' எனும் ஒரேயொரு நாட்டை எல்லையாகவும், மேற்கில் ஒரு சிறிய நிலப் பரப்பு மட்டும் அத்திலாந்திக் சமுத்திரத்தை எல்லையாகவும் கொண்ட உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்று.


தலைநகரம்:
பஞ்சுல்(Banjul)


அலுவலக மொழி:
ஆங்கிலம் 


தேசிய மொழிகள்:
மண்டிங்கா, வோலோவ், வூலா,செரீர், ஜோலா.


இனங்கள்:
மண்டிங்கா 42%
வூலா 18%
வோலோவ் 16%
ஜோலா 10%
செராகூலி 9%
ஏனையோர் 4%
*மேற்கூறிய இனங்கள் அனைத்தும் 'ஆபிரிக்கர்' எனும் இனப் பிரிவின் கீழ் வகைப்படுத்தப் படுகின்றனர். இவர்களைத் தவிரவும் ஆபிரிக்கர் அல்லாதோரின் தொகை 1% ஆகும்.


சமயங்கள்:
முஸ்லிம்கள் 90%
கிறீஸ்தவர்கள் 8%
ஆதிச்சமயத்தவர் 2%


கல்வியறிவு:
40%


ஆயுட்காலம்:
ஆண்கள் 61 வருடங்கள் 
பெண்கள் 66 வருடங்கள் 


ஆட்சிமுறை:
ஜனாதிபதி தலைமையிலான குடியரசு ஆட்சி


ஜனாதிபதி:
யாஹ்யா ஜாமே(Yahya Jammeh)


பிரித்தானியாவிடமிருந்து விடுதலை:
18.02.1965


பரப்பளவு:
11,295 சதுர கிலோ மீட்டர்கள்
*இலங்கையின் வட மாகாணத்தின் பரப்பளவை ஒத்த(சுமாராக) நிலப்பரப்பு. 
**இந்நாட்டின் அமைப்பை உலக வரைபடத்தில் பார்க்கும்போது ஓர் மண்புழு ஊர்ந்து செல்வதைப் போன்ற தோற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கும்.உலகில் உள்ள சிறிய நாடுகளில் நீளம் கூடிய ஆனால் அகலம் மிகவும் குறைவான நாடுகளுள் ஒன்று.
***இந்நாட்டின் அகலம் வெறும் 48.2 கிலோ மீட்டர்கள் மட்டுமே. ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் மிகவும் சிறிய நாடு இதுவாகும்


சனத்தொகை:
1,705,000 
*இலங்கையின் வட மாகாணத்தில் வாழும் மக்கள் தொகையை ஒத்த சனத்தொகை.


நாணயம்:
டலாசி(Dalasi /GMD) 


வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
ஏறத்தாள மூன்றில் ஒரு பங்கினர்(சுமாராக 33% பேர்)


இணையத் தளக் குறியீடு:
.gm


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 220


பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை.


விவசாய உற்பத்திகள்:
அரிசி, வாற்கோதுமை, கோதுமை, இறுங்கு, அவரையினங்கள், சோளம், வேர்க்கடலை(கச்சான்) எள்ளு, மரவள்ளிக் கிழங்கு, செம்பனை எண்ணெய்(பாமாயில்), தேங்காய், கால்நடைகள்.


தொழிற்சாலை உற்பத்திகள்:
குளிர்பானங்கள், பிஸ்கட் வகைகள், சோப் வகைகள், துணி வகைகள், வேர்க்கடலை, மீன், காட்டு மூலிகைகள், விவசாய இயந்திரங்கள் தயாரிப்பு, விவசாய இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களைப் பொருத்தும் தொழிற்சாலைகள், மரவேலை, உலோக உருக்கு.


ஏற்றுமதிகள்:
வேர்க்கடலை, மீன், பருத்தி, பருத்தி நூல், துணிவகைகள், செம்பனை எண்ணெய்(பாமாயில்)


செவ்வாய், மே 22, 2012

நாடுகாண் பயணம் - காபோன்

நாட்டின் பெயர்:
காபோன்(Gabon)

வேறு பெயர்கள்:
காபோனியக் குடியரசு(Gabonese Republic) அல்லது கபூன்

அமைவிடம்:
மேற்கு மத்திய ஆபிரிக்கா

எல்லைகள்:
வட கிழக்கு - ஈக்குவடோரியல் கினியா
வடக்கில் - கமரூன்
கிழக்கு மற்றும் தெற்கு - கொங்கோ குடியரசு
மேற்கில் - கினிய வளைகுடா மற்றும் அத்திலாந்திக் சமுத்திரம்.

தலைநகரம்:
லிப்ரவில்(Libreville)

அலுவலக மொழி:
பிரெஞ்சு

ஏனைய மொழிகள்:
பாங், மைனோ, ஷேப்பி, பபுனு,பண்ட்ஜாபி.

இனங்கள்:
பண்டு பழங்குடி, ஆபிரிக்கர்கள், ஐரோப்பியர்கள் குறிப்பாக பிரெஞ்சுக் காரர்கள், கலப்பு இனங்கள்.

சமயங்கள்:
கிறீஸ்தவம்
ஆதிச் சமயம்
மிகக் குறைந்த தொகையில் முஸ்லிம்கள்.

பிராந்திய மொழிகள்:
வ்வாங்(Fang) மற்றும் யேனே(Myene)


கல்வியறிவு:
73%
*இந்நாட்டில் கட்டாயக் கல்வி முறை நடைமுறையில் உள்ளது.


ஆயுட்காலம்:
ஆண்கள் 51 வருடங்கள்
பெண்கள் 52 வருடங்கள்
*எயிட்ஸ் நோய் காரணமாக இளவயதிலேயே பலரும் இறப்பதால் சராசரி ஆயுட்காலம் மிகவும் குறைவாக உள்ளது.2009 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இந்நாட்டில் சுமாராக46,000 எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.

ஆட்சிமுறை:
ஜனாதிபதி தலைமையிலான குடியரசு ஆட்சி

ஜனாதிபதி:
அலி பொங்கோ ஒண்டிம்பா(Ali Bongo Ondimba)*இது 22.05.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.
*உலகிலேயே ஒரு நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் தொடர்ச்சியாக 42 ஆண்டுகள்(1967-2009) ஒரே நபர் ஜனாதிபதியாகப் பதவி வகித்தது இந்நாட்டிலே ஆகும். அவரது பெயர் El hadj Omar Bongo Ondimba ஆகும். இவரது மகனே இந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஆவார். ஜனநாயக விதிமுறைப்படி இது தவறு ஆயினும், இது ஒரு உலக சாதனை ஆகும்.


பிரதமர்:
ரேமண்ட் ஓங் சிமா(Raymond Ndong Sima)*இது 22.05.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை:
17.08.1960


பரப்பளவு:
267,667 சதுர கிலோமீட்டர்கள்.


சனத்தொகை:
1,475,000(2009 மதிப்பீடு)*இலங்கையை விடவும் சுமாராக நான்கு மடங்கு பெரிய நாடாக இருப்பினும் சனத்தொகை சுமாராக பதினைந்து லட்சம் மட்டுமே.


வேலையில்லாத் திண்டாட்டம்:
21%


நாணயம்:
மத்திய ஆபிரிக்க பிராங்(CFA franc/XAF)


இணையத் தளக் குறியீடு:
.ga


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 241



இயற்கை வளங்கள்:
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வைரக் கற்கள், நைபோபியம், மங்கனீஸ், யுரேனியம், தங்கம், மரம், இரும்பு, ஈயம், நீர் மின்சாரம்.

விவசாய உற்பத்திகள்:
காப்பி, கொக்கோ, சீனி, மர எண்ணெய்(பாமாயில்), ரப்பர், ஆடு, மாடு, காகித மரம், மீன்.

தொழிற்சாலை உற்பத்திகள்:
பெட்ரோலியம் சுத்திகரித்தல், மங்கனீஸ், தங்கம், இரசாயனப் பொருட்கள் தயாரித்தல், கப்பல் பழுதுபார்த்தல், உணவு உற்பத்தி, குளிர்பானங்கள் தயாரிப்பு, துணிவகை உற்பத்தி, மரப்பலகைகள் தயாரிப்பு, மரப்பசை தயாரிப்பு, மர ஓட்டு வேலை, சீமெந்து தயாரிப்பு.

ஏற்றுமதிகள்:
மசகு எண்ணெய்(கச்சா எண்ணெய்/பெட்ரோலியம்), மரம், மங்கனீஸ், யுரேனியம்.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள செல்வந்த நாடுகளில் ஒன்று.இதற்குக் காரணம் இந்நாட்டின் பெற்றோலிய வளமும், குறைந்தளவு சனத்தொகையுமாகும்.
  • இந்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளபோதும், எந்தவொரு குடிமகனும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழவில்லை எனும் விடயம் ஆபிரிக்கர்களின் புருவங்களை உயர்த்தி நிற்கிறது.
  • இந்நாடு தனது அண்டை நாடாகிய ஈக்குவட்டோரியல் கினியாவுடன் ஒரு சில தீவுகள் சம்பந்தமாக நெடுங் காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சனையைக் கொண்டுள்ள நாடு ஆகும். மேற்படி தீவுகளில் பெட்ரோலியம் கிடைப்பதே மேற்படி பிணக்கிற்குக் காரணம் ஆகும்.
  • நாடு செல்வந்த நாடாக இருப்பினும் மக்களை ஆட்டிப் படைக்கும் சமுதாயப் பிரச்சினையாக எயிட்ஸ் நோய் உள்ளது.அத்துடன் 4000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் எனும் நிலை காணப்படுகிறது.

செவ்வாய், மே 01, 2012

நாடுகாண் பயணம் - பிரெஞ்சுப் பொலினேசியா

நாட்டின் பெயர்:
பிரெஞ்சுப் பொலினேசியா(French Polynesia)

அமைவிடம்:
பசுபிக் சமுத்திரம் 

தலைநகரம்:
பப்பீட்டி (Papeete)

மிகப்பெரிய நகரம்:
பாவோ (Få å a) 


அலுவலக மொழி:
பிரெஞ்சு
*இருப்பினும் பிரதேச மொழியாகிய 'தஹிட்டி', மற்றும் பொலினேசிய மொழிகளை மக்கள் பேசுவதற்கு அனுமதி உண்டு.அலுவலகங்களில் இம்மொழிகள் உபயோகிக்கப் படுவதில்லை.

சமயங்கள்:
கிறீஸ்தவர் 54%
கத்தோலிக்கர் 30%
சிறுபான்மைக் கிறீஸ்தவர் மற்றும் ஜெகோவாவின் சாட்சிகள்

இனங்கள்:
பொலினேசியர்கள் 66%
கிழக்காசிய+ஐரோப்பிய+பொலினேசியக் கலப்பு இனம் 7%
ஐரோப்பியர்(பெரும்பாலும் பிரெஞ்சு இனத்தவர்) 12%
டெமிஸ் 9%
கிழக்காசியர்(பெரும்பாலும் சீனர்கள்) 5%

ஆட்சிமுறை:
பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த பிரதேசம்.

ஜனாதிபதி:
நிக்கலஸ் சர்க்கோசி
*இது 16.04.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும். இத் தேதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று இருப்பினும் இந்நாட்டின் கடல் கடந்த பகுதிகளில் எதிர்வரும் 5, மற்றும் 6.05.2012 தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளதால் முறைப்படி தேர்தல் முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.பிரான்ஸ் நாட்டின் ஆட்சிக்குட்பட்ட பகுதி என்பதால் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இத் தீவுகளின் மீது அதிகாரம் கொண்டவர் ஆவார்.


பொலினேசியாவின் ஜனாதிபதி:
ஒஸ்கார் டெமறு(Oscar Temaru)
*இது 01.05.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.

பிரான்ஸ் நாட்டின் பொலினேசியத் தூதுவர்:
ரிச்சர்ட் டிடியர்(Richard Didier)
*இது 01.05.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.

மேற்படிதீவுகள் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட ஆண்டு:
1842

பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த பிரதேசம் எனும் உரிமை பெற்ற ஆண்டு:
1946

தீவுகள் ஒரு நிர்வாகத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு:
2004

பரப்பளவு:
4,167 சதுர கிலோ மீட்டர்கள்.
*மொத்தமாக உள்ள 700 இற்கும் மேற்பட்ட மேற்படி தீவுகளின் மொத்தப் பரப்பளவு யாழ்ப்பாணக் குடாநாட்டைப் போல நான்கு மடங்காகும்.

சனத்தொகை:
267,000 (2010 ஆம் ஆண்டு மதிப்பீடு)

நாணயம்:
பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த பிரதேசத்திற்கான பிராங்(CFP franc /XPF)


இணையத் தளக் குறியீடு:
.pf

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 689


இயற்கை வளங்கள்:
மரம், மீன், கோபால்ட்(உலோகம்)

விவசாய உற்பத்திகள்:
தேங்காய், வனிலா, காய்கறிகள், பழங்கள்.

பிரதான ஏற்றுமதிப் பொருள்:
சிப்பியில் இருந்து எடுக்கப்படும் முத்துக்கள். குறிப்பாக 'தஹிட்டியன்' கறுப்பு முத்துகள் உலகப் புகழ் வாய்ந்தவை.


செவ்வாய், ஏப்ரல் 24, 2012

நாடுகாண் பயணம் பிரெஞ்சுக் கயானா

நாட்டின் பெயர்:
பிரெஞ்சுக் கயானா (French Guiana)
*இது ஒரு சுதந்திர நாடு அல்ல. பிரான்ஸ் நாட்டின் ஆட்சிக்குள் உட்பட்டிருக்கும் கடல் கடந்த பிரதேசங்களுள் ஒன்று.பிரான்ஸ் நாட்டின் 28 வட்டாரங்களுள்(Departments) ஒன்றாகவும் கணிக்கப் படுகிறது.

*தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரேயொரு சுதந்திரமடையாத பிரதேசம்.


வேறு பெயர்கள்:
பிரெஞ்சு மொழியில் குய்அனே(Guyane)
*இதன் அண்டை நாடுகளாக 17 ஆம் நூற்றாண்டு தொடக்கம் ஸ்பானிஷ் கயானா(தற்போதைய பெயர் 'வெனிசுவெலாவில் கயானா பிராந்தியம்/Guayana Region in Venezuela), அதற்கு அடுத்ததாக பிரித்தானியக் கயானா(தற்போதைய பெயர் கயானா/Guiana), அதற்கு அடுத்ததாக நெதர்லாந்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஆனால் 1970 களில் விடுதலை அடைந்த டச்சுக் கயானாவும்(தற்போதைய பெயர் சூரினாம்/Suriname) அமைந்துள்ளன.  


அமைவிடம்:
தென் அமெரிக்கா(வட அத்திலாந்திக் சமுத்திரக் கரையோரம்) 


எல்லைகள்:
தெற்கு மற்றும் கிழக்கில் - பிரேசில் 
மேற்கில் - சூரினாம் 


ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்கும் நாடு:
பிரான்ஸ் 


தலைநகரம்:
கையேன்னே(Cayenne)


ஜனாதிபதி/அரசுத் தலைவர்:
ரொடெல்பே அலெக்ஸாண்ட்ரே(Rodolphe Alexandre)*இது 24.04.12 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


கடல் கடந்த பிரதேசத்திற்கான ஆளுநர்:
அலெயின் டீன் லியோங்(Alain Tien-Liong)*இது 24.04.12 அன்று உள்ள நிலவரம் ஆகும்.

பரப்பளவு:
83,534 சதுர கிலோ மீட்டர்கள் 
*இது இலங்கையை விடவும் பரப்பளவில் பெரிய பிரதேசமாக இருப்பினும் சுதந்திர நாடாக இல்லாமல் பிரான்ஸ் நாட்டின் ஆட்சிக்குள் உள்ளது.


சனத்தொகை:
217,000 (2009 மதிப்பீடு)
*இலங்கையை விடவும் மிகப்பெரிய நிலப் பிரதேசமாக இருப்பினும் சனத்தொகை சுமாராக இரண்டு லட்சம் மட்டுமே. உலகில் சனத்தொகை அடர்த்தி மிகவும் குறைவான நாடுகள்/பிரதேசங்கள் வரிசையில் முன்னணியில் உள்ளது. சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 2.6 பேர் ஆகும்.


மொழிகள்:
பிரதான மொழி பிரெஞ்சு, அதனை விடவும் நூற்றுக் கணக்கான பிரதேச மொழிகள் அங்கீகரிக்கப் படாமல் உள்ளன.

கல்வியறிவு:
83%

ஆயுட்காலம்:
ஆண்கள் 74 வருடங்கள்  
பெண்கள் 81 வருடங்கள்

சமயம்:
ரோமன் கத்தோலிக்கம்


இனங்கள்:
கறுப்பர் அல்லது முலாட்டோக்கள் 66%
வெள்ளையர் 12%
கிழக்கிந்தியர், சீனர், அமேர் இந்தியர் 12%
ஏனையோர் 10%

இயற்கை வளங்கள்:
போக்ஸிட், நியோபியம், தந்தாலம்,பெட்ரோலியம், களிமண்(பாத்திரங்கள் செய்யப் பயன்படும் களிமண்), தங்கம்(பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டு விட்டது), மரம், மீன்.

விவசாய உற்பத்திகள்:
சோளம், அரசி, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு, கொக்கோ, காய்கறிகள், வாழைப்பழம், ஆடு, மாடு, பன்றி, கோழி.
ஏற்றுமதிகள்:
இறால், மீன், மரம், தங்கம், ரம்(மதுபானம்), துணிகள், வாசனைத் திரவியங்கள்.

தொழிற்துறைகள்:
கட்டிடங்கள் கட்டுதல், இறால், மீன் பதப்படுத்தி ஏற்றுமதி செய்தல், காடுசார்ந்த உழைப்பு, மதுபானம் தயாரிப்பு(ரம்), தங்கம் தோண்டி எடுத்தல்(தங்கச் சுரங்கம்)

அடிக்கடி நிகழும் இயற்கை அனர்த்தங்கள்:
இடியுடன் கூடிய புயல். கடும் மழை, வெள்ளப் பெருக்கு.

புதன், ஏப்ரல் 04, 2012

நாடுகாண் பயணம் - பிரான்சு. நேற்றைய தொடர்ச்சி...

நாட்டின் பெயர்:
பிரான்ஸ்(France)


தலைநகரம்:
பாரீஸ் (Paris)


அலுவலக மொழி:
பிரெஞ்சு(French)


ஆட்சி முறை:
ஒற்றையாட்சிக் குடியரசு 


ஜனாதிபதி:
நிக்கலஸ் சர்கோசி(Nicolas Sarkozy)*அமெரிக்க ஜனாதிபதி மற்றும் இலங்கை ஜனாதிபதியைப் போல நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்.
*இது 04.04.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


பிரதமர்:
பிராங்கொயிஸ் பிலொன்(Francois Fillon)*இது 04.04.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


பரப்பளவு:
674,843 சதுர கிலோ மீட்டர்கள்(உலகில் பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான தீவுகளின் நிலப் பரப்பையும் சேர்த்து வரும் பரப்பளவு இது. இலங்கையைப் போல் சுமாராக பத்து மடங்கும் தமிழ் நாட்டை விடவும் சுமாராக ஐந்து மடங்கு பெரிய நாடு)


சனத்தொகை:
65,350,000 (2012 மதிப்பீடு) * தமிழ் நாட்டை விடவும் பரப்பளவால் பல மடங்கு பெரிய நாடாக இருப்பினும் சனத்தொகை தமிழ்நாட்டை விடவும் குறைவாகும். தமிழ்நாட்டின் சனத்தொகை 7 கோடியே 20 லட்சம் ஆகும்.


இனங்கள்:
பிரான்சில்:-செல்டிக், லத்தீன்,டியூட்டேனியர், ஸ்லேவிக், வட ஆபிரிக்கர், இந்தோ சீனர், மற்றும் பாஸ்க் சிறுபான்மையினர்.
பிரான்சின் கடல் கடந்த பிரதேசங்களில்:-கறுப்பர், வெள்ளையர், முலேட்டோ இனத்தவர், கிழக்கு இந்தியர், சீனர், அமெர் இந்தியர்.


மொழிகள்:
பிரான்சில் நூற்றுக்கு நூறு வீதம் பிரெஞ்சு மொழி(சிறிய மாற்றங்களுடன் கூடிய வட்டார மொழிகளுடன்)
கடல் கடந்த பிரதேசங்களில்:-பிரெஞ்சு, கிரியோலி, படோயிஸ்,மஹோரியன்(பிரதேச வழக்குடன் கூடிய ஸ்வாஹிலி)

சமயங்கள்:
பிரான்சில்- ரோமன் கத்தோலிக்கம்88%, புரட்டஸ்தாந்துகள்2%, யூதர்1%, முஸ்லிம்கள்5% ஏனையோர் 4%
கடல் கடந்த பிரதேசங்களில்- ரோமன் கத்தோலிக்கர்,புரட்டஸ்தாந்துகள், இந்துக்கள், முஸ்லீம்கள், புத்த சமயம், பகான்.

நாணயம்:
யூரோ 


இணையத் தளக் குறியீடு:
.fr


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 33 (பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த பிரதேசங்களுக்குத் தனித்தனியே சர்வதேசத் தொலைபேசிக் குறியீடுகள் உள்ளன)


வேலையில்லாத் திண்டாட்டம்:
9%(2011 மதிப்பீடு)


வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர்:
6,2%


இயற்கை வளங்கள்:
நிலக்கரி, இரும்பு, ஈயம், பொக்சைட், ஸிங், யுரேனியம், ஆர்சனிக், அன்டிமோனி, பொட்டாஷ், பெல்ட்ஸ்பார், புளோரைட், ஜிப்சம், மரம், மீன்.


விவசாய உற்பத்திகள் மற்றும் பண்ணை உற்பத்திகள்:
கோதுமை, தானியங்கள், சீனிக் கிழங்குகள், உருளைக் கிழங்கு, திராட்சை, மாட்டிறைச்சி, பால் மற்றும் பால் பொருட்கள், மீன்.


தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
இயந்திரங்கள், இரசாயனப் பொருட்கள், வாகனங்கள், உலோகங்கள், விமானங்கள், மின்சார உபகரணங்கள்(எலெக்ட்ரானிக்), துணி வகைகள், உணவுகள் பதனிடல்.


பெரிய அளவில் வருமானம் தரும் ஏனைய தொழிற்துறை:
சுற்றுலாத்துறை. 
*****கடந்த 2007 ஆம் ஆண்டுவரை உலகில் அதிக சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடாக அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் பிரான்சும் இருந்தன. ஆனால் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் சுற்றுலாப் பயணிகளின் வரவில் பிரான்ஸ் முதலிடத்தை வகிக்கின்றது. 2007 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியே 19 லட்சமாகும். இரண்டாவது இடத்தை ஸ்பெயின் பெற்றுக் கொண்டது. ஸ்பெயின் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 கோடியே 85 லட்சம் பயணிகள் ஆகும். அமெரிக்கா மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. அமெரிக்காவுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 கோடியே 11 லட்சம் ஆகும்.


ஏற்றுமதிகள்:
இயந்திரங்கள், வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்கள், விமானங்கள், பிளாஸ்டிக், இரசாயனங்கள், மருந்து மற்றும் மாத்திரைகள், இரும்பு, உருக்கு, மது பானங்கள் விசேடமாக திராட்சை இரசம்(வைன்), மற்றும் மின்சாரம்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • உலக மொழிகளில் பிரெஞ்சு மொழிக்கு சில சிறப்புக்கள் உள்ளன. உலக மொழிகளில் ஒரு நிமிடத்தில் அதி வேகமாக பல வார்த்தைகள் பேசக் கூடிய மொழியில் முதலாமிடத்தில் இருப்பது பிரெஞ்சு மொழி ஆகும். இருப்பினும் உலக மொழிகளில் கற்பவர்களுக்கு மிகவும் கடினமான மொழியும் பிரெஞ்சு மொழியே ஆகும்.உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் பிரெஞ்சு மொழி 9 ஆவது இடத்தில் உள்ளது. முதாலாம் இடத்தில் சீன மொழியும்(மண்டரின்), இரண்டாம் இடத்தில் ஆங்கிலமும் மூன்றாம் இடத்தில் ஸ்பானிய மொழியும் இருப்பது நீங்கள் அறிந்ததே. உலகில் 12 கோடியே 80 லட்சம் மக்கள் பிரெஞ்சு மொழியில் பேச வல்லவர்களாக அல்லது பேசினால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளனர்.உலக மொழிகளில் பக்தியின் மொழி தமிழ் என்றால் தத்துவத்தின் மொழி ஜெர்மானியம் என்றால் வணிகத்தின் மொழி ஆங்கிலம் என்றால், காதலின் மொழி இத்தாலியம் என்றால் தூதின் மொழி 'பிரெஞ்சு' என்பர் மொழியியல் அறிஞர்கள். ஒரு நாட்டுத் தூதுவனுக்கு இருக்க வேண்டிய அறிவில் 'பிரெஞ்சு மொழி அறிவு' மிக முக்கியமானதாகும். ஐக்கிய நாடுகள் சபையில்(UNO) விவாதம் நடத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள 6 மொழிகளில் பிரெஞ்சு மொழி ஒன்றாகும்.
  • உலகில் அணு ஆயுதம் வைத்திருக்கும் எட்டு வல்லரசுகளில் பிரான்ஸ் நாடு ஒன்றாகும்.
  • ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படும் முக்கிய தீர்மானங்களை 'தடுப்பாணை' மூலம்(வீட்டோ அதிகாரத்தின் மூலம்) தடுக்கும் வல்லமை கொண்ட மொத்தம் ஐந்து நாடுகளில் பிரான்ஸ் நாடு ஒன்றாகும். ஏனைய நான்கு நாடுகளும் முறையே அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா ஆகும்.
  • பிரான்ஸ் என்ற பெயரைக் கேட்டதுமே நமது நினைவுக்கு வரும் பெயர் மாவீரன் நெப்போலியனின் பெயர் ஆகும். ஐரோப்பாவை மட்டுமல்லாது ஆபிரிக்க, ஆசியக் கண்டங்களையும் கலங்கடித்த மாவீரன் நெப்போலியன் போனபார்ட்(Napoleon Bonaparte) வாழ்ந்த காலம் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியும் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் ஆகும். இருப்பினும் பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் என்றென்றைக்கும் அழியாத புகழை மாவீரன் நெப்போலியன் சேர்த்துள்ளான். இங்கிலாந்து மற்றும் ரஷ்யப் படைகளால் சிறைப் பிடிக்கப் பட்ட நெப்போலியன் 'செயின்ட் ஹெலேனா' தீவில் தனிமைச் சிறையில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இவர் தனது காதலியாகிய ஜோஸபீனவுக்கு எழுதிய கடிதங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. இவர் தனது ஆட்சியில் பிரெஞ்சு மக்களை நோக்கி "கல்வியால் உலகை வெல்லுங்கள்" என்று அறை கூவல் விடுத்தார்.
  • உலகில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் பிரான்ஸ் நாடு முன்னணியில் உள்ளது.
  • இந்நாட்டின் பொருளாதாரம் ஐரோப்பாவின் 2 ஆவது இடத்திலும், உலகின் பொருளாதாரத்தில் 5 ஆவது இடத்திலும் உள்ளது. உலகில் வாங்கும் சக்தி உள்ள மக்களின் வரிசையில் பிரெஞ்சு மக்கள் 9 ஆவது இடத்தில் உள்ளனர்.
  • மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வாக உள்ள நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் நாடு முன்னணியில் உள்ளது.இந்நாட்டின் கல்வித் திட்டம் உலகப் பிரசித்தி பெற்றது.
  • உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணிப்பின்படி பிரெஞ்சு மக்களின் சுகாதாரம்/மருத்துவ வசதி போன்றவை முதலாவது இடத்தில் உள்ளன.
  • உலகின் 13 ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு.
  • ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்புறச் சூழலை மதிக்கின்ற/பாதுகாக்கின்ற நாடுகளில் முதலாம் இடத்தில் உள்ளது.உலகில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்கு ஒரு தனியான அமைச்சரையும், அமைச்சுப் பிரிவையும் அமைத்த நாடுகளில் முதலாவது நாடு பிரான்ஸ் ஆகும்.
  • சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் கோஷங்களின் கீழ் பிரெஞ்சு மக்கள் செய்த 17 ஆம் நூற்றாண்டுப் புரட்சி உலகப் புகழ் பெற்றது. பிரெஞ்சுப் புரட்சி எனும் பெயரைப் பெற்றுவிட்ட அந்தப் புரட்சியின் மூலம் பிரெஞ்சு மக்கள் மன்னர் ஆட்சியைத் தூக்கி எறிந்து மக்கள் ஆட்சியை நிறுவியதை அறிந்து மேலும் பல நாட்டு மக்கள் தமது நாட்டிலும் மக்கள் ஆட்சியை நிறுவினர்.உலக மக்களுக்கு 'பிரெஞ்சுப் புரட்சி' ஒரு முன்னுதாரணம் ஆகும்.
  • உலக அரங்கில் பிரெஞ்சுச் சமையற் கலையும், உணவுகளும் பிரசித்தம் மிக்கவை.
  • பிரெஞ்சுத் திரைப்படக் கலை, இசை, தத்துவம், இலக்கியம், சிற்பக் கலை,ஓவியம் போன்றவை உலகப் பிரசித்தி பெற்றவை. உலகப் புகழ் பெற்ற இத்தாலிய ஓவியரான லியர்னாடோ டாவின்சி தனது வாழ்நாளில் பெரும்பகுதியை பிரான்சில் கழித்தார். பிரான்சில் இவர் வரைந்த 'மோனலிசா' ஓவியம் உலகப் புகழ் வாய்ந்தது.
  • உலகிற்கு பல நூற்றுக் கணக்கான எழுத்தாளர்கள், தத்துவ மேதைகள், இசை அமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், ஓவியர்கள் போன்றோரைத் தந்த நாடு பிரான்ஸ் ஆகும்.
  • தமிழகத்தின் அண்டை மாநிலமாகிய புதுவை(பாண்டிச்சேரி) மாநிலம் நூறு வருடங்களுக்கு மேல் பிரெஞ்சுக் காரர்களின் ஆட்சியில் இருந்தது. தற்போதும் பிரெஞ்சு ஆட்சியின் அடையாளங்களை பாண்டிச்சேரியில் காணலாம். பாண்டிச்சேரி மாநிலம் பிரான்ஸ் நாட்டுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.புதுவை மாநில மக்களில் பெரும் பகுதியினர் பிரெஞ்சு மொழியில் பேசும் வல்லமை கொண்டுள்ளனர்.
  • பிரான்ஸ் நாட்டின் ரியூனியன் தீவு மற்றும் பிரான்ஸ் நாடு முழுவதுமாக சுமார் 750,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.மேற்படி தகவலுக்காக அந்திமாலை இணையம் திரு.மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கும்,டெல்லித் தமிழ்ச் சங்கத்திற்கும், 'காற்று வெளி' இதழுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
பிரான்ஸ் நாட்டிற்குச் சொந்தமான செயின்ட் மார்ட்டீன் தீவில் எயார் பிரான்ஸ் விமானம் மிகவும் தாழ்வாகத் தரை இறங்கும் காட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக