பக்கங்கள்

வெள்ளி, 4 ஜனவரி, 2013

அலை பேசி கொலை பேசி ஆக வேண்டாமே....



                இந்த நவீன தொழில் நுட்பத்தில் தொலைபேசி தொல்லை பேசி ஆகிப்போனது நாம் அறிந்ததே. தொலைபேசி வீட்டில் இருந்தவரை பிரச்சனைகள் வெகு குறைவாகவே இருந்தது. அதில் நடக்கும் உரையாடல்களும் குடும்ப உறுப்பினர்களின் மத்தியிலே நடப்பதால் அதில் ஒரு வெளிப்படைத்தன்மையும் ஒருவித பாதுகாப்பும் இருந்தது. அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனிமனித ஒழுக்கத்திற்கு அது எந்த விதத்திலும் கேடு விளைவிக்கவில்லை.


                      ஆனால் புதிய வரவான அலைபேசியில் எண்ணிலடங்கா வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் அவை தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது கேமிரா ஆனாலும் சரி. வாய்ஸ் ரெகார்டிங்க் ஆனாலும் சரி, வாயில் மாடுலேசன்( pitch shift) ஆனாலும் சரி
.
`                அது போல சாலையில் ந(க)டக்கும் போதும் அலைபேசியில் பேசிக்கொண்டே எதையும் சட்டை செய்யாமல் சென்று ஒழுங்காக வருபவனையும் தடுமாற செய்து விபத்திற்க்குள்ளாக்குவது , வாகனகள் ஓட்டும் போது பேசிக்கொண்டே ஒரு பக்கத்தில் ஸ்ட்ரோக் வந்தவனைப்போல் தலையை சரித்து வண்டி ஓட்டுவதும் கடைசியில் வண்டியையும் பேலன்ஸ் பண்ண முடியாமல் போனையும் காப்பாற்ற முடியாமல் சிலசமயம் தன்னையே காப்பாற்ற முடியாமல் தன் குடும்பத்தையே நிர்கதியாக்கிவிட்டுபோய் சேருவது மிகக்கொடுமையானது.


                 சமீபத்தில் ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவர் புகைவண்டி பாதையை கடக்க முயன்றபோது மற்றவர்கள் எவ்வளவு சத்தம்போட்டும் அதை கேட்காமல் பேச்சு கவனத்திலேயே சென்றதால் தொடர் வண்டியில் அடிப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டார். கடைசியில் அவர் உயிரை எடுக்க காரணமாக இருந்த அலை பேசிதான் அவரை அடையாளம் காட்டியது.


               ஆனால் சில கொலையாளிகளையும், குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க அலைபேசி உதவிவருவது ஒரு எதிர்பாராத நன்மை ஆகும். மற்றபடி நன்மைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து வசதிகளும் அதிகமாக தவறாகவே பயன்படுத்தப்படுகிறது.


                  மாணவிகளின் கையில் அலைபேசி ஊகிக்க முடியாத பிரச்சனைகளை உண்டாக்கிவிட்டு அவர்கள் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடுவதையும் காணமுடிகிறது. பெற்றோர் எதற்க்காக அதை அனுமதித்தார்களோ அதைத்தவிர்த்து அனைத்தும் நடைபெறுவதை தடுக்கமுடியாத நிலையிலேயே பெற்றோர்கள் உள்ளனர்.


                 மாணவர்கள் அதிகமாக கடலை போடுவதற்க்கும், தன் காதலிகளுக்கு ரீசார்ஜ் செய்வதற்க்குமே சமயம் போதாமல் போய்விடுகிறது. இப்படிதான் ஒரு காதலனுக்கு ஒரு ஆசை (வேண்டாத ஆசை தான் ) தன் காதலி தன் பெயரை எப்படி அவள் அலை பேசியில் வைத்திருப்பாள் என பார்க்க விரும்பினான். ஒரு நாள் அவள் இல்லாத போது அவளது அலைபேசியில் பார்த்த போது அவன் தலையில் இடி விழுந்தது. அவள் கொடுத்திருந்த பெயர் ”ரீ சார்ஜ் அண்ணா”. இப்படியெல்லாம் அனுபவப்பட்ட ஆண்கள் தான் கடையில் மிகவும் தெளிவடைந்து விடுகிறார்கள்
                  
                   ஒரு மனைவி தன் கணவனிடம் உங்களுக்கு ஏற்கனவே” ராணி” என்று ஒரு மனைவி இருப்பதை ஏன் என்னிடம் மறைத்தீர்கள் என்று கேட்கிறாள். அதற்க்கு அவனோ நான் நம் திருமணத்திற்க்கு முன்பே சொல்லியிருக்கிறேன் அல்லவா உன்னை நான் ”ராணி மாதிரி” வைத்து காப்பாற்றுவேன் என்று.

krvijayan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக