பக்கங்கள்

வெள்ளி, 4 ஜனவரி, 2013

கோழி முட்டை சைவமா !! இன்னும் பல தகவல்கள்




கால்நடைகள் மூலம் நமக்கு கிடைக்கிற உணவுப் பொருட்கள் பால்,முட்டை,இறைச்சி. இதுல பாலை சைவம்னு சொல்றோம்.இறைச்சியை அசைவம்னு முடிவு கட்டிட்டோம். ஆனா இந்த முட்டை மட்டும்  நடுவில் கிடந்து திண்டாடுது.

                        பால் தருவதால் பசு இறப்பது இல்லை. ஆனா இறைச்சி வேணும்னா ஒரு உயிரை கொன்னே ஆகணும் இல்லையா. அப்படி பார்க்கிறபோ முட்டைய சைவ உணவுன்னு சொல்லலாம். முட்டைக்குள்ளேருந்து குஞ்சு வர்ரத தடுத்துதானே முட்டையை சாப்பிடுறீங்க ! அப்படீன்னு நீங்க கேட்கலாம்.
                        
                        இப்போழுதெல்லாம் சேவல் சேராத, உயிர் கரு இல்லாத, அடை வைத்தாலும் குஞ்சு பொரிக்காத  முட்டைகள் தான் பண்ணையிலிருந்து வருது.
கருவுள்ள முட்டை வேணும்னாதான் சேவல் சேரணும். முட்டை உருவாகக் கோழியோட உடம்புல இருக்கிற சத்தே போதும்.
                         பாலை சைவ உணவாக கருதுபவர்கள், உயிர்க்கரு இல்லாத முட்டைகளை சைவ உணவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறாரே போதாதா ?. சைவம் அசைவம்கிறது மனதை பொறுத்த விஷயம்.நீங்களே யோசிச்சு முடிவெடுங்க. ஆனால் முட்டை ஒரு உயர்ந்த உணவு.
இனி முட்டையை பற்றிய சில பயனுள்ள தகவல்கள்

*  நாட்டுகோழி முட்டையில்தான் சத்து அதிகமா ?
       பொதுவா மஞ்சள் கரு நிற்ம் அடர்த்தியா இருந்தா அது சத்து நிறைந்ததுன்னு மக்கள் நினைக்குறாங்க.  சாந்தொபில்(xanthophyl) ன்னு சொல்ற ஒரு பொருள் தான் மஞ்சள் நிறத்தை கொடுக்குது. அதுக்கும் சத்துக்கும் சம்பந்தம் கிடையாது. பண்ணை கோழியில் நாம் கொடுக்கிற உணவுல எல்லா சத்தும் இருக்குது. ஆனா நிறம் கொடுக்கிற அந்த பொருள் குறைவா இருக்குது அவ்வளவுதான். நாட்டு கோழி முட்டையைவிட பண்ணை கோழி முட்டை அளவில் பெரிதாய் இருக்கும். அதனால் கூடுதல் சத்து கிடைக்கும்.

*   முட்டை கெட்டுபோய் விட்டதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது.?
               கேண்ட்லிங்  (candling) என்ற முறையில் ஒளிக்கதிர்களை செலுத்தி முட்டையின் தரம் அறியலாம்.
 அல்லது ஒரு பாத்திரத்தில் ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் உப்பை போட்டுக் கலக்கி  அதுல முட்டைய மெதுவா போடுங்க. நல்ல முட்டையா இருந்தா பாத்திரத்தின் அடியிலே இருக்கும் . பழைய முட்டையா இருந்தா பெருத்த பாகம் மேலே நிக்கும். அழுகிய முட்டைன்னா அப்படியே மிதக்கும்.
  முட்டையை பாதுகாக்க சில டிப்ஸ்

*   அழுக்கான முட்டையை வாங்காதீங்க. அப்படியே வாங்கினாலும் கழுவாமல் உடனேயே உபயேகப்படுதிடுங்க. கழுவினா முட்டையில் ஓட்டில் நிறைய நுண் துழைகள் உள்ளன. அதன் வழியாக  நுண்கிருமிகள் குறிப்பா சூடோமோனஸ் (pseudomonas)  நுழைஞ்சி முட்டையை கெடுத்திடும்.
*   முட்டையை அடுக்கி வைக்கும்போது குறுகிய பகுதி அடியில் வரும்படி வைங்க.

*  முட்டையை அவிக்கும்போது நீரில் கொஞ்சம்  உப்பு போட்டீங்கன்னா ஓடு உரிக்க எளிதா இருக்கும்.
*   வேகவச்ச முட்டைய உடனடியா பச்சை தண்ணீரில் போட்டா பச்சை வளையம் ஏற்படாது.
*    ஸ்பூனால அடிச்சு கலக்கும் போது நுரை எளிதா வந்துச்சினாலும் அது நல்ல முட்டை.
*     எலுமிச்சம் பழச்சாறு கொஞ்சம் ஊத்தி வேகவச்சா உடையாமல் அவிச்சி எடுக்கலாம்.
*     முட்டை அடிச்ச பாத்திரம் கவுச்சி அடிக்குதே என்ன பண்றதுங்கரீங்களா ?
 கவலைப்படாதீங்க ! எலுமிச்சம் பழச்சாறு அல்லது தோலால் துலக்கிப் பிறகு பாத்திரத்தை  சூடுபடுத்தினா வாடை போயிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக