பக்கங்கள்

சனி, 12 ஜனவரி, 2013

உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா?‏


இன்று குறிப்பாக சென்னை போன்ற நகரங்களிலும், ஏன் தற்போது கிராமங்களில் கூட இந்த பாழாய்ப் போன கொசுவை பற்றித் தான் எங்கும் பேச்சு. அன்றாட அரசியல் நிலவரங்கள் கூட அப்புறந்தான். எப்படி கொசுவிடமிருந்து தப்புவத
 
 
:
இன்று குறிப்பாக சென்னை போன்ற நகரங்களிலும், ஏன் தற்போது கிராமங்களில் கூட இந்த பாழாய்ப் போன கொசுவை பற்றித் தான்
எங்கும் பேச்சு. அன்றாட அரசியல் நிலவரங்கள் கூட அப்புறந்தான். எப்படி கொசுவிடமிருந்து தப்புவது என்பதே பெரிய பிரச்னையாக உள்ளது. நானும் எத்தனையோ வழி முறைகளை பதிவிட்டிருக்கிறேன். இந்த வழி முறைகளையும் தான் பின்பற்றிப் பார்ப்போமே! 
 
உங்க வீட்டில் கொசு அதிகமா இருக்கா எளிமையாக விரட்டலாம் வாங்க !!! 

நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர் . அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால் , சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு , நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது . அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட , வீட்டில் இருக்கும்

ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம் . இதனால் கொசுக்கள் அழிவதோடு , உடலும் ஆரோக்கியமாக இருக்கும் . அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா !!!
இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட ...
தேங்காய் நார் : தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் , வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது . எப்படியென்றால் தேங்காய் நார்கள் , வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு , வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது . எவ்வாறென்றால் , இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால் , அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும் . தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது .

ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து , மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி , அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து , சிறிது நேரம் கழித்து பாருங்கள் , ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது . இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா ? என்று கேட்கலாம் . இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது .

கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள் , சல்பர் . இந்த சல்பர் எங்கு இருந்தாலும் , கொசுக்கள் வெளியில் தான் இருக்கும் . கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது . ஆனால் , ஒரு பிரச்சனை என்னவென்றால் , கற்பூரத்தை காற்றில் வைத்தால் , அது உடனே கரைந்துவிடும் .

ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து , எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால் , கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது . இல்லையென்றால் , ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு , அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால் , அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது .

கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த , கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும் . அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில்(Liquid Bottle) உள்ள காலி டப்பாவில் , கெரோசினை விட்டு , அதில் சிறிது கற்பூரத்தை விட்டு , மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும் . இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு , உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும் .

நன்றி:கீற்று.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக