பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

துரோகம்

துரோகம்

"எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கவே கூடாது" இவ்வசனத்தை நாம் அடிகடி கேட்டிருப்போம் (அ) பேசியிருப்போம். எல்லோர் வாழ்விலும் ஒரு நீக்க முடியாத துரோகி இருக்கத்தான் செய்கிறார்கள்.காலம் துரோகத்தின் வலிமையை குறைத்துக் காட்டினாலும் அது நிகழும் காலத்தில் நாம் அனுபவிக்கும் வலி வார்த்தையில் அடங்காதது .ஏசு நாதரே துரோகத்தின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை..அப்புனிதருக்கே நிலைமை அவ்வாறன பிறகு நமக்கு துரோகம் நிகழ்வதில் ஆச்சர்யம் இல்லை . துரோகிகளை சற்றே ஆராய்ந்து பார்த்தோமானால் அவர்கள் நம் அன்புக்கு மிக நெருக்கமானவராகவே இருக்கின்றனர் . எங்கோ வானத்தில்
இருந்து வரும் ஒருத்தர் நமக்கு துரோகம் செய்ய வாய்ப்பு மிக மிக குறைவு தான் . என் வாழ்வில் நான் பல துரோகிகளையும் துரோகத்தையும் கண்டிருக்கிறேன் .சில நேரம் நானே சிலருக்கு துரோகம் செய்ததாய் உணர்ந்திருக்கிறேன்.


துரோகி யார்?...நாம் எதிர்பாக்காத நிலையில் நம் அருகிலே இருந்து கொண்டு நம்  ரகசியங்கள் ,அந்தரங்கள் வெளிப்படுத்துபவரே துரோகி. சில சமயம் நண்பர்கள் தான் மிக பெரிய துரோகியாக மாறுகின்றனர் ..இன்றைய சமுதாயத்தில் "கள்ளக்காதல்' என்ற சொல் அதிகமா நாளிதழ்களில் காண்கிறோம் ..காதலிலே துரோகம் கலந்து விட்டது
என்பதை தானே நாம் உணர்கிறோம் . பொதுவாக நம்பிக்கைக்கு மாறாக நடக்கும் யாவரையும்  நாம் துரோகி என்று கூறி விடுகிறோம் ..


மன்னிப்பு என்ற மனிதத்துவம் கூட துரோகதிடன் நிறையவே யோசிக்கிறது ..இருந்தாலும் துரோகியை மன்னிப்பது அவரவர் மனநிலையை பொறுத்தது
"மன்னிபதால் இரண்டு நல்லவர்கள் உருவாகிறார்கள், ஒன்று மன்னிப்பவன்; இன்னொன்று மன்னிக்கப்படுபவன்"
நாம் முடிந்த வரை துரோகம் செய்யாமல் இருக்க பழகுவோம் ஏன்னென்றால் நாம் செய்யும் சிறு துரோகம் கூட பாதிக்கப்படுபவரின் வாழ்க்கை ஓட்டத்தையே மாற்றவல்லது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக