திங்கள், 25 பிப்ரவரி, 2013
சனி, 23 பிப்ரவரி, 2013
சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்
Posted on February 21, 2013
சொத்து
பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக
மட்டுமில்லாமல், அ
து நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய அளவுகோலாக
பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது.
.
புதன், 20 பிப்ரவரி, 2013
புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்!
புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்!
‘வருஷத்தின் 365 நாளுக்கும் ஏதோ ஒரு தினத்தைக் கொண்டாடிக்கிட்டு கடுப்பேத்தறாங்க மை லார்ட்’ என்பதுதான் இப்பப் பல பேரின் எண்ணமா இருக்கு. இயற்கையோட ஒன்றின வாழ்வும், இதயத்தில் சுரக்கிற நேசமுமா இருந்தப்ப எந்த நாளுக்கும் அவசியம் இருந்திருக்கல. ஆனா இப்ப?
‘உறவைக் கொண்டாடும் நாட்களை மேலை நாட்டுலருந்து இறக்குமதி செஞ்சு காசு பாக்குறாங்க வியாபாரிங்க’ என சிலபேர் அலுத்துக்கிற போது சரின்னே தோணுனாலும் இன்னொரு பக்கம் ‘இப்ப விடவோ அப்ப விடவோ’ன்னு நைஞ்சு கிடக்கிற உறவு இழைகளைப் பார்க்கையிலே அவற்றுக்கான தேவையும் வந்திடுச்சோன்னும் எண்ணம் ஏற்படுது.
‘உறவைக் கொண்டாடும் நாட்களை மேலை நாட்டுலருந்து இறக்குமதி செஞ்சு காசு பாக்குறாங்க வியாபாரிங்க’ என சிலபேர் அலுத்துக்கிற போது சரின்னே தோணுனாலும் இன்னொரு பக்கம் ‘இப்ப விடவோ அப்ப விடவோ’ன்னு நைஞ்சு கிடக்கிற உறவு இழைகளைப் பார்க்கையிலே அவற்றுக்கான தேவையும் வந்திடுச்சோன்னும் எண்ணம் ஏற்படுது.
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
பாலியல் வன்முறை
பாலியல் வன்முறை - எளிய தீர்வுகள் இல்லை ஃப்லேவியா ஏக்னஸ் தமிழில்: எத்திராஜ் அகிலன் பாலியல் வன்முறைச் சம்பவங்களைத் துணிச்சலாக வெளியில் சொல்லிப் பரிகாரம் தேட இன்றைய இளம் தலைமுறைக்கு அவருடைய போராட்டம் உந்துதலைத் தந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம் நடைபெறுவது இனிமேலும் சாத்தியமல்ல. அவருடைய மரணத்திற்காக ஒட்டுமொத்தமான இரங்கலை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகள், இயக்கங்களின் மீது இந்தப் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. பாலியல் வன்முறை: குற்றமும் தண்டனையும் க. திருநாவுக்கரசு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய நமது சமூகத்தின் புரிதல் என்ன என்பதையே இவை காட்டுகின்றன. நாடு கொந்தளித்துக்கொண்டிருந்த நிலையில் அந்த நிலைக்கு ஆளானதற்கு அந்தப் பெண்ணே காரணம் என்று சொல்லும் துணிவு யாருக்கும் வரவில்லை. ஆனாலும், திருமணமாகாத ஒரு பெண் ஓர் ஆண் நண்பனுடன் சினிமா பார்த்துவிட்டு இரவு ஒன்பதரை மணிக்குத் தனியாக வருவது தவறு எனப் பெரும்பாலான இந்தியர்கள் நினைத்திருப்பார்கள் என்பதை எளிதில் யூகிக்க முடியும். பாரதத்தில் வன்பாலுறவு கண்ணன் இந்தியாவில் வன்பாலுறவு ஒரு நவீனக் குற்றம்தான். காரணம் நம் பாரம்பரியத்தில் பெண்ணைப் புணர்வதற்கு அவளுடைய ஒப்புதல் அவசியம் என்று பார்க்கப்படவில்லை. பாலுறவை மறுக்கும் பெண்ணின் உரிமையை அங்கீகரிக்கும்போதே வன்பாலுறவு குற்றமாகிறது. இது காலனியாதிக்கத்திற்குப் பின்னர் இந்தியாவில் தோன்றிய ஒரு நவீனப் பார்வை. தேவை, பாலின சமத்துவம் பூமா சனத்குமார் கார்ப்பொரேட்டுகளின் வர்த்தகத்திற்கான விளம்பரங்களும் கார்ப்பொரேட்டாக வளர்ந்துவிட்ட திரை உலகமும் சமூகத்தில் நிலவும் ஆண்மையப் பெண் பாலியல்பை முதலீட்டியத் தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே கையாளுகின்றன. பாலியல்பை மிகையாக்குதல், பாலுறுப்புகளுடன் உடலின் பிற உறுப்புகளையும் பால்மயமாக்குதல் ஆகியவற்றின் மூலம் பெண் உடல் பாலியல்புக்குரியதாக மட்டுமே கட்டமைக்கப்படுகிறது. போர்னோகிராபி: மூர்க்கமாக நகரும் கைகள் தேவிபாரதி இன்றைய போர்னோகிராபி அதை வடிவமைப்பவர்களால் மேலிருந்து திணிக்கப்படுவதாக மட்டும் இருக்கவில்லை. வெளியிலிருந்து பலர் பங்களிக்கத் தொடங்கி யிருக்கிறார்கள். அவற்றில் இடம்பெறும் கதைகளைப் பற்றிக் கருத்துரையிடுகிறார்கள். தமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆசைகளை வெளியிடுகிறார்கள். பாலியல் குறித்த சந்தேகங்களுக்கு போர்னோகிராபி உலகத்தில் விடைதேடுகிறார்கள். |
சுகுமாரன் ஓவியங்கள்: பி. ஆர். ராஜன் உமா வரதராஜன் ஓவியம்: செல்வம் சென்ற இதழில் வெளியான உமா வரதராஜனின் இக்கவிதைகள் அச்சாக்கப் பிழை காரணமாக மீண்டும் இந்த இதழில் வெளியிடப்படுகிறது. - பொறுப்பாசிரியர் தனிமைக்கு எதிராக எழுதுதல் நேர்கண்டவர்: டேவிட் பார்ஸாமியான் ஆங்கிலம் வழி தமிழில்: தவ சஜிதரன் யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் யுத்தங்களைப் பற்றிக் கேள்விப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விடை கிட்டாத அதே கேள்வியை நான் எப்போதும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொள்கிறேன். ‘யார் ஆயுதங்களை விற்கிறார்கள்? இந்த மனித அவலத்திலிருந்து ஆதாயம் ஈட்டிக்கொள்வது யார்?’. இதற்கான பதிலை ஒருபோதும் ஊடகங்களில் கண்டடைந்ததில்லை. ஒரு யுத்தம் குறித்துக் கேள்விப்படும்போது நீங்கள் கேட்க வேண்டிய பிரதானமான கேள்விகள் இவைதாம். - எடுவார்டோ கலியானோ எலி மூஞ்சி அ. முத்துலிங்கம் ஓவியங்கள்: சுந்தரன். மு வாக்கு கொடுத்தபடியே 2030ஆம் வருடம் பிறந்த அன்று அவளுக்குப் புது அப்பா கிடைத்தார். ஒரு மீசைகூட வளர்ந்திருந்தது. கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். தன்மயியின் விடுமுறை ஜெயந்த் காய்கிணி கன்னடத்திலிருந்து தமிழில்: நஞ்சுண்டன் ஓவியங்கள்: செல்வம் குஷீ சித்தியைத் தவிர்த்து மற்றெல்லோருடைய கண்களிலும் கல்வி, ஒழுங்குகளின் ஆணை மிளிர்ந்துகொண்டிருந்ததைக் கவனித்த தன்மயிக்குச் சிரிப்பு வந்தது. குஷீ சித்தி மட்டும் பாசம் காட்டினாள். ஈரத்தலையை முந்தானையால் துடைத்துவிடுவாள். மதிப்புரை உப்பு நாய்கள் (நாவல்) காத்திரமான விளிம்புநிலை நாவல் க. காசிமாரியப்பன் வண்ணார் கிளர்ச்சி கோ. ரகுபதி ஒடுக்குகிறவர்களை நேரடியாக எதிர்த்துப் பேச இயலாததால் அவருடைய பொருட்கள்மீது நடத்தப்படும் போராட்டம் பதிலிப் போராட்டம். இது உடலோடு ஒட்டி உறவாடும் உடுப்பின் மீது நிகழ்த்தப்பட்டது. அதாவது, வண்ணார்கள் ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்வினையை ஒடுக்குமுறையாளரின் உடுப்பின் மீது காட்டினர். பதிவு: மூன்று நூல்கள் வெளியீடு இடிந்தகரை - கூடங்குளம், 31 டிசம்பர் 2012 ஜி.எஸ். தயாளன் பதிவு எனக்குக் கிடைத்த கௌரவம் பெருமாள்முருகன் பதிவு: ஆறு நூல்கள் வெளியீடு சென்னை, 5 ஜனவரி 2013 ஜெய்குமார் கடிதங்கள் தலையங்கம் |
kalachuvadu. thanks
திங்கள், 18 பிப்ரவரி, 2013
கடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்
M.ஷாமில் முஹம்மட்
இனமதவாத சிங்கள பெளத்த
கடும்போக்கு சக்திகள் இலங்கை முஸ்லிம் சமூகத்தை உளவியல் ரீதியில் பலவீனப் படுத்தி
தாம் அடையத்துடிக்கும் இலக்குகளை எட்டிவிட சில ஊடகங்களின் துணைகொண்டு
முஸ்லிம்களுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான பொய்களை புனைந்து முஸ்லிம் ,இஸ்லாமிய
எதிர்ப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது. இனமதவாத சிங்கள பெளத்த கடும்போக்கு
சக்திகள் முஸ்லிம் நிறுவங்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும்
எந்தவித ஆதாரங்களும் இன்றி
சோடிக்கப்பட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து அதை தளமாக கொண்டு நாட்டில் ஒரு பெரிய
அரசியல் சக்தியாக எழுந்து நிற்று சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை
அடக்கிவைக்க முற்படுகிறது.
-----(சமூக துரோகிகளை,அரசியல் வாதிகளின் உண்மை தோற்றத்தை அம்பலப்படுத்தும் தொடர் -ALL 11 chapters )---
அகதியான
போது ..................
--------------------------------------------------------------------------------------ரஹீம்ராஜி
------(சமூக துரோகிகளை,அரசியல் வாதிகளின் உண்மை தோற்றத்தை அம்பலப்படுத்தும் தொடர் -ALL 11 chapters )---
பாகம் 1
கடுமையான
ஷெல் சத்தத்துக்கும்
துப்பாக்கி
வேட்டுகளின்
இரைச்சலுக்கும்
மத்தியில் இன்னொரு
யுத்த களத்தை
பார்க்கக்கூடாது
என்று பல
குடும்பங்கள்
யாழ்ப்பாணத்தை
விட்டு தெற்கு
நோக்கி கிடைத்த
வழிகளில் பயணம்
செய்து கொண்டிருந்த
காலம் அது.
புலிகளின்
துப்பாக்கிகள்
ஒரு புறம் முழங்க
..இராணுவத்தின்
துப்பாக்கிகளும்
,ஹெலிகொப்டர்களும்
,விமானங்களும்
காதுகளை செவிடாக்கி
மரணத்தை மிக
அருகில் உணர்த்தும்
பொழுதுகளாக
இருந்தன அவை..
யுத்தத்தின் அந்த
இரைச்சல் உயரும்
போது எமது
வாய்களில் ஒலிக்கும்
யாஷீன் ஷூராவின்
சத்தமும் அழுகை
கலந்து உயர்ந்து
ஒலிக்கும் ..
இருபது வருடங்களின் பின் யாழ். சோனக தெரு (படங்கள்)
இருபது வருடங்களின் பின்
யாழ். சோனக தெரு (படங்கள்)
வடக்கு முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட அதே அக்டோபர் மாதம் இது.
1990 இல் துப்பாக்கி முனையில் மானமும்,உயிரும் தவிர அனைத்தையும்
பறிக்கப்பட்ட நிலையில் பேசத்தெரிந்த மிருகங்களால் செய்யப்பட்ட அட்டூழியத்தின் கவலை
மிக்க மாதம்.
ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013
பழங்களின் பயன்கள்
உலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்!

இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
`கிஸ்மிஸ் பழம்’ என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த கிஸ்மிஸ் பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. மேலும், விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
இனி, உலர் திராட்சையின் பயன்கள்!
* ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
*மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
வெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்
"நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. உன்னால் வெற்றியை அடைய முடியும். உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு. அதனை அடைய உழைப்பு முக்கியம். உழை. உழைத்து கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கு இருந்தால், நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்." இதுவே வெற்றியின் ரகசியம்.
தோல்வி என்பது நிரந்தரமல்ல தோழா.... Repost
தோல்வி என்பது நிரந்தரமல்ல தோழா.... Repost
கல்வி இறுதி ஆண்டு தேர்வுகளும், உயர் கல்வி பயில்வதற்கான நுழைவுத் தேர்வுகளும் என்று மாணவர்கள் தேர்வுப் பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். |
எந்த தேர்வாக இருந்தாலும் சரி, எப்படி
படித்திருந்தாலும், எந்த மாணவருக்கும் தோல்வி ஏற்படுவது சகஜம்தான். ஒரு சில
மாணவர்கள், தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மனம் துவண்டு தற்கொலை செய்து கொள்ளும்
அளவிற்குக் கூட போய்விடுவதுண்டு. இதற்கு மாணவர்களது பெற்றோரும் கூட ஒரு காரணமாக
அமைந்துவிடுவார்கள்.
ஆனால், எந்த தோல்வியும் துவண்டு
போவதற்காக அல்ல.. நமது வழியை மாற்றி, நம்மை ஒரு நல்ல லட்சியத்தை நோக்கி பயணிக்க
வைக்கலாம் என்பதை எடுத்துக் கூற பல வரலாறுகள் உள்ளன |
புதன், 13 பிப்ரவரி, 2013
யாரு உண்மையான தீவிரவாதி?
யாரு உண்மையான தீவிரவாதி?
Written By POPULARFRONTNELLAI on Tuesday, January 29, 2013 | 6:33 PM
தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உலகம் முழுக்க இம்மாதிரியான சம்பவங்களை நடத்தியவர்களை 'தவறாக வழிநடத்தப்பட்டவர்கள்' என்றே வரலாறு பதிகின்றது. அவர்கள் சார்ந்த கொள்கையை, மதத்தை காரணமாக காட்டியதில்லை. ஆனால் இஸ்லாம் என்று வரும்போது மட்டும், இஸ்லாம் சொல்லாத ஒன்றை சிலர் செய்யும் போது, அதற்கு மதச்சாயம் பூசி பார்க்கப்படுகின்றது.எல்லாருக்கும் உலகம் எடுத்த அளவுக்கோலை முஸ்லிம்கள் என்று சொல்லப்படுவர்கள் விசயத்திலும் இவ்வுலகம் கடைபிடித்திருக்குமானால் இப்பதிவிற்கு அவசியம் இருந்திருக்காது.
வியாழன், 7 பிப்ரவரி, 2013
ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் !
in அமெரிக்கா, பன்னாட்டு நிறுவனங்கள், புதிய கலாச்சாரம், மதம், மத்திய கிழக்கு by வினவு, February 7, 2013
சவூதி இளவரசரும், பின்லாடனும், முல்லா ஒமரும், கமல்ஹாசனுக்கு வெகு காலம்
முன்னதாகவே அமெரிக்காவுக்கு கைக்கூலி வேலை செய்திருக்கிறார்கள், செய்து
வருகிறார்கள். அவர்கள் எந்த ஆஸ்கர் விருதுக்கு ஆசைப்பட்டு இதனைச் செய்தார்கள்
?
“விசுவரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானதா இல்லையா?” என்ற கோணத்தில் மட்டுமே இப்பிரச்சினை குறித்த விவாதம் நடந்திருக்கிறது. அந்தப் படம் யாருக்கு ஆதரவானது என்பது குறித்த விவாதம் நடைபெறவில்லை. “இது அமெரிக்க ஆதரவுத் திரைப்படம்; ஆஸ்கர் விருதுக்காக அமெரிக்க கைக்கூலித்தனம் செய்திருக்கிறார் கமலஹாசன்” என்று சிலர் கூறியிருக்கிறார்கள். இந்தப் பதில் சராசரி முஸ்லிம் வாசகர்களை மேலோட்டமாக திருப்திப் படுத்தலாம்.
சவூதி இளவரசரும், பின்லாடனும், முல்லா ஒமரும், பாக் அதிபர்களும், கமலஹாசனுக்கு வெகு காலம் முன்னதாகவே அமெரிக்காவுக்கு கைக்கூலி வேலை செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். அவர்கள் எந்த ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்பட்டு இதனைச் செய்தார்கள் என்ற கேள்விக்கு விடைகாண இக்கட்டுரை உதவும்.
சனி, 2 பிப்ரவரி, 2013
சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த இளவரசர்
[ புதன்கிழமை, 30 சனவரி, 2013, ] | ||
பள்ளி சிறுமிக்காக தெருவோரத்தில் அமர்ந்திருந்த அபுதாபி இளவரசரால்
பரபரப்பு ஏற்பட்டது.
அபுதாபியின் இளவரசரும், இராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத்
அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர், செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த இளவரசர் உடனே காரை விட்டு இறங்கி சிறுமியிடம், ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய்? என கேட்டார். அதற்கு அச்சிறும், எனது தந்தை அழைத்து செல்ல இன்னும் வரவில்லை, அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிலளித்தார். உடனே, தனது காரில் இறக்கிவிடுவதாக இளவரசர் கூறினார், அதற்கு சிறுமியே முன்பின் தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது என தன் தந்தை தெரிவித்ததாக கூறியுள்ளார். உடனே உதவியாளர் அச்சிறுமியிடம், இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமி, அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார். இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர். viyapu. thanks |
வெள்ளி, 1 பிப்ரவரி, 2013
சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாது..!
சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாது..!
பிப்ரவரி 1, 2013 இல் 6:06 முப (சிறுகதை)
-
இந்தியத் தாய்நாட்டின் செல்லமகள், இந்நாட்டின் இளவரசி,
நாலு கயவர்களிடம் சிக்கிக் கொண்டாள். வேளைகெட்ட வேளை
அது.
-
தனியாக இப்படிப் பறப்பட்டு வந்ததுக்கு அசட்டுத் துணிச்சல்
அல்ல காரணம்; அந்தப் போக்காளியான காந்திக் கிழவன் சொன்ன
ஒரு வார்த்தைதான்:
-
“உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை தங்க நகைகள் பூட்டிக்
கொண்டு எந்தவித சேதாரமும் இல்லாமல் ஒரு பெண்மணி தன்னந
தனியாக வெளியே போய்த் திரும்ப வந்துவிட்டாள் என்றால் நாம்
சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பொருள்.’ ஆண்டுகள்
அறுபதுக்கும் மேலாகி விட்டபடியினால் இனிமேல் பயமில்லை
என்று நினைத்து வீட்டை விட்டு வெளியேறி பரீட்சை பார்க்க
நினைத்தாள் நம் இளவரசி.
-
இதுக்கும் அவள் உடம்பில் குன்னிமுத்து அளவு தங்க நகை போட்டுக்
கொண்டிருக்கவில்லை.
-
ஊர் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளை. போக்கிரிகள்
விழித்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் அவள் கால் வைத்ததுதான்
தாமதம்; செந்தூக்காய்த் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்.
-
“டேய்… நான் யார் தெரியுமா’ என்று சொல்ல வாய் திறந்ததும்,
குதிரைக்குக் கடிவாளம் போடுவதுபோல் பேசமுடியாமல் துணியால்
வாயைக் கட்டிவிட்டார்கள்.
-
ஆக, பேச முடியலை; கூப்பாடும் போட முடியலை.
-
பூனை வாய்க் கிளி ஆனாள்.
-
பழம் உரித்துத் தின்று தொலியை வீசியதைப்போல் சாலையில்
வீசிவிட்டுப் போய் விட்டார்கள் அவளை. மயக்கம் தெளிந்து எழுந்து
விழுந்து தள்ளாடி நடந்தாள். ஊர் இன்னும் விழிக்கவில்லை.
-
பக்கத்தில் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது; அதைப் பார்த்து நடந்தாள்.
அது காவல்நிலையம்; விழித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
ஊர் தூங்கினாலும் அது தூங்காது. கதவு எப்போதும் திறந்தேயிருக்கும்;
அடையா நெடுங் கதவுகள் கொண்டது.
-
அந்த நேரங்கெட்ட நேரத்திலும் அங்கே ஒரு காவலன் துப்பாக்கி பிடித்து
நின்று கொண்டிருந்தான். இரவு பாரா.
-
புகார் சொன்னாள்.
-
எழுத்தர் வந்துவிடுவார்; அப்படி அந்த பெஞ்சில் உட்கார்.
-
அவனை கடந்து உள்ளே போய் பெஞ்சில் உட்கார்ந்தாள். கடந்து செல்லும்
போது, வாலிப வயசைக் கிளரும் ஒரு வியர்வை நெடி தெரிந்தது
அவனுக்கு. “துணைக்கு யாரும் வந்திருக்கிறார்களா?’ “இல்லை’
என்று தலை அசைத்தாள்.
-
அவள் உடம்பை அவன் பார்க்கும்விதம் சரியாகப்படவில்லை அவளுக்கு.
சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாதே என்று பட்டது.
-
குடிக்க தாகமாக இருந்தது. சுற்றிலும் பார்த்தாள். அவன் அவளையே
பார்த்தான். ஆடை கிழிந்த அலங்கோலமாகத் தெரிந்தாள்.
துப்பாக்கியை மூலையில் சாய்த்து விட்டு, கதவை மூடப்போனான்.
-
தப்பித்தோம் என்று ஜன்னல்வழியாக பாய்ந்து குதித்து ஓட்டம் பிடித்தாள்.
-
அது வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய கட்டிடம்: சன்னல்களுக்குக்
கம்பிகள் கிடையாது.
மறுகற்பழிப்பிலிருந்து தப்ப முடிந்தது நாட்டின் இளவரசியால்.
-
———————————————
- கி. ராஜநாராயணன்
நன்றி: குமுதம்
rammalar.wordpress thanks
இந்தியத் தாய்நாட்டின் செல்லமகள், இந்நாட்டின் இளவரசி,
நாலு கயவர்களிடம் சிக்கிக் கொண்டாள். வேளைகெட்ட வேளை
அது.
-
தனியாக இப்படிப் பறப்பட்டு வந்ததுக்கு அசட்டுத் துணிச்சல்
அல்ல காரணம்; அந்தப் போக்காளியான காந்திக் கிழவன் சொன்ன
ஒரு வார்த்தைதான்:
-
“உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை தங்க நகைகள் பூட்டிக்
கொண்டு எந்தவித சேதாரமும் இல்லாமல் ஒரு பெண்மணி தன்னந
தனியாக வெளியே போய்த் திரும்ப வந்துவிட்டாள் என்றால் நாம்
சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பொருள்.’ ஆண்டுகள்
அறுபதுக்கும் மேலாகி விட்டபடியினால் இனிமேல் பயமில்லை
என்று நினைத்து வீட்டை விட்டு வெளியேறி பரீட்சை பார்க்க
நினைத்தாள் நம் இளவரசி.
-
இதுக்கும் அவள் உடம்பில் குன்னிமுத்து அளவு தங்க நகை போட்டுக்
கொண்டிருக்கவில்லை.
-
ஊர் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளை. போக்கிரிகள்
விழித்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் அவள் கால் வைத்ததுதான்
தாமதம்; செந்தூக்காய்த் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள்.
-
“டேய்… நான் யார் தெரியுமா’ என்று சொல்ல வாய் திறந்ததும்,
குதிரைக்குக் கடிவாளம் போடுவதுபோல் பேசமுடியாமல் துணியால்
வாயைக் கட்டிவிட்டார்கள்.
-
ஆக, பேச முடியலை; கூப்பாடும் போட முடியலை.
-
பூனை வாய்க் கிளி ஆனாள்.
-
பழம் உரித்துத் தின்று தொலியை வீசியதைப்போல் சாலையில்
வீசிவிட்டுப் போய் விட்டார்கள் அவளை. மயக்கம் தெளிந்து எழுந்து
விழுந்து தள்ளாடி நடந்தாள். ஊர் இன்னும் விழிக்கவில்லை.
-
பக்கத்தில் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது; அதைப் பார்த்து நடந்தாள்.
அது காவல்நிலையம்; விழித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
ஊர் தூங்கினாலும் அது தூங்காது. கதவு எப்போதும் திறந்தேயிருக்கும்;
அடையா நெடுங் கதவுகள் கொண்டது.
-
அந்த நேரங்கெட்ட நேரத்திலும் அங்கே ஒரு காவலன் துப்பாக்கி பிடித்து
நின்று கொண்டிருந்தான். இரவு பாரா.
-
புகார் சொன்னாள்.
-
எழுத்தர் வந்துவிடுவார்; அப்படி அந்த பெஞ்சில் உட்கார்.
-
அவனை கடந்து உள்ளே போய் பெஞ்சில் உட்கார்ந்தாள். கடந்து செல்லும்
போது, வாலிப வயசைக் கிளரும் ஒரு வியர்வை நெடி தெரிந்தது
அவனுக்கு. “துணைக்கு யாரும் வந்திருக்கிறார்களா?’ “இல்லை’
என்று தலை அசைத்தாள்.
-
அவள் உடம்பை அவன் பார்க்கும்விதம் சரியாகப்படவில்லை அவளுக்கு.
சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்துவிடக் கூடாதே என்று பட்டது.
-
குடிக்க தாகமாக இருந்தது. சுற்றிலும் பார்த்தாள். அவன் அவளையே
பார்த்தான். ஆடை கிழிந்த அலங்கோலமாகத் தெரிந்தாள்.
துப்பாக்கியை மூலையில் சாய்த்து விட்டு, கதவை மூடப்போனான்.
-
தப்பித்தோம் என்று ஜன்னல்வழியாக பாய்ந்து குதித்து ஓட்டம் பிடித்தாள்.
-
அது வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய கட்டிடம்: சன்னல்களுக்குக்
கம்பிகள் கிடையாது.
மறுகற்பழிப்பிலிருந்து தப்ப முடிந்தது நாட்டின் இளவரசியால்.
-
———————————————
- கி. ராஜநாராயணன்
நன்றி: குமுதம்
rammalar.wordpress thanks
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)