பாலியல் வன்முறை - எளிய தீர்வுகள் இல்லை பாலியல் வன்முறைச் சம்பவங்களைத் துணிச்சலாக வெளியில் சொல்லிப் பரிகாரம் தேட இன்றைய இளம் தலைமுறைக்கு அவருடைய போராட்டம் உந்துதலைத் தந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம் நடைபெறுவது இனிமேலும் சாத்தியமல்ல. அவருடைய மரணத்திற்காக ஒட்டுமொத்தமான இரங்கலை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகள், இயக்கங்களின் மீது இந்தப் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. பாலியல் வன்முறை: குற்றமும் தண்டனையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய நமது சமூகத்தின் புரிதல் என்ன என்பதையே இவை காட்டுகின்றன. நாடு கொந்தளித்துக்கொண்டிருந்த நிலையில் அந்த நிலைக்கு ஆளானதற்கு அந்தப் பெண்ணே காரணம் என்று சொல்லும் துணிவு யாருக்கும் வரவில்லை. ஆனாலும், திருமணமாகாத ஒரு பெண் ஓர் ஆண் நண்பனுடன் சினிமா பார்த்துவிட்டு இரவு ஒன்பதரை மணிக்குத் தனியாக வருவது தவறு எனப் பெரும்பாலான இந்தியர்கள் நினைத்திருப்பார்கள் என்பதை எளிதில் யூகிக்க முடியும். பாரதத்தில் வன்பாலுறவு இந்தியாவில் வன்பாலுறவு ஒரு நவீனக் குற்றம்தான். காரணம் நம் பாரம்பரியத்தில் பெண்ணைப் புணர்வதற்கு அவளுடைய ஒப்புதல் அவசியம் என்று பார்க்கப்படவில்லை. பாலுறவை மறுக்கும் பெண்ணின் உரிமையை அங்கீகரிக்கும்போதே வன்பாலுறவு குற்றமாகிறது. இது காலனியாதிக்கத்திற்குப் பின்னர் இந்தியாவில் தோன்றிய ஒரு நவீனப் பார்வை. தேவை, பாலின சமத்துவம் கார்ப்பொரேட்டுகளின் வர்த்தகத்திற்கான விளம்பரங்களும் கார்ப்பொரேட்டாக வளர்ந்துவிட்ட திரை உலகமும் சமூகத்தில் நிலவும் ஆண்மையப் பெண் பாலியல்பை முதலீட்டியத் தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே கையாளுகின்றன. பாலியல்பை மிகையாக்குதல், பாலுறுப்புகளுடன் உடலின் பிற உறுப்புகளையும் பால்மயமாக்குதல் ஆகியவற்றின் மூலம் பெண் உடல் பாலியல்புக்குரியதாக மட்டுமே கட்டமைக்கப்படுகிறது. போர்னோகிராபி: மூர்க்கமாக நகரும் கைகள் இன்றைய போர்னோகிராபி அதை வடிவமைப்பவர்களால் மேலிருந்து திணிக்கப்படுவதாக மட்டும் இருக்கவில்லை. வெளியிலிருந்து பலர் பங்களிக்கத் தொடங்கி யிருக்கிறார்கள். அவற்றில் இடம்பெறும் கதைகளைப் பற்றிக் கருத்துரையிடுகிறார்கள். தமது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆசைகளை வெளியிடுகிறார்கள். பாலியல் குறித்த சந்தேகங்களுக்கு போர்னோகிராபி உலகத்தில் விடைதேடுகிறார்கள். |
சென்ற இதழில் வெளியான உமா வரதராஜனின் இக்கவிதைகள் அச்சாக்கப் பிழை காரணமாக மீண்டும் இந்த இதழில் வெளியிடப்படுகிறது. - பொறுப்பாசிரியர் தனிமைக்கு எதிராக எழுதுதல் யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் யுத்தங்களைப் பற்றிக் கேள்விப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விடை கிட்டாத அதே கேள்வியை நான் எப்போதும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொள்கிறேன். ‘யார் ஆயுதங்களை விற்கிறார்கள்? இந்த மனித அவலத்திலிருந்து ஆதாயம் ஈட்டிக்கொள்வது யார்?’. இதற்கான பதிலை ஒருபோதும் ஊடகங்களில் கண்டடைந்ததில்லை. ஒரு யுத்தம் குறித்துக் கேள்விப்படும்போது நீங்கள் கேட்க வேண்டிய பிரதானமான கேள்விகள் இவைதாம். - எடுவார்டோ கலியானோ எலி மூஞ்சி வாக்கு கொடுத்தபடியே 2030ஆம் வருடம் பிறந்த அன்று அவளுக்குப் புது அப்பா கிடைத்தார். ஒரு மீசைகூட வளர்ந்திருந்தது. கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள். தன்மயியின் விடுமுறை குஷீ சித்தியைத் தவிர்த்து மற்றெல்லோருடைய கண்களிலும் கல்வி, ஒழுங்குகளின் ஆணை மிளிர்ந்துகொண்டிருந்ததைக் கவனித்த தன்மயிக்குச் சிரிப்பு வந்தது. குஷீ சித்தி மட்டும் பாசம் காட்டினாள். ஈரத்தலையை முந்தானையால் துடைத்துவிடுவாள். மதிப்புரை உப்பு நாய்கள் (நாவல்) காத்திரமான விளிம்புநிலை நாவல் வண்ணார் கிளர்ச்சி ஒடுக்குகிறவர்களை நேரடியாக எதிர்த்துப் பேச இயலாததால் அவருடைய பொருட்கள்மீது நடத்தப்படும் போராட்டம் பதிலிப் போராட்டம். இது உடலோடு ஒட்டி உறவாடும் உடுப்பின் மீது நிகழ்த்தப்பட்டது. அதாவது, வண்ணார்கள் ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்வினையை ஒடுக்குமுறையாளரின் உடுப்பின் மீது காட்டினர். பதிவு: மூன்று நூல்கள் வெளியீடு இடிந்தகரை - கூடங்குளம், 31 டிசம்பர் 2012 பதிவு எனக்குக் கிடைத்த கௌரவம் பதிவு: ஆறு நூல்கள் வெளியீடு சென்னை, 5 ஜனவரி 2013 கடிதங்கள் தலையங்கம் |
kalachuvadu. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக